கொரோனாவில் ஈவிகேஎஸ் இளங்கோவன்! இந்த நேரம் பார்த்து கேஎஸ் அழகிரி வைத்த ட்விஸ்ட்! சான்ஸே இல்லை!
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில் அவருக்கு முக்கியப் பொறுப்பை சுமத்திய கேஎஸ் அழகிரி.
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு விழாக் குழுத் தலைவர் பதவியை கொடுத்து ட்விஸ்ட் வைத்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி.
ஈவிகேஎஸ் இளங்கோவனால் மார்ச் 28ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் பேரணி துவக்க விழாவுக்கு செல்ல முடியாது என்பதை அறிந்தும் அவருக்கு விழாக் குழுத் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை தற்போதுள்ள சூழ்நிலையில் அவரால் பேரணி செல்லுகிற இடங்களில் எல்லாம் உற்சாகமான வரவேற்பு வழங்கவும், பேரணியில் பங்கு கொள்கிறவர்கள் தங்குவது உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவும் வாய்ப்பே இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக் கே.எஸ்.விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு
பெரியார் பங்கெடுத்து வெற்றி கண்ட வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் வருகிற மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி நடத்துவதென கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது. மார்ச் 30 அன்று நடைபெறுகிற தொடக்க விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பங்கெடுத்து சிறப்பிக்க இருக்கிறார்.

பெரியார்
இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் கேரள மாநில காங்கிரஸ் சார்பாக வருகிற மார்ச் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு நினைவு பேரணி நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பேரணியை நான் கொடியசைத்து தொடக்கி வைப்பதோடு, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஈ.வெ.கி.ச. இளங்கோவன் இப்பேரணிக்கு தலைமை வகித்து சிறப்பிக்க இருக்கிறார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோட்டில் தொடங்குகிற இந்நினைவுப் பேரணி மார்ச் 29 ஆம் தேதி பாலக்காடு வழியாக அன்று மாலை வைக்கம் சென்றடைகிறது. இந்த நினைவுப் பேரணி செல்லுகிற இடங்களில் எல்லாம் உற்சாகமான வரவேற்பு வழங்கவும், பேரணியில் பங்கு கொள்கிறவர்கள் தங்குவது உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

கே.எஸ்.அழகிரி
இக்குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நினைவுப் பேரணி மகத்தான வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி காங்கிரஸ் நண்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கே.எஸ்.அழகிரி அறிவித்திருக்கிறார். விழாவுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆகவே இன்னும் ஒரு வார காலம் ஆகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எப்படி சாத்தியம்
இந்தச் சூழலில் அவர் இருக்கும் நிலையில் அவர் எப்படி பேரணி செல்லுகிற இடங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகமான வரவேற்பு வழங்கவும், பேரணியில் பங்கு கொள்கிறவர்கள் தங்குவது உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications