தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ரேஸில் வென்றார் மாஜி எம்.பி. நாகை ஏ.கே.எஸ். விஜயன்!
சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த உடன் டெல்லி சிறப்பு பிரதிநிதி யார் என்கிற கேள்வி எழுந்தது. திமுகவின் சீனியர்கள் பலரது பெயர்களும் அடிபட்டது.

ஏ.கே.எஸ். விஜயன் நியமனம்
ஒருகட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் பெயரும் கூட இந்த ரேஸில் அடிபட்டது. இந்த நிலையில் தற்போது முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பதவிக்கு இணையானது
தமிழக தலைமை செயலாளர் இறையன்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பது மாநில அமைச்சர் பதவிக்கு இணையானது. தமிழக அரசுக்கும் டெல்லி மத்திய அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்படக் கூடியவர் சிறப்பு பிரதிநிதி.

ஹாட்ரிக் வெற்றி
1999, 2004, 2009 லோக்சபா தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற சீனியர் திமுக தலைவர் ஏ.கே.விஜயன். 2014 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த ஏ.கே.எஸ். விஜயனுக்கு, 2019 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.

திமுக விவசாய அணி செயலாளர்
திமுகவின் விவசாய அணியின் மாநில செயலாளராகவும் ஏ.கே.எஸ்.விஜயன் பொறுப்பு வகித்து வருகிறார். ஓராண்டு காலம் இந்த பதவியில் ஏ.கே.எஸ். விஜயன் நீடிப்பார்.

ஸ்டாலின் டெல்லி பயணம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 17-ந் தேதி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். முதல்வராக பதவி ஏற்ற பின்னர் டெல்லிக்கு முதல் முறையாக செல்கிறார் மு.க.ஸ்டாலின். டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம்












Click it and Unblock the Notifications