Exclusive: "அதிமுகவை சீண்டினால்.." பாஜகவிற்கு ஜெயக்குமார் எச்சரிக்கை! கூட்டணி தொடரும் என உறுதி
சென்னை: பாஜக கட்சியை வளர்க்க ஆயிரம் பேசிக் கொள்ளட்டும், அதிமுகவை சீண்டக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
பாஜக சட்டசபை எம்எல்ஏக்கள் குழு தலைவரான நயினார் நாகேந்திரன், நேற்று நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பேசுகையில், அதிமுகவில் ஆண்மையுடன் திமுக அரசை எதிர்த்து கேள்விகள் எழுப்பப்படுவது கிடையாது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலைதான் எதிர்த்து கேள்வி எழுப்புகிறார் என்று பேசியிருந்தார்.
இதனால் அதிமுக நிர்வாகிகள் பலரும் சமூக வலைத்தளங்களில் நயினாருக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு, நயினார் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி இதோ:

ஜெயக்குமார் சிறப்பு பேட்டி
கே: சட்டசபையில் அதிமுக எம்எல்ஏவின் செயல்பாடுகள் குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய விமர்சனம் குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: இந்த கருத்துகள் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என நயினார் நாகேந்திரன் ட்வீட் போட்டுள்ளார். கிட்டத்தட்ட அவர் மன்னிப்பு கோருவது மாதிரிதான். இதற்கு மேல் இதுபோன்ற கருத்துகள் வருவது என்பது கண்டனத்துக்குரிய விஷயமாகத்தான் நாங்கள் பார்க்க முடியும். பாஜக தலைவர்களும் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் இது போல் பேசாத வகையில் கண்டிக்க வேண்டும். எங்களுக்கு அது போல் பேச தெரியும். ஒரு வார்த்தைக்கு 100 வார்த்தை பேச முடியும். ஆனால் அவர்கள் பிரச்சினையை வளர்க்காமல் இருந்தால் நல்லது.

பாஜக மேலிடம் கண்டிப்பு
கே: நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துகளுக்கு தமிழக பாஜக தலைவர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லையே?
ப: நயினார் நாகேந்திரன் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாக ட்வீட் போட்டுள்ளாரே. அப்படியெனில் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் சொன்னதால் தானே அவர் ட்வீட்டில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவருக்கே புரியவில்லை போல
கே: என்ன சொல்ல வந்து அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்பதையே நயினார் நாகேந்திரன் சொல்லவில்லையே?
ப: அவர் என்ன சொன்னார் என்பது அவருக்கே புரியவில்லை (சிரிக்கிறார்..). எனவே அரசியலில் கூட்டணி தர்மம் உள்ளது தோழமை தர்மம் உள்ளது. அதை பாதுகாக்க வேண்டியது நல்ல விஷயம்.

சீண்டி பார்க்காதீர்கள்
கே: அதிமுக எதிர்க்கட்சியே இல்லை என சொல்லியுள்ளாரே , சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்களுடைய செயல்பாடுகள் அதிகரிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?
ப: 1972 ஆம் ஆண்டு கருணாநிதியை எதிர்த்து கட்சி அமைத்து 1977 இல் ஆட்சியை பிடித்தது எங்கள் அதிமுக. அதே போல் ஜெயலலிதாவும் திமுகவை எதிர்த்து அரசியல் செய்தார்கள். எனவே எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்தான் நாங்கள் அரசியல் செய்கிறோம். மக்கள் பிரச்சினைகளில் ஜனநாயக கடமையை சரியான முறையில் ஆற்றி வருகிறோம். எனவே பாஜக கட்சி வளர ஆயிரம் பேசிக் கொள்ளட்டும். அதற்காக எங்களை சீண்டி பார்ப்பது என்பது நல்ல விஷயம் கிடையாது. பதிலுக்கு நாங்களும் சீண்ட வேண்டிய நிலை ஏற்படும்.

