அன்பு, மரியாதை இல்லை.. போஸ்டரில் பெயர் இல்லை.. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வெடித்த கோகுல இந்திரா!
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடிப்பதும் சீனியர் தலைவர்கள் முன்னிலையே இத்தகைய களேபரங்கள் அரங்கேறுவதும் தொடருகிறது. இந்த வரிசையில் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, தாம் கட்சியினரால் புறக்கணிக்கப்படுவதாக சென்னை ஆலோசனைக் கூட்டத்தில் புலம்பி வெடித்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கோகுல இந்திரா பேசியதாவது: நேர்மை என்பது எல்லா இடத்திலும் இருக்க வேண்டும்; என்னை பார்த்த உடனே நிறைய பேர் கும்பிடுவதற்கு பயப்படுகின்றனர்; என்னுடய போட்டோவை கார்னரில் போடுவதற்கு அச்சப்படுகின்றனர். இதை எல்லாம் நாம் தவிர்க்க வேண்டும்.

இப்போதும் சொல்கிறேன்.. யார் வேண்டுமானாலும் வேட்பாளராக வரலாம்; யாரை வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் முடிவு செய்யலாம்; சீட் வேண்டும் என்பதற்காக யாரும் கேட்கலாம். நான் யாருடைய மனதையும் புண்படும்படியாக செயல்படவில்லை.
தென் சென்னை பொறுப்பாளராக என்னை அறிவித்த பின்னர் நிறைய பேர் கூப்பிட்டனர்;பொதுச்செயலாளர் இட்ட கட்டளைக்கு மாறாக, மத்திய சென்னை தொகுதியிலோ, அண்ணா நகர் தொகுதி தேர்தல் பணிகளோ நான் தலையிட்டதே கிடையாது. நாம் மூக்கை நுழைத்து குழப்பம் வந்துவிடக் கூடாது; நாம் தலையிடுவதால் பிரச்சனைகள் வரக் கூடாது என்பதற்காக ரொம்ப ரொம்ப நாகரிகமாக ரொம்ப நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டேன். நான் யாருக்குமே தொந்தரவு கொடுப்பதும் இல்லை; நான் யாரிடமும் குரூப்பிசமும் செய்வது இல்லை.
எங்களைப் பார்த்தால்.. எங்களிடம் பேசினால்.. எங்கள் பெயர் நோட்டீசில் போட்டால் பதவி பறிபோய்விடும் என்ற நிலைமைகள் மாற வேண்டும். நீங்கள் எல்லாம் பல்வேறு பதவிகளில் பல்லாண்டு இருந்து சிறப்பாக வாழ வேண்டும் என்பதுதான் என் வாழ்த்து. தென் சென்னையில் 4 மாவட்ட செயலாளர்களுடன் பணியாற்றினேன்.. என்னால் உங்களுக்கு ஏதாவது ஒரு இடையூறு வந்ததா? என்னால் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு இருந்ததா?
யார் வேட்பாளர் என்பதை முடிவு செய்வது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். அது எனக்கு நன்றாக தெளிவாகவே தெரியும். நான் தேர்தலில் சீட் வாங்குவதற்காக இல்லை. எப்போதும் வீட்டில் அன்பையும் மரியாதையையும்தான் எதிர்பார்ப்பார்கள். அப்படி எதிர்பார்க்கிற நிலையில் என் பெயரை போடக் கூடாது; போஸ்டரில் அவங்க பெயரே வந்துவிடக் கூடாது.. என நினைக்கிறார்கள்.. இந்த கூவத்தின் கரையோர வெள்ளத்தில் கழுத்தளவு தண்ணீரில் உங்களோடு உங்களாக நின்ற என்னுடைய பெயரை போடுவதற்கு உங்களால் எப்படி மறக்க முடிகிறது? அப்படி என்ன நிர்பந்தம் உங்களுக்கு? தம்பி ஹேமந்த், தம்பி குப்பனுக்கு என்ன நிர்பந்தம்? நீங்கதானே வட்டச் செயலாளர்.. இவ்வாறு குமுறலை வெளிப்படுத்தினார் கோகுல இந்திரா.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications