நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ்... தலையில்லாத உடலுக்கு சமம் -ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ் தலையில்லாத உடலுக்கு சமம் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நேரு குடும்பத்தின் தலைமையை பற்றி கேள்வி எழுப்பக்கூடியவர்கள் முதலில் தங்களுடைய தகுதி என்ன என்பதை ஆராய வேண்டும் என அவர் காட்டமாக கூறியுள்ளார்.

evks elangovan statement about congress president issue

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ், தலை இல்லாத உடலுக்குச் சமமாகும்.

மதவாத சக்திகளை எதிர்ப்பதற்கு நமது நாட்டுக்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் இன்றும் அடிப்படையாக இருப்பது நேரு குடும்பத்தின் அர்ப்பணிப்பாகும்,

நேரு குடும்பத்தின் தலைமையைப் பற்றி, கேள்வி எழுப்பும் சிலர், முதலில் அவர்களுடைய தகுதியை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

evks elangovan statement about congress president issue

சோனியா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் ராகுல் காந்தி செயல் தலைவராகவும், தொடர்ந்து செயல்பட்டு வழிகாட்ட வேண்டும் என்பதே என்னைப் போன்ற காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாகும்.

தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் நேரு குடும்பத்தின் தன்னலமற்ற சேவையே நமது மாபெரும் நாட்டையும் கட்சியையும் வழிநடத்த முடியும். இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+