மறுப்பு தெரிவித்து விட்டார்
கே: அதிமுக ஐடி விங்கிலிருந்து கண்டனங்கள் வந்த நிலையில் கட்சி தலைமையான ஓ.பன்னீர் செல்வமோ, எடப்பாடி பழனிச்சாமியோ கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
ப: நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கு அவரே மறுப்பு தெரிவித்துவிட்டார். ஒரு வேளை அவர் மறுப்பு தெரிவிக்காதிருந்தால் நீங்கள் சொல்லும் கேள்வி வரும். ஆனால் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றாலே அது மறுப்புதானே. மறுப்பு தெரிவித்தபிறகு மன்னிப்பதுதான் ஜனநாயகம்.

தவறு என்று அர்த்தம்
கே: சொல்லிய கருத்துகள் யாருடைய மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று கூட நயினார் நாகேந்திரன் சொல்லவில்லை, அதை எப்படி மன்னிப்பு என எடுத்துக் கொள்ள முடியும்?
ப: தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என சொன்னதால் அவர் சொன்னதே தவறு என்பதுதானே அர்த்தம்.

ஓபிஎஸ் அறிக்கை
கே: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் அதிமுக கண்டனம் தெரிவிக்கவில்லை என நயினார் நாகேந்திரன் கூறிய சில நேரங்களில் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளாரே அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
ப: மதத்தை யாரும் தொட்டு பார்க்கக் கூடாது. மதம் வேறு, அரசியல் வேறு, எங்கள் கட்சியை பொருத்தமட்டில் ஜாதி, மதம், இனம், மொழி என எல்லாவற்றையும் கடந்த கட்சி. எதுவாக இருந்தாலும் மன ஒற்றுமை இருக்க வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்தக் கூடாது. மாணவி மரணம் குறித்து எங்களுடயை நிலைப்பாடு என்பது அவர் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். அதுதான் எங்களுக்கு தெரிய வேண்டிய உண்மை. தெரிந்த பிறகு நாங்கள் பேசுகிறோம்.

அதிமுக ஊழலுக்கு எதிரான கட்சி
கே: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக ஆட்சியில் 100 நாட்கள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இப்போது நயினார் மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுகவை விமர்சிப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்
ப: ஊழலுக்கு அதிமுக எப்போதுமே உடந்தை இல்லை. ஆயிரக்கணக்கான கிராமங்களில் 100 நாள் வேலை நடக்கிறது. எங்கோ ஒன்றிரண்டு இடங்களில் தவறு நடந்திருக்கலாம். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் சிறைக்கு செல்வார்கள். இதற்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் அண்ணாமலை சொல்லியிருப்பார்.

பாஜக தலைமை சொல்ல வேண்டும்
கே: நயினார் நாகேந்திரனின் விமர்சனம் அவரது சொந்த கருத்தா இல்லை கட்சியின் கருத்தா எடுத்துக் கொள்கிறீர்களா?
ப: தமிழக பாஜக தலைவர்தான் அதை தெளிவுப்படுத்த வேண்டும்.

கூட்டணி தொடரும்
கே: அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா?
ப: ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை, சித்தாந்தம் வேறு. அது போல் எங்கள் கட்சி. தோழமை, கூட்டணி என்பது தேர்தலில் கடைபிடிக்க வேண்டியது. ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தலை போல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடர்கிறது. இவ்வாறு ஜெயக்குமார் பதிலளித்தார்.
-
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
வேல்முருகனுக்கு ஷாக்! கேபி முனுசாமி முன்னிலையில் அதிமுகவுக்கு ‘டைவ்’ அடித்த தவாகா வேட்பாளர்! -
“விஜய் பிரிக்கப்போவது எல்லாம் திருமாவளவன் கட்சி வாக்குகளைத்தான்.. NDAவுக்கு பாதிப்பில்லை” - எச்.ராஜா -
Sellur Raju: பாஜகவுடன்தானே? பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்தோம்? ஆவேசமான செல்லூர் ராஜு! -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்











Click it and Unblock the Notifications