யார் வேண்டுமானாலும் தலைவராகலாம்.. ஆனால் இளங்கோவன் மட்டும்.. திருநாவுக்கரசர் பளிச்!
காங்கிரஸ் தலைவராக ஈவிகேஎஸ் வரமாட்டார் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால், ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் தலைவராக வரவே மாட்டார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், தற்போதைய தலைவர் திருநாவுக்கரசருக்கும் வார்த்தை போர் நடந்து வருகிறது.
இரு தரப்பின் ஆதரவாளர்களும் இது சம்பந்தமாக நேரடியாகவே ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி கொண்டனர்.

பரபரப்பான சூழ்நிலை
தனித்தனியாக டெல்லி சென்று ராகுல் காந்தியிடம் புகாரும் அளித்துவிட்டு வந்தனர். இந்நிலையில் ராகுலின் அழைப்பை ஏற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லி சென்றிருக்கிறார். இதையடுத்து தமிழக காங்கிரசில் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பு
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்றும், இளங்கோவனுக்கு முக்கிய பொறுப்பு ஏதாவது தரப்படும் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் பேசினார்.

எல்லாரையும் திட்டுகிறார்
அப்போது ஈவிகேஎஸ் டெல்லி பயணம், புதிய தலைமை உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு திருநாவுக்கரசர் சொன்னதாவது: "ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை வசைபாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவர் என்னை மட்டுமல்ல, எல்லோரையுமே திட்டுகிறார். ப.சிதம்பரம், அவரது மனைவி, மகன், தங்கபாலு என பொறுப்பில் உள்ள அனைவரையுமே வசைபாடுகிறார்.

தலைவராக மாட்டார்
தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற போறேன் என்று சொல்லி ஓயாமல் டெல்லி போய் கொண்டு இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். முடிந்தால் முயற்சி செய்யட்டும். தலைவரை மாற்றிவிட்டு வரட்டும். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் தலைவராக வரவே மாட்டார்" என்றார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications