"பேரழகன்".. ஆண்களுக்கே பிடித்த ஒரே ஒரு ஆண் யார் தெரியுமா.. ஆர். சுந்தர்ராஜன் சொன்னதுமே ஒரே கைதட்டல்
எம்ஜிஆரை டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் பாராட்டிய வீடியோ ஒன்று வைரலாகிறது
சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் விழா ஒன்றில் பேசிய வீடியோ, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதிமுகவினர் இந்த வீடியோவை விடாமல் ஷேர் செய்தும் வருகிறார்கள். என்ன காரணம்?
எம்ஜிஆர் = அரை நூற்றாண்டை கடந்தும் அழியாத புகழை இன்றுவரை பெற்று வரும் மூன்றெழுத்து மந்திரம்.. எட்டாவது வள்ளல் எனப்படும் மக்கள் திலகம்.. தமிழக அரசியலில் இன்று வரை அதே சக்தியுடன் திகழும் அற்புதமான முன்மாதிரி.
"வெறும் பொழுதுபோக்கு அம்சமாயிருந்த சினிமாவை மக்களோடும், சமுதாயத்தோடும், இறுதியில் அரசியலோடும் இணைத்து.. ஆட்சியையே கைப்பற்றும் அளவுக்கு மாபெரும் சக்தி படைத்த மகத்தான கலைஞர்...

குடைக்குள் எம்ஜிஆர்
இன்றும்கூட இவர்மீது ரசிகர்கள், அசைக்கமுடியாத அன்பை வைத்திருக்கிறார்கள்.. சமீபத்தில், கொடநாடு சாலையிலுள்ள எம்ஜிஆர் சிலை மழையில் நனைந்துகொண்டிருந்தது.. அதை பார்த்ததுமே எம்ஜிஆர் ரசிகர் ஒருவர், கேட்டை திறந்துகொண்டு உள்ளே சென்று சிலை அமைக்கப்பட்டுள்ள தூண் மீது ஏறி, எம்ஜிஆர் சிலை நனையாதவாறு கையில் வைத்திருந்த குடையை உயர்த்திப் பிடித்து நின்று கொண்டிருந்தார்.. இதுதான் எம்ஜிஆர் ரசிகர்கள்..!

சபாஷ் எம்ஜிஆர்
இவரை பற்றி எத்தனையோ நடிகர், நடிகைகள் பெருமையுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. அந்த வகையில், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனும் சமீபத்திய விழாவில் எம்ஜிஆரை பற்றி பேசியுள்ளார்.. எம்ஜிஆரின் அதிதீவிரமான ரசிகரான ஆர்.சுந்தர்ராஜன், எம்ஜிஆரை வர்ணித்து பேசிய அந்த வீடியோவை எம்ஜிஆர் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.. அதிமுகவின் பொன்விழா நெருங்குவதையொட்டி இந்த வீடியோ பெரும் வரவேற்பை அவரது ரசிகர்களிடம் பெற்று வருகிறது.. ஆர். சுந்தர்ராஜன் பேசியதன் சுருக்கம்தான் இது..!

பேரழகன்
அம்மன்கோவில் கிழக்காலே படம் கம்போசிங் நடக்குது.. ஹோட்டலில் ரூம் போட்டுள்ளோம்.. ஒருநாள், டிவியில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தேன்.. பிளாக் & ஒயிட் பாட்டை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.. அப்போது திடீரென என்னா அழகன்..ய்யா, பேரழகன் என்று சொல்லும் சத்தம் கேட்டது.. பின்னாடி திரும்பி பார்த்தால், இசைஞானி இளையராஜா என் ரூமுக்குள் வந்திருக்கிறார்.. டிவியை பார்த்து கொண்டிருந்ததால், அவர் எப்போது உள்ளே வந்தார் என்றே எனக்கு தெரியல.. அவர் பேரழகன் என்று சொன்னது, புரட்சி தலைவர் எம்ஜிஆரை..

டாப் ஸ்டார்
மதுரை வீரன் படத்தில் வரும் நாடகமெல்லாம் கண்டேன் என்ற பாட்டை பார்த்துவிட்டுதான் இப்படி சொன்னார் இளையராஜா.. ஒரு ஞானி, ஒரு சாமியார் என்று சொல்லக்கூடிய இளையராஜாவே, இப்படி அழகை வர்ணித்து சொன்னார்... பொதுவாக, பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும்.. ஆனால், ஆம்பளைங்களுக்கே இன்னொரு ஆம்பளையை பிடித்த ஒரே தலைவர் அது புரட்சிதலைவர் எம்ஜிஆர் மட்டுமே.. இளவரசன் டிரஸ்ஸை இப்போது எந்த டாப் ஸ்டார் நடிகர்களுக்கு போட்டாலும் நல்லா இல்லையே..

இளையராஜா
யாரையுமே ரசிக்க முடியல.. இளவரசன் டிரஸ்ஸை போட்டு, கத்தியை எடுத்து போஸ் தருவது போல், எம்ஜிஆரை தவிர வேறு யாருமே நல்லாவே இல்லை. இந்த உலகம் இருக்கும்வரை அவரை மட்டும்தான் ரசித்து கொண்டிருக்க முடியும்.. சின்னப்பா தேவருக்கு எல்லாவித சண்டை பயிற்சிகளையும் தெரியும்.. ஆனால், எம்ஜிஆர் சிலம்பம் எடுக்கும்போது, இருக்கும் அழகு, சின்னப்பா தேவரிடம் காணப்படவில்லையே.. தான் கஷ்டப்படற காலத்திலேயே ஏழைகளுக்கு நிறைய உதவி செய்தவர், எந்நேரமும் மக்களை பற்றி மட்டுமே சிந்தித்தவர் எம்ஜிஆர்" என்றார்.
-
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications