நாளைக்கேவா?.. அமைதியாக "மூவ்" ஆகும் மகேந்திரன்.. முக்கிய கட்சிக்கு மாற திட்டமா.. பின்னணி என்ன?
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வெளியேறிய மருத்துவர் மகேந்திரன் நாளை முக்கிய கட்சி ஒன்றில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அதன் முக்கிய நிர்வாகிகள் பலர் கடந்த சில தினங்களுக்கு முன் வரிசையாக வெளியேறினார்கள். அதன்படி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன், பொன்ராஜ், மற்ற சி.கே.குமரவேல், மௌரியா,பொறுப்பாளர்கள், சந்தோஷ்பாபு, முருகானந்தம் ஆகியோர் வெளியேறினார்கள்.
அதன்பின் தொடர்ச்சியாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரிசையாக வெளியேறினார்கள். இந்த நிலையில் மநீமவில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் முடிவில் அதன் தலைவர் கமல்ஹாசன் இருக்கிறார்.

வெளியேற்றம்
இது தொடர்பாக பேசிய மருத்துவர் மகேந்திரன், கட்சியில் ஜனநாயகம் இல்லை. அதனால் வெளியேறுகிறோம். கடந்த ஒன்றரை வருடமாகவே கட்சியில் ஜனநாயகம் இல்லை.தேர்தல் முடிவிற்கு பின் கமல்ஹாசன் மாறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் மாறவில்லை. கட்சியில் எங்கள் குரலுக்கு மதிப்பு இல்லை என்று கூறி மகேந்திரன் கட்சியில் இருந்து வெளியேறினார்.

என்ன
இந்த் நிலையில் மகேந்திரனுக்கு கொங்கு மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு இருப்பதால் இவரை உள்ளே இழுத்து போட சில கட்சிகள் முயன்று வந்தன. பண ரீதியாகவும், தேர்தல் பணிகளில் மக்களிடம் கவனம் பெற்றதாலும் மகேந்திரன் அதிக முக்கியத்துவம் பெற்றார். அதோடு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இவர் இரண்டாவது பெரிய தலைவராகவும் இருந்தது கவனிக்கப்பட்டது.

கொங்கு
இதனால் கொங்கு மாவட்டத்தில் இவரை களமிறக்க பெரிய அளவில் கட்சிகள் முயன்று வருகின்றன. மகேந்திரனை உள்ளே கொண்டு வந்தால் கட்சிக்கு நல்ல முகமாக இருப்பார் என்று திமுக நினைப்பதாக ஒரு பக்கம் ஏற்கனவே தகவல் வந்தது. கொங்கில் வளரும் முடிவில் திமுக இவரை உள்ளே இழுக்கும் என்றும் , திமுக இவரை அணுகி வருகிறது என்றும் கூறப்பட்டது. அதே சமயம் இவர் பாஜகவிற்கு நெருக்கமானவர் என்றும் செய்திகள் வந்தன.

பாஜக
சில பாஜக தலைவர்களுடன் பேசி வருகிறார் என்றும் மகேந்திரன் குறித்து தகவல்கள் வந்தன. இவரின் அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து நிறைய தகவல்கள் வெளியான நிலையில், மகேந்திரனின் உறவினர்கள் சிலர் அதிமுகவில் கொங்கு மாவட்டங்களில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. இவர் அதிமுகவில் ஐக்கியம் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டது.

எப்படி
இந்த நிலையில்தான் மகேந்திரன் நாளை முக்கிய கட்சி ஒன்றில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாளை அரசியல் முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை இவர் வெளியிட உள்ளார் என்கிறார்கள். தமிழ்நாட்டின் முக்கியமான கட்சி ஒன்றில் இவர் இணைவதற்கான டீல் முடிந்துவிட்டது.. நாளை இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications