Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரிய "ஸ்கெட்ச்".. மிரட்டுறாங்க.. திமுகவின் முக்கிய எம்பியை "தூக்கும்" பாஜக? நோட்டமிடும் அறிவாலயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவை சேர்ந்த முக்கியமான சில எம்பிகளுக்கு பாஜக குறி வைத்து வைத்து இருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் மாற்று கட்சியை சேர்ந்த 55 ஆயிரம் பேர் கொங்கு மண்டலத்தில் திமுகவில் இணைந்தனர். இதில் மைதிலி வினோ உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் அடக்கம். இப்படி பல நிர்வாகிகள் திமுக பக்கம் சென்றதால் பாஜக கடும் அதிருப்தியில் இருக்கிறதாம்.

இந்த நிலையில்தான் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, திமுக எம்.பி.க்களுக்கு குறி வைத்திருக்கிறது பாஜக தலைமை. திமுகவில் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களுக்கும், மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவுக்கு தாவி எம்.பி.சீட் வாங்கி ஜெயித்தவர்களுக்கும் தூண்டில் வீசி வருகிறதாம் பாஜக.

தேமுதிகவில் இருந்து திமுகவுக்கு தாவியவர் எஸ்.ஆர்.பார்த்திபன். இவருக்கு கடந்த எம்.பி. தேர்தலில் சீட் தரப்பட்டது. வெற்றியும் பெற்றார்.

கேட்பதில்லை

கேட்பதில்லை

தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் இவர் எதை சொன்னாலும் அதிமுக ஆட்சியின் அதிகாரிகள் செய்து கொடுத்து வந்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் இன்னும் கூடுதல் மரியாதை கிடைக்கும் என எதிர்பார்த்தார் பார்த்திபன். ஆனால், அதிகாரிகள் மதிப்பதில்லை. காரணம், சேலம் மாவட்ட திமுக மா.செ.க்களுக்கும் பார்த்திபனுக்கும் எப்போதுமே உரசல் போக்கு நீடித்தப்படியே இருக்கிறதாம்.

தேமுதிக

தேமுதிக

தேமுதிகவிலிருந்து வந்து எப்படியோ சீட் வாங்கி ஜெயித்து விட்ட கோபம், திமுக மா.செ.க்களுக்கு இருக்கிறது. 2024-ல் மீண்டும் எம்.பி.சீட்டை பெற்று விடக்கூடாது என்று இப்போதே சேலம் மாவட்டத்தின் உடன்பிறப்புகள் காய்களை நகர்த்தி வருகிறார்கள். அதற்கேற்ப மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி தொடங்கி முக்கிய அலுவாக அரசு அதிகாரிகள் வரை பார்த்திபனின் சிபாரிசுகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்றும், அரசு நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்கக் கூடாது என்றும் அதிகாரிகளிடம் திமுகவினர் அறுவுறுத்தி வருகிறார்கள்.

 பாஜக

பாஜக

இதனால் பார்த்திபனின் சிபாரிசுகளுக்கு மரியாதை இல்லாமல் போயிருக்கிறது. அவரையும் எந்த அரசு நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பதில்லை. இந்த நிலையில்தான் சேலம் மாவட்ட திமுகவினர் மீது தொடர்ந்து அதிர்ப்தியில் இருந்து வந்த அவரை, பாஜக வளைத்து விட முடிவு செய்துள்ளதாம். இங்கேதான் சிக்கல் இருக்கு.. இதை பயன்படுத்தி அவரை தூக்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாம். இதற்கான பிளான்கள் எல்லாமே டெல்லியில் நடந்து வருகின்றனவாம். சமீபத்தில் கூட சேலத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளுக்கு தான் அழைக்கப்படுவது இல்லை என்று சேலம் திமுக எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் போர்க்கொடி தூக்கி இருந்தார்.

சுயமரியாதை

சுயமரியாதை

சுயமரியாதை என் உயிருக்கு மேலானது‌. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பிக்கு அழைப்பு கொடுக்க கூடாது. அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால்,அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள்,கழகத்தோழர்கள்,நிர்வாகிகள் நன்கு அறிவார்கள். ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நான் ஒரு எம்பி. மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது சட்ட விரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் ஏதோ எதிர்கட்சி எம்.பி என்று நினைக்கிறார் போலும். மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

என்னை புறக்கணிப்பது,எனக்கு வாக்களித்து 20 இலட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமம். நான் போராட்டக்காரன் என்பதனை அனைவரும் அறிந்த ஒன்று ! இதை சம்மந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் !!, என்று எஸ்.ஆர் பார்த்திபன் தனது ட்விட்டர் போஸ்டில் குறிப்பிட்டு இருந்தார். அதன்பின் இவருக்கும் மாநகராட்சி ஆணையருக்கு இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்ததாக கூறப்படுகிறது. இவரை அனைத்து நிகழ்ச்சிக்கும் அழைப்பதாக மாநகராட்சி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

 மாநகராட்சி

மாநகராட்சி

இதையடுத்து, சேலம் மாநகராட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அழைப்பு தெரிவிக்கப்படும் என்பதனை வரவேற்கிறேன். நன்றி, சேலம் மாநகராட்சி கமிஷனர் அவர்கள் சிறப்பாக செயல்படக் கூடியவர். எல்லோருடைய நோக்கமும் மக்களுக்கு சிறந்த சேவையை கொடுப்பதுதான், என்று எம்பி எஸ். ஆர் பார்த்திபன் குறிப்பிட்டார். இருப்பினுள் இவர் அதிருப்தியில் இருப்பதை பயன்படுத்திக்கொண்டு அவரை திமுகவில் பாஜக பக்கம் கொண்டு வர பாஜக தலைகள் தீவிரமாக முயன்று வருகிறார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+