அபார்ஷன் பண்ண சொன்னதே அவர்தான்.. டாக்டர் "ஒப்புதல்" வாக்குமூலம்.. சிக்கிய மாஜி மணிகண்டன்.. டிவிஸ்ட்!
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி வைத்த புகாரில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வசித்து வரும் நடிகை சாந்தினி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக பாலியல் புகார் அளித்து இருந்தார்.
தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்து இருந்தார். 3 முறை தன்னை கர்ப்பமாக்கி அதை கலைக்க வைத்ததாக சாந்தினி போலீசில் புகார் அளித்தார்.
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சாந்தினி நேரடியாக புகார் அளித்திருந்த நிலையில், மணிகண்டனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த 20 ஆம் தேதி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தற்போது புழல் சிறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார்.

மாஜி மணிகண்டன்
இந்த நிலையில் மாஜி மணிகண்டன் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மணிகண்டனுக்கு நெருக்கமாக இருந்த டாக்டர் ஒருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன்தான் சாந்தினியை அபார்ஷன் செய்ய வற்புறுத்தினார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டனின் மருத்துவர் பரபரப்பு வாக்கு மூலத்தை அளித்துள்ளார்.

வழக்கு
அதன்படி, மணிகண்டன்தான் சாந்தினிக்கு அபார்ஷன் செய்யும்படி கூறினார். முன்னாள் அமைச்சர் சொல்லித்தான் நான் சாந்தினிக்கு அபார்ஷன் செய்தேன். அவர்தான் சாந்தினியை என்னிடம் அழைத்து வந்தார். சாந்தினி என்னை பார்க்க வந்த போது மிகவும் அயற்சியான முகத்துடன் இருந்தார்.

வாக்குமூலம்
அதோடு சாந்தினி முகத்தில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. அவர் வலியில் இருந்தார். அப்போதுதான் அதற்கு மருந்து போட்டுவிட்டு, பின் கருக்கலைப்புக்கு மேற்கொண்டேன் என்று அந்த மருத்துவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். மாஜி மணிகண்டனுக்கு எதிரான மிக முக்கியமான ஆதாரமாக இந்த வாக்குமூலம் திரும்பி உள்ளது.

கஷ்டம்
இதனால் மணிகண்டன் வெளியே வருவது கஷ்டமாகி உள்ளது. மணிகண்டன் சாந்தினியை தென் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் அந்த ஹோட்டலில் சாந்தினியுடன் தங்கியதற்கான ரிசப்ஷன் சிசிடிவி கேமரா ஆதாரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
-
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications