பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் நிச்சயம் தோல்விதான்.. மாஜி எம்.எல்.ஏ. திருச்சி செளந்தரராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் நிச்சயம் தோல்விதான் கிடைக்கும் என்று அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த திருச்சி செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் தோல்வி நிச்சயம்.. மாஜி எம்.எல்.ஏ. திருச்சி செளந்தரராஜன் - வீடியோ

    அண்ணா திமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்தில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளராக இருந்தவர் திருச்சி செளந்தரராஜன். இவர் திருச்சி-2 தொகுதி (திருச்சி மேற்கு) எம்.எல்.ஏ.வாக 1977, 1980-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    நீண்டகாலத்துக்கு முன்பே அதிமுகவை விட்டு விலகிய போதும் அதிமுகவுக்கு பிரச்சனை ஏற்படுகிற போது தமது கருத்தை தெரிவித்து வருகிறார் திருச்சி செளந்தரராஜன். தற்போதைய சட்டசபை தேர்தல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் திருச்சி செளந்தரராஜன் கூறியதாவது:

    Ex AIADMK Senior leader Trichy Soundararajan opposes AIADMK-BJP Alliance

    அதிமுகவை எம்.ஜி.ஆருடன் இணைந்து உருவாக்கிய 12 பேரில் நானும் ஒருவன். நான் ஒருவன் மட்டுமே இன்னமும் இருக்கிறேன். மற்றவர்கள் அனைவரும் இயற்கை எய்திவிட்டனர். எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம் இன்று வரலாறு தெரியாதவர்களிடம் இருக்கிறது.

    Ex AIADMK Senior leader Trichy Soundararajan opposes AIADMK-BJP Alliance

    லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோற்றது. இந்த சட்டசபை தேர்தலிலும் எத்தகைய நிர்பந்தங்கள் இருந்தாலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கவே கூடாது. அப்படி அதிமுக கூட்டணி அமைத்தால் நிச்சயம் தோல்விதான் ஏற்படும்.

    அதிமுகவை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது. ஆகையால் இதனை நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறு திருச்சி செளந்தரராஜன் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+