பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது.. ரகசிய இடத்தில் விசாரணை
சென்னை: துணை நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
Recommended Video
துணை நடிகையும் மலேசியா தூதரக அதிகாரியுமான சாந்தினி, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு புகாரை கொடுத்தார். அதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார்.
மேலும் 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் மணிகண்டன் மீது சாந்தினி புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

யாரேன்றே தெரியாது
இந்த நிலையில் சாந்தினியை தனக்கு யாரென்றே தெரியாது என மணிகண்டன் தெரிவித்திருந்தார். மேலும் ஏதோ பணம் பறிக்கும் நோக்கில் தன் மீது சாந்தினி சேற்றை வாரி வீசிவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சாந்தினியின் வீட்டிற்கு மணிகண்டன் அடிக்கடி வந்து சென்றது அம்பலமானது.

பாதுகாப்பு அதிகாரிகள்
இதையடுத்து மணிகண்டனின் உதவியாளர், பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணைநடத்தப்பட்டது. இதனிடையே தலைமறைவாக இருந்த மணிகண்டனிடம் விசாரணை நடத்த இரு தனிப்படைகள் அமைத்து ராமநாதபுரத்தில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

நீதிபதிகள் தள்ளுபடி
எனினும் அவர் சிக்கவில்லை. தனக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார் இன்று காலை அவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

எப்படி
அவரை எங்கு வைத்து போலீஸார் கைது செய்தனர். அவரை எங்கு வைத்து விசாரணை நடத்திவருகிறார்கள் போன்ற விஷயங்கள் தெரியவில்லை. அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.
-
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications