"பணத்திமிர்.. ஆணவம்.." பொன்முடி வீட்டில் ரெய்டு! உண்மை காரணம் என்ன.. ஜெயக்குமார் பரபர! என்ன சொன்னார்
சென்னை: திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி வீட்டில் இன்று அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதல் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது.
அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். மத்திய படைகளின் பாதுகாப்புடன் இந்த ரெய்ட் நடந்து வருகிறது.

இன்று காலை காலை 7 மணியளவில் தொடங்கிய இந்த ரெய்டு, பல இடங்களில் தொடர்ந்து வருகிறது. இந்த சோதனைக்கு என்ன காரணம் என்று என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேநேரம், பொன்முடி வீட்டில் நடத்தப்படும் இந்த ரெய்டிற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் மத்திய பாஜகவின் முயற்சி இது என்றே காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் சாடியுள்ளன.
ஜெயக்குமார்: இதற்கிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த ரெய்டு குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "அமலாக்கத் துறையாக இருந்தாலும் சரி, வருமான வரித்துறையாக இருந்தாலும் சரி முகாந்திரம் அல்லது ஆதாரம் கிடைத்தால் மட்டுமே சோதனை செய்வார்கள்.
மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் கொள்ளத் தேவையில்லை. தவறு செய்யவில்லை என்றால் இதற்கெல்லாம் அஞ்சத் தேவையே இல்லை. தவறு செய்யவில்லை என்றால் திமுக ஏன் பதற்றப்பட வேண்டும். உடனடியாக பிடித்துச் சென்று தூக்கிலிட இப்போது நடப்பது ஒன்றும் மன்னராட்சி இல்லை.. நீதிமன்றம் என்று ஒன்று இருக்கிறது. உரிய விசாரணைக்குப் பின்னரே நடவடிக்கை எடுப்பார்கள். எனவே, இதைத் துணிச்சலாக எதிர்கொள்வதே சரியான நிலைப்பாடு.

கூச்சலிட வேண்டாம்: அதைவிட்டுவிட்டு சும்மா பழிவாங்குகிறார்கள். அப்படி இப்படி எனக் கூச்சலிடக்கூடாது. தனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போலப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுக எத்தனையோ பொய் வழக்குகளை எங்கள் மீது போட்டுள்ளது. அப்போதெல்லாம் நாங்கள் எங்கள் தோழமை கட்சிகளை விட்டு இப்படியெல்லாம் பேசச் சொன்னோமா... இதெல்லாம் எதற்காகச் செய்கிறார்கள்.
இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதாவது 2 லட்சம் டன் அளவுக்கு இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இவர்களைச் சட்டம் சும்மா விட்டுவிடும் என நினைக்கிறார்களா..
கடும் தாக்கு: திமிரின் உச்சம், ஆணவம், பண்ணையார் மனநிலை, பணக் கொழுப்பு, மக்களை அவமதிக்கும் அமைச்சர் பணக் கொழுப்பில் தானே இப்படிச் செய்கிறார். இதை அமலாக்கத் துறை வேடிக்கை பார்க்க மாட்டார்கள். தப்பு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் சென்று எதிர்கொள்ளுங்கள்.. இப்படி எதிர்க்கட்சிகளை வைத்து கூச்சல் போட வேண்டாம்" என்றார்.
கடந்த மாதம் தான் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இப்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் மற்றொரு மூத்த அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications