அசோக் நகர் ரோட்டில் சர்ன்னு போன உருவம்.. மிரண்ட பெண் பத்திரிகையாளர்..இரவோடு இரவா சென்னை போலீஸ் மாஸ்
சென்னை: பெண் பத்திரிகையாளர்களை, அவதூறாக யார் பேசினாலும் சரி, அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாகவே இருந்தாலும்சரி, எத்தனை காலம் அவர்கள் தப்பித்து ஓடினாலும் சரி, சட்டமும், நீதியும் சும்மா விடுவதில்லை.. அப்படியிருக்கும்போது, பாலியல் சீண்டல் என்றால் தப்ப முடியுமா என்ன? ஓவர்நைட்டில் அதிரடி காட்டியிருக்கிறது நம்முடைய சென்னை போலீஸ்.
சமீபத்தில் கோழிக்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் நடிகரும், பாஜக பிரமுகருமான நடிகர் சுரேஷ் கோபி.. அப்போது சுரேஷ் கோபி பக்கத்திலேயே ஒரு பெண் செய்தியாளர் நின்று கொண்டிருந்தார்..

சுரேஷ் கோபி: அனைத்து செய்தியாளர்களும் கேள்வி கேட்டதைபோலவே, அந்த பெண்ணும் சுரேஷ் கோபியிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் சொல்லும்போது, திடீரென அந்த பெண்ணின் தோளின் மீது கை வைத்து கொண்டே பேசினார் சுரேஷ் கோபி.. இதை அந்த பெண் செய்தியாளர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை..
அதிர்ச்சி அடைந்த அவர், சுரேஷ் கோபியின் கையை 2 முறை தட்டிவிட்டார்.. ஆனால் அப்போதும்கூட, மறுபடியும் அந்த பெண்ணை தன்னருகே இழுத்து கை வைத்து, மறுபடியும் சீண்டலில் சுரேஷ் கோபி ஈடுபட்டுள்ளார். இதெல்லாம் லைவ் வீடியோவாக, அனைத்து சேனல்களிலும் ஓடிக்கொண்டிருந்தது. பிறகு, இதுகுறித்து போலீஸ் வரை விவகாரம் சென்றது என்றாலும், சுரேஷ் கோபி மன்னிப்பு கேட்டார் என்றாலும், இந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை அப்போது தந்துவிட்டது.
யாரிந்த பெண்: பெண் பத்திரிகையாளர்களுக்கும் இப்படியான தொந்தரவுகள் வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. இதோ நேற்றுகூட நம்ம சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
வடபழனி பகுதியை சேர்ந்தவர் அந்த பத்திரிகையாளர்.. 23 வயதாகிறது.. பிரபல நாளிதழ் ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார் நேற்றிரவு, இவர் கடைக்கு சென்றுள்ளார்.. வீட்டு பக்கத்தில் இருக்கும் கடைக்கு, தன்னுடைய தங்கையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.
கூச்சல்: இதனால் அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர், கத்தி கூச்சலிட்டார்.. ஆனால், அதற்குள் பைக்கில் வந்தவர் மின்னலென பறந்துவிட்டார்.. எனவே, பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர், நேராக அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்தார்..
அந்த புகாரின் பேரில் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்தனர். .உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது வசமாக சிக்கிவிட்டார் அந்த பைக் நபர்.
கேமராவில் பைக்கின் நம்பர் பதிவாகியிருந்தது. இதைவைத்து, உடனே அதை ஆய்வு செய்தனர்.. சம்பந்தப்பட்டவர் பெயர் விக்னேஷ்.. 21 வயதாகிறது.. கோடம்பாக்கம் சிஆர்பி கார்டன் பகுதியை சேர்ந்தவராம்..
சபாஷ் போலீஸ்: அடுத்த கொஞ்ச நேரத்திலேயே போலீஸார், விக்னேஷ் வீட்டுக்குள் நுழைந்தனர்.. போலீசாரை பார்த்ததுமே விக்னேஷூக்கு கை, கால் உதறல் எடுத்துவிட்டது.. ஆன் தி ஸ்பாட்டில் விக்னேஷை கைது செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தன்ர.. அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியின் மெஷின் ஆபரேட்டராக விக்னேஷ் வேரை பார்க்கிறாராம்.. அப்பறமென்ன? இப்போது புழல் ஜெயிலில் இருக்கிறர் விக்னேஷ் சார்..!!
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications