சேலை அணிந்து வந்த டீச்சர்.. துப்பட்டாவில் தற்கொலை.. கை மணிக்கட்டில் ரத்த வெட்டு.. தொடரும் மர்ம மரணம்
கல்லூரி பேராசிரியை தற்கொலை சம்பவத்தில் 2வது நாள் விசாரணை நடக்கிறது
Recommended Video
சென்னை: புடவை அணிந்து காலேஜ் நுழையும் டீச்சர், எப்படி துப்பட்டாவில் தூக்கு போட்டு கொண்டு இறந்தார் என்பது தெரியவில்லை.. கிளாஸ் ரூமிலேயே.. கைகளை பிளேடால் கிழித்தும், ஃபேனில் தூக்கு போட்டு தொங்கியும் தற்கொலை செய்து கொண்ட கல்லூரியின் முன்னாள் பேராசிரியையின் மரணம் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.. இதனால் 2-வது நாளாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது டிஜி வைஷ்ணவா பெண்கள் கல்லூரி. இங்கு பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் ஹரி சாந்தி.
தெலுங்கு பிரிவில் உதவி விரிவுரையாளராக வேலை பார்த்தார்.. ஆனால் 5 வருஷத்துக்கு முன்பே பணியில் இருந்து நின்றுவிட்டார். காலேஜில் வேலை பார்த்தபோதே, ஆசிரியர் பணிக்கான தேர்வெழுதி, அதற்கான பணியும் பெற்று பெரம்பூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்துள்ளார். இருந்தாலும் காலேஜ்-க்கு அடிக்கடி வந்து நண்பர்களிடம் பேசிவிட்டு செல்வதாக தெரிகிறது.

முதல்மாடி
இந்நிலையில், நேற்று காலை முன்னதாகவே காலேஜ் வந்தார் ஹரிசாந்தி.. மாணவிகள், பிற ஆசிரியர்கள் யாருமே அப்போது காலேஜில் இல்லை.. தான் ஏற்கனவே வேலை பார்த்தபோது, பாடம் நடத்திய கிளாஸ் முதல் மாடியில் உள்ளது.. அந்த கிளாஸ் ரூமுக்குள் நுழைந்தார்.

ஹரிசாந்தி
அங்கேயே தூக்கு போட்டு தொங்கிவிட்டார்.. கொஞ்ச நேரத்தில் மாணவிகள் கிளாஸ் ரூமுக்குள் நுழைந்தனர்.. அப்போதுதான், ஹரிசாந்தி டீச்சர் தூக்கில் தொங்கியதை கண்டு அலறினர்.. டீச்சரின் கையில் பிளேடால் கிழிக்கப்பட்டு ரத்தம் கொட்டி கொண்டிருந்தது.. இதை பார்த்து பதறிகொண்டு ஓடிபோய் உடனடியாக நிர்வாகத்துக்கு தகவல் சொல்லவும், போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதிர்ச்சி
விரைந்து வந்த போலீசார் ஹரிசாந்தி உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி நிர்வாகத்துடன் ஏதாவது பிரச்சனையா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஹரிசாந்தி
நேற்று முன்தினம்கூட காலேஜ் வந்துள்ளார் ஹரிசாந்தி.. அங்கிருந்த பேராசிரியர் நடராஜன் உள்ளிட்டோரை சந்தித்து ரொம்ப நேரமாகவும் பேசி கொண்டிருந்திருக்கிறார். ஆனால் காலேஜ் முடிந்த பின்பும் ஹரிசாந்தி புறப்படாமல் அங்கேயே தொடர்ந்து நண்பர்களிடம் பேசியபடி இருந்தாராம்.. அதனால் அவர் யார் யாரிடம் பேசினார் என்றும் விசாரித்து வருகிறார்கள்.

கல்யாணம்
தற்கொலை செய்துகொண்ட ஹரிசாந்தி, திருவள்ளூர் மாவட்டம் காரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவராம்.. 32 வயதாகிறது.. ஆனால் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தந்தையை இழந்த இவர், அம்மா, தங்கையுடன்தான் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐடி கார்டு
இந்த கல்லூரியை பொறுத்தவரை வெளியாட்கள் யார் வந்தாலும் அவர்கள் என்ட்ரி கேட்டில் உள்ள செக்யூரிட்டியிடம் ஐடி கார்டு, போட்டோ, அனுமதி சீட்டு இதெல்லாம் வாங்கிய பிறகுதான் உள்ளே போக முடியும். ஆனால் டீச்சருக்கு மட்டும் எந்தவித ரிக்கார்டும் அங்கு இல்லை. நுழைவு வாயிலில் இருந்து நேராக காலேஜ்-க்குள் நுழைவதுபோலதான் அங்கிருக்கும் கேமிராவில் பதிவாகி உள்ளது.

சந்தேகம்
அது மட்டுமல்ல.. டீச்சர் சேலை அணிந்துதான் உள்ளே வருகிறார்.. ஆனால், துப்பட்டாவால் தூக்குப்போட்டு உள்ளார். கையில் மணிக்கட்டு பகுதியில் வெட்டுக்காயம் உள்ளது.. இதுதான் போலீசாருக்கு நிறைய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் யாரை பார்ப்பதற்காக அவ்வளவு காலையில் காலேஜ் வந்தார்? என்று தெரியவில்லை. அதனால் அவர் யாரிடம் கடைசியாக பேசினார் என்பது உட்பட செல்போனை ஆராய்ந்து வருகிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications