சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக vs பாஜக.. பிடியை இறுக்கிய டெல்லி.. என்னங்க நடக்குது? பதறி போய் போனை போட்ட மாஜிக்கள்! ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அதிமுகவை சேர்ந்த மற்ற டாப் தலைகள் கடும் அச்சத்தில் இருப்பதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் தற்போது மறைமுக அதிமுக vs பாஜக மோதல் நிலவி வருகிறதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு நிறைய காரணங்களையும் அவர்கள் பட்டியலிட்டு உள்ளனர்.

காதலன் - காதலிக்கு இடையே ஏற்படும் வாக்குவாதங்கள் எப்படி மோதலாக மாறி பிரேக் அப்பில் முடியுமோ அப்படி ஒரு நிலைமைதான் அதிமுகவில் எடப்பாடி - பாஜக இடையிலான உறவில் ஏற்பட்டு உள்ளது.

இந்த மோதல் காரணமாக அதிமுக மாஜி தலைவர்கள் சிலர் கடும் அப்செட்டில் இருப்பதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி என்னதான் நடந்தது?

எடப்பாடி பழனிசாமியா? கவர்மெண்ட் ஹாஸ்பிடல்னா சாதாரணமா? சீறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்! என்னாச்சு? எடப்பாடி பழனிசாமியா? கவர்மெண்ட் ஹாஸ்பிடல்னா சாதாரணமா? சீறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்! என்னாச்சு?

அதிமுக - பாஜக

அதிமுக - பாஜக

எடப்பாடி - பாஜக மோதல் தொடர்பான மோதல் எப்படி தீவிரம் ஆனது என்பதை பின்வரும் வகையில் விளக்க முடியும்.

1. பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்திற்கு வந்த போது எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இருவரையும் சந்தித்தார். ஓ பன்னீர்செல்வத்தையும் சேர்த்து அழைத்ததை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

2. அதிமுகவில் ஓபிஎஸ் - எடப்பாடி இணைய வேண்டும் என்று டெல்லி பிரஷர் கொடுத்ததாக கூறப்பட்டது.

3. அமித் ஷா சென்னை வந்த போது எடப்பாடி அவரை சந்திக்க செல்லவில்லை.

4. அமித் ஷா சென்னை வரும் போதெல்லாம் அவரை சந்திக்க வேண்டியது இல்லை என்று எடப்பாடி கூறியது.

மோதலுக்கு காரணங்கள்

மோதலுக்கு காரணங்கள்

5. அதிமுக தலைமையில்தான் மெகா கூட்டணி அமையும் என்று இப்போதே எடப்பாடி கட் அண்ட் ரைட்டாக சொன்னது.

6. அதன்பின் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து தனது தரப்பு நியாயத்தை கூற முயன்றார். ஆனால் ஆளுநர் இதை ஏற்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்த விஷயங்கள்தான் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இடையிலான மோதலை ஏற்படுத்தியது.

 விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

எடப்பாடி - பாஜக இடையே உள்ள மோதலால் எங்கே தங்கள் தலைக்கு பாதகம் வந்து விடுமோ என்று கருதுகிறார்களாம். மத்திய அரசு நமக்கான அரசாக இருப்பதுதானே சரியாக இருக்கும்? பாஜக ஆட்சி தான் மீண்டும் வரப்போகிறது என்கிற சூழலில் பாஜகவை பகைத்துக் கொள்வதோ, கூட்டணியை உதறுவதோ ஆரோக்கியமானதாக இல்லை. பாஜகவை எதிர்த்தால் நமக்குத்தான் சிக்கல். பாஜகவை பகைத்துக்கொண்டால் வழக்குகளில் நமக்குத்தான் பாதிப்பு ஏற்படும். நாம் பாஜகவுடன் நட்பாகவே சொல்லுவோம் என்று அறிவுரை வழங்கி உள்ளனர். இதற்கு பின்பே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து தனது தரப்பு நியாயத்தை கூற முயன்றார். ஆனால் ஆளுநர் இதை ஏற்கவில்லை என்று கூறப்பட்டது.

வழக்கு

வழக்கு

இந்த நிலையில்தான் எங்கே குட்கா வழக்கில் தனக்கு எதிராக டெல்லி எதுவும் மூவ் செய்ய கூடாது என்று விஜயபாஸ்கர் டெல்லிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கே அவர் மத்திய இணை அமைச்சர் எல் முருகனை கூட சந்தித்தார். குட்கா வழக்கு பற்றியும் அவர் பேசி இருக்கிறாராம். ஆனால் டெல்லிக்கு சென்று சென்னை திரும்பிய நாளிலேயே அவருக்கு எதிரான பிடியை சிபிஐ இறுக்கியது. குட்கா வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் விஜயபாஸ்கர் பெயரும் இடம்பெற்று உள்ளது. ஏற்கனவே 2019க்கு முன் இதில் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. டெல்லி சென்ற விஜயபாஸ்கர் பாஜக தலைவர்களை சந்தித்தது எதுவும் அவருக்கு பலன் அளிக்கவில்லை.

பலன் இல்லை

பலன் இல்லை

ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக ஆதரவு பெற இவர் பாஜக தலைவர்களை சந்தித்ததாக கூறப்பட்டது. அவர் மத்திய அமைச்சர்களுடனும் ஆலோசனை செய்தார். டெல்லியில் இருந்து திரும்பி வந்த விஜயபாஸ்கருக்கு இரவோடு இரவாக ஷாக் செய்தி வந்துள்ளது. டெல்லியில் இருந்து அவர் திரும்பி வந்த கையோடு தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டார். இந்த நிலையில் அதிமுகவின் மற்ற மாஜிக்கள் இதே அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். மாற்றி மாற்றி போன் செய்து தங்களுக்குள் பேசிக்கொண்டு இருக்கிறார்களாம். டெல்லி எங்கே தங்களுக்கு எதிராக இதேபோல் நடவடிக்கை எடுக்கோமோ என்று அஞ்சுகிறார்களாம்.

பாஜக

பாஜக

நமக்கு எதிராக சில சிபிஐ கேஸ்கள் இருக்கின்றன. அதேபோல் அமலாக்கத்துறை கேஸ்களும் இருக்கின்றன. இப்போது ஏற்பட்டு இருக்கும் கருத்து வேறுபாட்டால் டெல்லி நமக்கு எதிராக செயல்பட்டால் என்ன செய்வது. நமக்கு எதிராக விசாரணையை தொடங்கினால் என்ன செய்வது. இது பெரிய பிரச்சனையில் அல்லவா முடியும். 2017ல் நடந்தது போல இப்போது நடந்தால் பெரிய சிக்கலாக மாறுமே என்று அதிமுக மாஜிக்கள் மாறி மாறி போன் போட்டு புலம்பிக்கொண்டு இருக்கிறார்களாம். பேசாமல் பாஜகவை சமாதானம் செய்வோம். கூட்டணி பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாம். அவர்கள் சொல்வதை கேட்டுக்கொள்வோம் என்று சில மாஜிக்கள் சமாதான மூடிற்கும் சென்று இருக்கிறார்களாம். ஆனால் எடப்பாடியோ.. இப்போது பதற வேண்டாம். பொறுமையாக இருங்கள். அவசரம் வேண்டாம். நடப்பது எல்லாம் நன்மைக்கே. டெல்லியை பின்னர் சமாளித்துக்கொள்ளலாம்., என்று மாஜிக்களிடம் சமாதானம் சொல்லி இருக்கிறாராம்.

English summary
Ex ministers in AIADMK are puzzled and worried after CBI targets Vijayabaskar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X