விஜயகாந்த் வீட்டுக்குள் வந்த "ஆபீசர்ஸ்".. பின்னாடியே வந்த "சூரியன்".. திணறிய திமுக.. பூரித்த "மீசை"
சென்னை: "தவறு என்று தெரிந்தால், இறங்கி வந்து மன்னிப்பு கேட்பவர் விஜயகாந்த்.. மற்றபடி எந்த விஷயமாக இருந்தாலும் அதிரடிதான்" என்று பூரித்து சொல்கிறார் மீசை ராஜேந்திரன்.. வைரலாகி கொண்டிருக்கும் இந்த வீடியோவைதான், தேமுதிக தொண்டர்கள் இணையத்தில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
விஜயகாந்த்தின் பல படங்களில் இணைந்து பணியாற்றியவர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் மீது தனிப்பட்ட மரியாதையும், அபரிமிதமான பற்றும் வைத்திருப்பவர் மீசை ராஜேந்திரன்.. தன்னுடைய எல்லா பேட்டிகளிலும் விஜயகாந்தின் ஈகை குணம் குறித்தும், ஈர மனசு குறித்தும் நெகிழ்ந்து பேசுவார்..

விஜயகாந்த் எத்தனையோ பேருக்கு உதவியது குறித்த பல நினைவுகளை உருக்கத்துடன் பகிர்ந்தும் கொள்வார். சில நாட்களுக்கு முன்புகூட, ஒரு முக்கிய கோரிக்கை ஒன்றை மீசை ராஜேந்திரன் விடுத்திருந்தார்.
ஈரமனசு: "விஜயகாந்த் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை உருவாக்கியவர். பல இயக்குனர்களை உருவாக்கியவர். நடிகர் சங்க கடனை அடைத்தவர். எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தவர். ஆகவே, பாராட்டு விழாவோடு நடிகர் சங்க புதிய கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை வைப்பதை சரியாக இருக்கும் என கோரிக்கை வைத்தார்.. இப்போது, ஒரு பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்திருக்கிறார்.. அந்த பேட்டியில், விஜயகாந்த் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்போது குறிப்பிட்ட ஒரே ஒரு சம்பவத்தின் சுருக்கம்தான்இது: "கேப்டன் குடும்பத்தில் இருப்பவர்கள் என்மேல் வருத்தப்பட்டாலும்சரி, கோபப்பட்டாலும் சரி, கேப்டன் கூட இருந்தவர்கள் அத்தனை பேரும் இன்னைக்கு அவருடன் இருந்திருந்தால், அவர் நல்லா இருந்திருப்பார். முதல்வராகவும் ஆகியிருந்திருப்பார்.. இதில் மாற்றுக்கருத்தேயில்லை.. மனஅழுத்தம் நிறைய இருந்தாலே உடல்நிலை சரியில்லாமல் போயிடும்..
கேப்டன் விஜயகாந்த்: கேப்டன் கூட அன்னைக்கு இருந்த நெருங்கிய நண்பர்கள், லியாகத் அலிகான் மாமா, எல்லாருமே எப்பவுமே ஒன்றாக இருந்திருந்தால் கண்டிப்பா கேப்டன் சிஎம் ஆகியிருப்பார். யாருக்கும் பயப்படாமல் இறங்கிஅடிப்பவர் விஜயகாந்த். இதுக்கு ஒரு உதாரணம் சொல்லணும்னா, தேமுதிக கட்சி ஆரம்பித்த சமயம் அது.. அப்போது, திமுக அரசு தரப்பில் நெருக்கடி தரப்படுகிறது.. அப்போது மத்திய அமைச்சரவையிலும் இருக்கிறார்கள்.. அதனால் விஜயகாந்த் வீட்டுக்கு ரெயிடு வந்துட்டாங்க.. பொதுவாக ரெயிடு வரும்போது, அந்த தகவல் யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது.. தெரியவும் தெரியாது.. அதுதான் தொழில் தர்மம்.. ஆனால் ரெய்டு பின்னாடியே சன் டிவி மட்டும் வருது. எப்படி வந்தது?
ரெய்டு விஷயத்தை கேள்விப்பட்டு, அண்ணன் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட கட்சிக்காரர்கள் எல்லாரும் அங்கே வந்துசேர்ந்துட்டோம்.. காலைல 9 மணிக்கு ரெயிடு வந்துட்டாங்க.. ரெய்டு வந்திருந்த எல்லாருக்கும் தன் வீட்டிலேயே பிரியாணி செய்ய சொல்லிட்டாரு கேப்டன்.. அதில் ரெய்டு வந்த அதிகாரி ஒருவர், ரெய்டுக்கு போனப்போ நல்ல சாப்பாடு சாப்பிட்டோம் என்று பேட்டியே தந்திருந்தார்.. ஆனால், ரெய்டின்போது, தேமுதிக தொண்டர்கள் சிலர், ரெய்டு வந்த அதிகாரிகளின் காரை அடித்து நொறுக்கிவிட்டார்கள்..

