குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதி.. கார்த்தி சிதம்பரம்!
ஈவிகேஎஸ் இளங்கோவன் 50 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதேபோல், காங்கிரஸ் கட்சியை மையமாக வைத்து தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள், 25 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். அதில் இடைத்தேர்தலில், 82 ஆயிரத்து 138 ஆண் வாக்காளர்களும், 88 ஆயிரத்து 37 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர்.

வாக்கு எண்ணிக்கை
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் , தற்போது வரை 2 சுற்றுகள் முடிவடைந்து முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை
அதன்படி 11,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றிருக்கிறார். 2 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 19,062 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 6,245 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா 1,479 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர். தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் 123 வாக்குகள் பெற்றுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று தெரிவித்தார். தொடர்ந்து ராகுல் காந்தி மீண்டும் பாத யாத்திரை செல்ல உள்ளது பற்றிய கேள்விக்கு, இந்திய ஒற்றுமை யாத்திரையால் காங்கிரஸ் கட்சிக்கு பல பலன்கள் உள்ளது. அதன் மூலம் மக்களின் மனநிலையை காங்கிரஸ் கட்சி புரிந்துகொண்டுள்ளது. அதுபோல் இன்னொரு முயற்சியையும் ராகுல் காந்தி மேற்கொண்டால், கட்சிக்கு பலனளிக்கும் என்று தெரிவித்தார்.

மூன்றாவது அணி
தொடர்ந்து மூன்றாவது அணி பற்றி மு.க.ஸ்டாலின் பேச்சு குறித்த கேள்விக்கு, அரசியல் அனுபவமிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது முழுக்க முழுக்க உண்மை. காங்கிரஸ் கட்சியை மையமாக வைத்து தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்பதை வரவேற்கிறேன். அதுதான் அரசியல் சாதுர்யம். பாஜக முழுக்க முழுக்க பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அடித்தட்டு மக்களை பற்றி சிந்திக்கிறது என்று கூறினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications