சென்னையில் அரிய சம்பவம் நடக்க போகுது.. வானில் சிவப்பு நிறத்தில் ரத்த நிலா.. இந்த தேதி நோட் பண்ணுங்க
சென்னை: வானில் பல அரிய நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுவது வழக்கமாகும்.. அந்தவகையில், விரைவில் சந்திர கிரகணம் நடக்க போகிறது.. சந்திர கிரகணம் என்றால் என்ன? இது எப்படி நிகழ்கிறது? அடுத்து வரப்போகும் சந்திர கிரகணம் எப்போது? இதன் ஸ்பெஷாலிட்டி என்னென்ன? பெனும்பிரல் என்றால் என்ன? இதுகுறித்து விஞ்ஞானிகள் சொல்வதென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படுவதாகும்.. பூமி, சூரிய ஒளியை சந்திரன் மேல் விழாமல் தடுப்பதால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதைத்தான் ரத்த நிலவு என்பார்கள்..

முழு சந்திர கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறமாக மாறுவதற்கு ரேலீ சிதறலே காரணமாகும்.. சூரியன் உதிக்கும்போதும், மறையும்போதும் சிவப்பு நிறத்தில்தோன்றும். இதன்விளைவு காரணமாகவே இந்த சிவப்பு நிலவு என்று சொல்லப்படும் ரத்த நிலவு ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
சிவப்பு நிற ரத்த நிலா
பூமியின் மைய இருண்ட பகுதியான அம்ப்ரா சந்திரனை மறைக்கத் தொடங்கி முழுமை அடையும் போது சந்திரன் சிவப்பு நிறத்தில் ஒளிரத் தொடங்குகிறது.
அந்தவகையில், வருகிற செப்டம்பர் 7ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதை இந்தியாவில் உள்ளவர்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்.. அன்றைய தினம் இரவு 8.58 மணிக்கு ஆரம்பிக்கும் கிரகணம் 8ந் தேதி அதிகாலை 2.25 மணி வரை தெரியும்.. இதுதான் சமீபத்திய வருடங்களிலேயே ஆண்டுகளில் மிக நீண்ட கிரகணங்களில் ஒன்று என்கிறார்கள்.. இதனை வெறும் கண்களாலேயே பார்க்கலாம்.
சென்னையில் அரிய நிகழ்வு
சென்னையில்உள்ளவர்கள் கிழக்கு நோக்கி வானத்தை பார்த்தாலே, முழு சந்திர கிரகணத்தை பார்த்து ரசிக்கலாம். பூமியின் லேசான நிழலுக்குள் சந்திரன் நுழையும் கட்டத்தை பெனும்பிரல் என்று அழைக்கிறார்கள். அதில் தொடங்கி கிரகணம் மேலும் வளர்கிறது. இதை காண்பதற்கு மட்டும் தொலைநோக்கி தேவைப்படலாம்.
அதேபோல, முழுமையான சந்திர கிரகணம் இரவு 11.41 மணிக்கு நிகழ போகிறது.. இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 12.22 மணி வரை, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அலாஸ்கா, தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி மற்றும் உலகின பெருங்கடல்கள் மற்றும் துருவப் பகுதிகள் முழுவதும் இந்த நிகழ்வு தெரியும். அதாவது, உலகிலுள்ளவர்களில் கிட்டத்தட்ட 87 சதவீதம் பேர் இதன் ஒரு பகுதியையாவது பார்க்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்..
சந்திர கிரகணம் எப்போது
அதேபோல, சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் சமீபத்தில் சொல்லும்போது, அடுத்த முழு சந்திர கிரகணம் 2026ம் வருடம், மார்ச் 3 ம்தேதி நடக்க போகிறது.. ஆனால் அதை சரியாக பார்க்க முடியாது என்றாலும், அதன் ஒரு பகுதியை இந்தியாவில் பார்க்க முடியும்.. காரணம், சந்திர கிரகணம் நிகழ்நது முடியும் நேரத்தில்தான் இங்கு நமக்கு சந்திரன் வானில் தென்படும்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications