#Exclusive இனி மிஸ்ஸே ஆகாது.. நெகட்டிவ் இமேஜை உடைத்துவிட்டோம்: பாதயாத்திரை கேப்பில் அண்ணாமலை பேட்டி!
சென்னை: கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமாக களத்தை தயார் செய்துள்ளோம். இன்று தமிழ்நாடு பாஜக பாசிட்டிவ் ஸோனில் இருக்கிறது. பாஜகவுக்கு எதிரான நெகட்டிவ் நெரேட்டிவ் பில்ட் ஆகாமல் உடனடியாக பதில் கொடுத்து வருகிறோம். மீண்டும் மோடி ஆட்சிதான், தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை வாய்ப்பை இழக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என அண்ணாமலை ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண் , என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணத்தை ஜூலை மாதம் 28 ஆம் தேதி தொடங்கினார். இந்த பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 20 தொகுதிகளில் மக்களைச் சந்தித்துள்ளார் அண்ணாமலை. பாதயாத்திரைக்கு இடையே நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இனி அவரது பேட்டி:
கேள்வி: இந்த பாதயாத்திரை அனுபவம் எப்படி இருக்கிறது?
அண்ணாமலை: தமிழ்நாடு பாஜகவுக்கு இது மிக முக்கியமான செயல்பாடு. குறிப்பாக இந்த பாதயாத்திரையில் வெயிலில் நமது மூத்த தலைவர்கள் நடந்து வருகின்றனர். அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பாஜக நகர்ந்து வருகிறது. பிரதமர் மோடி செய்து வரும் பணிகள் பட்டி தொட்டிகளில் எந்தளவுக்கு ரீச் ஆகி இருக்கிறது என்பதை களத்தில் இறங்கி அறிந்து, அதனை இன்னும் கொண்டு சேர்க்கிறோம். கட்சி இதுவரை செய்யாத ஒன்றை இந்த யாத்திரையில் செய்ய நினைக்கிறோம். நாம் அரசியலைப் பார்ப்பதற்கும், கடைக்கோடி மக்கள் அரசியலைப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம். இந்த பாதயாத்திரை பெரிய திறப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேள்வி: இந்த பாதயாத்திரையில் பொதுமக்கள் உங்களிடம் என்ன சொல்கிறார்கள்?
அண்ணாமலை: உரிமையோடு நம்மிடம் பேசுகிறார்கள். ஜல் ஜீவன் திட்டத்தில் குழாயில் உப்புத் தண்ணீர் வருகிறதே என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். சிலிண்டர் விலையை குறைத்துத் தர வேண்டும் என பெண்கள் கேட்கிறார்கள். அதை எந்தளவுக்கு காது கொடுத்துக் கேட்டு சரி செய்கிறோம் என்பதை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்தந்தப் பகுதிகளில் பலனடைந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பேசுகிறோம். அதனை மக்கள் நன்கு கவனிக்கிறார்கள். இந்த பாதயாத்திரையில் மக்கள் புகாரும் சொல்கிறார்கள், உரிமையெடுத்து நல்லதும் சொல்கிறார்கள்.

கேள்வி: இந்த யாத்திரையை வைத்து உங்களின் குறிக்கோள் என்ன? 40க்கு 40 வெல்ல வேண்டும் என்பதா? இந்த யாத்திரையை முடிக்கும்போது உங்களுக்கு எனன் கிடைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
அண்ணாமலை: தமிழ்நாட்டில் 2014, 2019 போல நாடாளுமன்ற தேர்தல் களம் இல்லாமல், 2024ல் பாசிட்டிவான களம் இருக்க வேண்டும். கீழ் மட்டம் வரை பிரதமர் மோடி செய்துள்ள திட்டங்கள் போய்ச் சேர வேண்டும். நாங்கள் 10 ஆண்டுகளில் இதைச் செய்திருக்கிறோம், எங்கள் ரிப்போர்ட் கார்டை பாருங்கள். மேலும் 5 ஆண்டுகளை எங்களுக்குக் கொடுங்கள் என உரிமையாக கேட்கும் அளவுக்கு களத்தை தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் இந்த யாத்திரையின் மூலம் எனது குறைந்தபட்ச இலக்கு. பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயார் செய்யவேண்டும்.
கேள்வி: அப்படியென்றால், இதற்கு முன்பு தமிழ்நாட்டுக் களம் பாஜகவுக்கு தயாராக இல்லையா?
