மதுரவாயலில் மாஸ்.. அதைவிடுங்க, பூந்தமல்லியில் டிரைவரே இல்லாமல் ரயில் ஓடபோகுது.. சென்னை மெட்ரோ அதிரடி
சென்னை: பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில், ஓட்டுநர் இல்லாத ரயில்கள் விரைவில் ஓடப்போகின்றன.. இதுகுறித்த குட்நியூஸ் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அது என்ன?
சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல், சென்னையில் விமான நிலையம் - விம்கோ நகர், சென்ட்ரல் - பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மாதவரம் பால் பண்ணை: இதையடுத்து, சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை, மாதவரம் பால் பண்ணை - சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பூந்தமல்லி- கலங்கரை விளக்கம் வரை, மொத்தம் 26 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் அமைக்கும் பணிகள் வேகமான நடந்து வருகின்றன. எனவே, பூந்தமல்லி முதல் பரந்தூர் புதிய விமான நிலையம் வரை 43.63 கி.மீ நீளத்திற்கு 19 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன்அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது....
பூந்தமல்லி: இதில், பூந்தமல்லி பைபாஸ் முதல் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரை மேம்பால பாதையாகவும், கோடம்பாக்கம் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சுரங்கப்பாதையாகவும் வழித்தடம் அமைகிறது. இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், போரூர் பைபாஸ் உள்ளிட்ட, 19 மேம்பால மெட்ரோ ரெயில் நிலையங்களும், 9 சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களும் அமைகின்றன.
மற்றொருபுறம் பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் மேம்பால பாதை பணிகள் முடிக்கப்பட்டு ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சுமார் 40.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.187 கோடி செலவில் இதற்கான கட்டுமான பணிகள் 3 வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றன.
ஓட்டுநர்: பூந்தமல்லி வழித்தடத்தில் இயக்குவதற்கான ஓட்டுநர் இல்லாத 26 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டாம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் 16 கிமீ உயர்மட்ட பாதையிலும், 10 கிமீ சுரங்கப்பாதையிலும் அமைவதாகவும், இந்த ரயில் பெட்டிகள் எல்லாம் 100 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு ஓட்டுநர் இல்லாமல் இயங்ககூடிய அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டு தயாராகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
அதுமட்டுமல்ல, மெட்ரோ ரெயில் பழுதுபார்க்கும் இடம், தானியங்கி முறையில் சுத்தப்படுத்தும் மையம், நிர்வாக அலுவலகம் மற்றும் கட்டுபாட்டு மையங்களும், சோதனை ஓட்டத்துக்கான ரெயில் தண்டவாளமும், பழுதுபார்ப்புக்கு தனியாக தண்டவாளங்களும் என ஒவ்வொன்றும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கிறதாம்.
டிரைவர்கள்: இப்போது இதுகுறித்த மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, பூந்தமல்லி பணிமனையில் சோதனை ஓட்டத்துக்கு தேவையான தண்டவாளம், சுமார் 820 மீட்டர்தூரத்திற்கு அமைக்கப்பட்டு தற்போது தயாராக உள்ளதாம்.. அடுத்த மாதத்திலேயே டிரைவர்கள் இல்லாத மெட்ரோ ரெயில்கள் வந்ததுமே, சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இந்த பணி முடிந்ததுமே, பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை மேல்மட்ட வழித்தடத்தில் பணிகள் முழுவதும் முடிந்ததும், சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பூந்தமல்லி பணிமனை கட்டும் பணிகள் இன்னும் 6 மாதத்தில் முழுமையாக முடிவடைந்து என்றும் அதிகாரிகள் உறுதி கூறுகிறார்கள்.
ரயில் சேவைகள்: மொத்தத்தில், இந்த பணிகள் அனைத்தும் முடிந்து, ரயில் சேவைகள் வரும்போது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும், லட்சக்கணக்கான பயணிகளுக்கு இதுஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் தெரிகிறது.
கடந்த வாரம்தான், மதுரவாயல் டூ துறைமுகம் ஈரடுக்கு மேம்பால பணிகள் துவங்கப்படும் என்றும், வரும் ஜூன் 2026ல் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.. கடந்த 10 ஆண்டுகளாகவே கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டம், பறக்கும் சாலைத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
டபுள் குஷி: இந்திய மாநிலங்களிலேயே முதல்முறையாக 2 அடுக்கு சாலையாக அமைய போகிறது. அதுபோலவே, இப்போது, 2ம்கட்ட மெட்ரோ பணிகளும் துரிதமடைந்து கொண்டிருக்கிறது. மொத்தத்தில், சென்னைவாசிகளுக்கு நல்ல செய்தி ஆன்திவே-யில் உள்ளது...!!
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications