சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆ.. "அவங்களா".. திடீர்னு ஓடிய உதயநிதி.. ஆளுநர் மாளிகையில் பரபரப்பு.. நெகிழ்ந்த சீனியர்கள்.. என்னாச்சு

சீனியர் தலைவர்களை பார்த்ததுமே ஓடிச்சென்று ஆசி வாங்கினார் உதயநிதி

Google Oneindia Tamil News

சென்னை: உதயநிதி ஸ்டாலினின் ஆளுநர் மாளிகை வீடியோ ஒன்று, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்து பலரும் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

10 வருடம் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.. ஒன்றரை வருடங்களாகியபோதும், அமைச்சரவையில் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.

ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற அடுத்த சில நாட்களில் இருந்தே, அமைச்சரவை மாற்றம் என்ற செய்தி மீடியாக்களில் அடிபட துவங்கியது.. அதற்கேற்றவாறு, மூத்த அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்களும் மீடியாவில் வட்டமடித்து வந்தன..

 அமைச்சர் உதயநிதி போட்ட முதல் கையெழுத்து இதுதான்.. விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி அமைச்சர் உதயநிதி போட்ட முதல் கையெழுத்து இதுதான்.. விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி

அட்வைஸ்

அட்வைஸ்

அமைச்சரவையில் அனைவரும் பதவியேற்ற தினத்தன்றே, முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு நிறைந்த அறிவுரை ஒன்றை அவர்களுக்கு தந்திருந்தார்.. யார் மீது புகார் வந்தாலும், அவைகள் விசாரிக்கப்பட்டு, துறை ரீதியான மாற்றம் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.. எனினும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படவில்லை.. அதேபோல, அமைச்சரவையில் மாற்றம் என்ற செய்தி வரும்போதெல்லாம் இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.

 நெடிய விளக்கம்

நெடிய விளக்கம்

அவ்வப்போது, அன்பில் மகேஷ் உட்பட அமைச்சர்கள் சிலர் இதுகுறித்து பேட்டிகளையும், விருப்பங்களையும் பதிவு செய்தாலும் முதல்வர் தரப்பில் எந்தவித பதிலும் வராமல் இருந்தது. இந்நிலையில், திமுக உட்கட்சித் தேர்தல்கள் முடிந்து, இளைஞரணிச் செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று அவர் 35 வது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.. கட்சிப் பணி, மக்கள் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், அமைச்சரவையில் இணைத்து மக்கள் பணியாற்றும் வாய்ப்பை வழங்க இருப்பதாக, திமுக இதற்கு விளக்கமும் அளித்துள்ளது.

 மைதானத்தில்

மைதானத்தில்

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இன்று காலை அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி. ஆளுநர் ரவி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சராக பதவி ஏற்றபின் மேடையில் முதல்வர் காலில் விழுந்து உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார். ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து கட்சி கொடி கட்டிய தன்னுடைய பழைய காரில் புறப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு வந்திருந்தார் உதயநிதி.. ஆனால், உதயநிதியின் வருகைக்கு முன்பாகவே, ஆளுநர் மாளிகையின் மைதானத்தில், மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் விழாவில் பங்கேற்க வந்திருந்தனர்..

 தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு

அவர்களில் எவ வேலு, கேஎன் நேரு, தங்கம் தென்னரசு உட்பட மூத்த தலைவர்கள் அங்கிருந்த பெஞ்ச் ஒன்றில் அமர்ந்திருந்தனர்.. அன்பில் மகேஷ் உட்பட சில அமைச்சர்கள் அவர்களை சுற்றி நின்று கொண்டிருந்தனர்.. காரைவிட்டு இறங்கி நடந்து வந்த உதயநிதி, இவர்களை பார்த்ததுமே, திடீரென அவர்களிடம் ஓடிச்சென்றார். மூத்த தலைவர்கள் முன்கூட்டியே வந்திருந்த நிலையில், அவர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று தனித்தனியாக வணக்கம் சொல்லி, வாழ்த்துக்களை பெற்றார்.. இந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோதுதான், முதல்வரும், ஆளுநரும் உள்ளே ஒன்றாக வருகை தந்தனர்..

 வேஷ்டி சட்டை

வேஷ்டி சட்டை

இதற்கு பிறகுதான் பதவிப்பிரமாணம் நடைபெற்றது.. ஆனால், உதயநிதி ஆளுநர் மாளிகையில் ஓடிவந்த வீடியோவை, அவரது ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "நல்லநேரம் சுபமுகூர்த்தம் முடியப்போகுது, அதான் ஓடிவருகிறார்" என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.. மேலும் சிலர், "அவர் இன்று ஓடும் ஓட்டம் தான், என்றாவது ஒருநாள் வெற்றி கொடியை கோட்டையில் பறக்க விட முடியும்" என்று நெகிழ்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.. மேலும் சிலரோ, "எவ்வளவு பெரிய விழா நடக்குது? நல்ல அழகான ராமராஜ் பட்டு வேட்டியில் மிடுக்கான நடை போட்டு வந்திருக்கலாமே" என்று உரிமையுடன் உதயநிதியை கேட்டு வருகிறார்கள்.

English summary
Excellent Video: What happened at the Governor's House and why did Udhayanidhi run
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X