அண்ணாமலை: ஒருபக்கம் அரசு செய்ததை சொல்கிறோம். மறுபக்கம் கட்சியாக செய்ததை சொல்கிறோம். இவை இரண்டையும் தாண்டி, அடிமட்டத்திற்குச் சென்று, உங்களுடன் நாங்கள் இருக்கிறோம், இவற்றையெல்லாம் செய்துள்ளோம், அடுத்த 5 ஆண்டுகளில் இதையெல்லாம் செய்யப்போகிறோம் என கேட்கிறோம். பொதுவாக கட்சி கூட்டங்களில் 80-90 சதவீதம் கட்சி ஆட்கள் தான் வருவார்கள். வெறும் 10 சதவீதம் தான் பொதுமக்கள் பங்கேற்பார்கள். பாதயாத்திரை மூலம் நாம் அவர்கள் இடத்துக்கே சென்று பேசுகிறோம். நேரடியாகச் சென்று மெசேஜை கொண்டு சேர்க்கிறோம்.
கேள்வி: இந்த பாதயாத்திரையைக் காண வந்த மக்கள் பலர் எங்களுக்கு அண்ணாமலையை பிடித்திருக்கிறது, அவரை பார்க்க வந்தோம் என்கிறார்கள். பாஜகவுக்கு வாக்களிப்பீர்களா என்றால் அமைதி காக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
அண்ணாமலை: அண்ணாமலை, பிரதமர் மோடி திட்டங்களை முன்வைத்து வருகிறார் என்பது மக்களுக்கு அடிப்படையில் தெரியும். என்னை பிடித்தவர்களை பாஜகவுக்கு வாக்காளர்களாக மாற்றுவது எனக்கு இருக்ககூடிய சவால். இந்த யாத்திரையின் நோக்கம், பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்துவது தான். வரும் நாட்களில் இந்த யாத்திரை தீவிரமடைந்து, ஜனவரியில் யாத்திரை முடிவடையும்போது, எங்களுக்கு அண்ணாமலையையும் பிடிக்கும், பிரதமர் மோடியையும் பிடிக்கும், மீண்டும் மோடி ஆட்சி வர வேண்டும் என்ற மெசேஜ் ஒட்டுமொத்தமாக போய்ச் சேர்ந்திருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கேள்வி: கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் மோடி ஆதரவு- மோடி எதிர்ப்பு என்ற அலை உள்ளது. கிட்டத்தட்ட 67-69% வாக்குகள் மோடிக்கு எதிரான மனநிலையுடன் பதிவாகி வருகிறது. இந்த மோடி எதிர்ப்பு மனநிலையை அண்ணாமலையின் இமேஜ் மாற்றிவிட முடியுமா?
அண்ணாமலை: 2014 ஒரு அசாதாரணமான தேர்தல். 2014ல் பாஜக மூன்றாவது அணியாக இருந்து கூட்டணி 19% வாக்குகள் வாங்கி எம்.பிக்களை டெல்லிக்கு அனுப்பியது. 2019 தேர்தலை பொறுத்தவரை ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விவகாரங்களில் நல்லது செய்தும் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில் மாட்டிக்கொண்டோம். எங்களுக்கு எதிரான சூழல் கட்டமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமாக களத்தை தயார் செய்துள்ளோம். இன்று தமிழ்நாடு பாஜக பாசிட்டிவ் ஸோனில் இருக்கிறோம். பாஜகவுக்கு எதிரான நெகட்டிவ் நெரேட்டிவ் பில்ட் ஆகாமல் உடனடியாக பதில் கொடுத்து வருகிறோம்.
தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரத்திற்காகவும் மோடியின் திட்டங்கள் பட்டி தொட்டி எல்லாம் சென்று சேர்ந்திருக்கிறது. பிரதமர் மோடி செய்த நல்ல திட்டங்களை பாஜக தொண்டர்கள் மக்களிடம் சென்று விளக்குகிறோம். எனவே, 2024 நாடாளுமன்றத் தேர்தல் வித்தியாசமான களமாக இருக்கும். 2019ல் தமிழ்நாட்டு மக்களுக்கு மோடி பிரதமராக வருவாரா மாட்டாரா என ஒரு சந்தேகம் இருந்தது. 2024ஐ பொறுத்தவரை இன்னும் சில மாதங்களில் மோடியே மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்பதை மக்கள் உணர்வார்கள். எனவே, தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை வாய்ப்பை இழக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம்












Click it and Unblock the Notifications