கண்டித்த விஜயகாந்த்: ரெயிடு முடித்து கொண்டு அதிகாரிகள் வெளியே வந்தால் காரை காணோம். இதை பார்த்ததும் கேப்டன் டென்ஷன் ஆகிவிட்டார். "ஏம்ப்பா, அவங்க அவர்களது வேலையை செய்றாங்க.. இப்படி செய்வது தப்பு இல்லையா?" என்று தொண்டர்களை கண்டித்தார்.. பிறகு, வேறு காரை ஏற்பாடு செய்து அதிகாரிகளை அனுப்பிவிட்டு, சேதமடைந்த அவர்களின் காரையும் சரிசெய்து தருவதாக சொன்னார்.. இறுதியில், நடந்த சம்பவத்துக்கு அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டார். .
பிறகு, தேமுதிக தொண்டர்கள் 142 பேர் கைது செய்யப்பட்டு, விருக்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டதும், உடனே கிளம்பி அங்கே சென்றார்.. ஆனால், அங்கிருந்த போலீசார் உள்ளே விடவில்லை.. இதனால் கோபமடைந்த கேப்டன், உள்ளே விடவில்லையானால், காரை விட்டு நொறுக்கிதள்ளிவிட்டு உள்ளே போவேன்.. அவர்கள் எல்லாம் என்னுடைய தொண்டர்கள்.. "என் தொண்டர்களை நீங்கள் எப்படி பார்க்க கூடாது" என்று சொல்லலாம் என்றார்.
தரையில் உட்கார்ந்துட்டார்: இதனால் திகைத்து போன அதிகாரிகள், மேலிடத்துக்கு போனை போட்டு, கேப்டன் வந்திருக்கிறார், பிரச்சனை செய்கிறார் என்று விஷயத்தை சொல்லவும், அதற்கு பிறகே கேப்டனை உள்ளேவிட அனுமதித்துள்ளனர்.. உள்ளே சென்றால், கைதான 142 பேரும் தரையில் உட்கார வைக்கப்பட்டிருந்ததை பார்த்ததும், விஜயகாந்த்தும் தரையில் உட்கார்ந்துவிட்டார்.. உடனே அங்கிருந்த அதிகாரிகளிடம் என்னால்தானே இந்த பிரச்சனை, என்னை அரெஸ்ட் பண்ணிருங்க. என் தொண்டர்களை விட்டுடுங்க என்று கேட்டார்.. இதை கேட்டதும் மேலும் குழம்பி போனார்கள் போலீஸார்.. இப்படி எந்த பிரச்சனையாக இருந்தாலும், வேட்டிய மடிச்சி கட்டி, களம் இறங்கிடுவார் கேப்டன்" என்றார்.
-
2021 vs 2026.. திமுக கூட்டணியில் தேமுதிக, மநீம, விசிக காங்கிரஸ்.. யாருக்கு லாபம்.. ஏமாந்தது யார்? -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை











Click it and Unblock the Notifications