Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2024" க்காக டெல்லி தலையிட்டாலும்.. ஓபிஎஸ்ஸை தாமரையில் நிறுத்த சொல்வாரா எடப்பாடி? எக்ஸ்பர்ட் அலசல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி தலைமை பஞ்சாயத்து செய்தாலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் தனி சின்னத்திலோ அல்லது தாமரை சின்னத்திலோ போட்டியிட்டுக் கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி சொல்ல வாய்ப்புகள் அதிகம் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் கேள்வி பதில் வடிவம்:

கேள்வி: ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு பாஜக சொன்னால் எடப்பாடி பழனிசாமி கேட்பாரா?

பதில்: 2024 ஆம் ஆண்டு நரேந்திர மோடிதான் பிரதமர் என எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். பாஜகவை விட்டு விட்டு பழனிசாமியால் அரசியல் செய்ய முடியாது. பாஜகவை எதிர்த்து பொன்னையன், ஆதி ராஜாராம், செல்லூர் ராஜு இவர்கள் யார் பேசினாலும் அதை கண்டுகொள்ளவே வேண்டாம். எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்த்தால் மட்டுமே டர்னிங் பாயிண்ட் ஏற்படும். எனவே அவருக்கு பாஜகவின் ஆதரவு தேவை.

தென் மாவட்டங்கள்

தென் மாவட்டங்கள்

பாஜகவுக்கு எடப்பாடியும் வேண்டும் தென் மாவட்டங்களுக்காக ஓபிஎஸ்ஸும் வேண்டும். எனவே பாஜக இருவரையும் ஒருங்கிணைத்து செல்லும். ஆனால் கட்சியை கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் ஓபிஎஸ் சேர்ந்திருப்பதை எந்த அளவுக்கு அனுமதிப்பார் என்பதை பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் ஓபிஎஸ்ஸை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பாரா இல்லை தாமரை சின்னத்தில் போட்டியிடட்டும் என சொல்வாரா என தெரியவில்லை.

தனி கட்சி

தனி கட்சி

தனி கட்சி தொடங்கி போட்டியிட்டால் ஓபிஸ்ஸுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் உறவு துண்டிக்கப்பட்டு விடும். எனவே தினகரன், ஓபிஎஸ்ஸை அனுசரித்து செல்லுமாறு பாஜக சொல்லும்போது எடப்பாடி எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுப்பார்.

கேள்வி: பாஜக, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, தேமுதிக, இதர கட்சிகளுடன் சேர்ந்து 3ஆவது அணி அமைய வாய்ப்பிருக்கிறதா

பதில்: எடப்பாடியை விட்டுவிட்டு பாஜக ஒரு கூட்டணியை அமைக்க மாட்டார்கள். எடப்பாடியும் பாஜகவை விடமாட்டார். எடப்பாடி பாஜகவை விட்டு வந்தால் மைனாரிட்டி வாக்குகளை வாங்குவார் என சிலர் கூறுகிறார்கள். தேர்தலுக்கு பிறகு அவர் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்றெல்லாம் சொல்கிறார்கள். திமுகவிடம் இருந்து ஏதாவது சில கட்சிகள் அதிமுகவுடன் வரும் என எடப்பாடி நினைக்கிறார். ஆனால் எடப்பாடியை நம்பி திமுக தரப்பில் யாரும் வரமாட்டார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி

கேள்வி: ஈரோடு கிழக்கு தொகுதியில் சின்னமே இல்லாவிட்டாலும் நான் தேர்தலில் போட்டியிடுவேன் என வேட்பாளரை இறக்கினாரே அது போல் அவர் வரும் தேர்தல்களிலும் தனித்து போட்டியிடமாட்டாரா?

பதில்: பாஜக இரட்டை இலை கொடுக்காமல் சதி செய்தாலும் நான் தனிச் சின்னத்தில் நிற்கிறேன் என்று எடப்பாடி சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. அந்த அளவுக்கு அவர் தன்னுடன் இருக்கும் நிர்வாகிகளை நம்புகிறார்கள். அவர்களில் ஒருத்தர் கூட அந்த கூடாரத்தை விட்டு வெளியே வரவில்லை. எடப்பாடி பழனிசாமி எனும் ஒற்றை தலைமையை மக்கள் ஆதரிக்கிறார்களா என்பது வர போகும் தேர்தலில் தெரியவரும்.

மக்கள் ஆதரவு

மக்கள் ஆதரவு

ஆனால் ஓபிஎஸ் மக்கள் ஆதரவை பெறுவதிலும் சிக்கல் இருக்கிறது. ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர்தான் ஒருங்கிணைப்பாளர் என ஏதாவது ஒரு நீதிமன்றங்கள் அங்கீகரிக்க வேண்டும். அப்படியே அங்கீகரித்தாலும் எடப்பாடி அவரை சேர்த்து கொள்ள ரெடியாக இல்லை. தனியாக தேர்தலில் நின்று மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை ஓபிஎஸ் நிரூபிக்க வேண்டும். தனித்து போட்டியிட்டாலும் சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

பாஜகவை எடப்பாடி பழனிசாமி எதிர்க்கவே மாட்டார். புலனாய்வு அமைப்புகளின் கேஸ்களில் கவனம் செலுத்தாமல் இருந்தால் கட்சியே போய்விடும். அதனால் அவர் பாஜகவை எதிர்க்க மாட்டார். கொடநாடு வழக்கில் அவர் சிறைக்கு சென்றால் , கட்சி ஒன்றும் இல்லாமல் போய்விடும். அந்த நேரத்தில் ஓபிஎஸ் உள்ளே நுழைந்தால் அவர் பின்னால் நிர்வாகிகள் போய்விட்டால் ஒரு திருப்புமுனை நடக்கும்.

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

இன்று எடப்பாடி பின்னால் திரண்டிருக்கும் நிர்வாகிகள் அவருக்கு எந்த பிரச்சினை வந்தாலும் இருப்பார்களா என்பது யோசிக்க வேண்டிய விஷயம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட போது கூட கட்சி அப்படியேதான் இருந்தது. அவருக்கு இருந்த செல்வாக்கு இவருக்கும் இருக்குமா

கேள்வி: 2019 ஆம் ஆண்டு தேர்தலின்போது தென் மாவட்டங்களில் கட்சிக்கு ஓபிஎஸ்ஸின் பங்கு என்ன, தனது மகனை ஜெயிக்க வைக்க மட்டுமே அவர் போராடினார் என்ற ஒரு விமர்சனத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு முன் வைக்கிறதே, அதை எப்படி பார்க்கிறீர்கள்?

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

பதில்: கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி அதிக இடங்களில் வென்றதால் அவர் அப்படி சொல்கிறார். தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர்கள் எல்லாம் பாஜகவுக்கு மாறியுள்ளதாக சொல்கிறார்கள். அங்கு ஏன் எடப்பாடி வெற்றி பெறவில்லை. ஓபிஎஸ்ஸை மட்டும் குறை சொல்ல முடியாது. 10.5 சதவீத இடஒதுக்கீட்டு விஷயத்தில் தென் மாவட்டங்களில் பலர் பாதிக்கப்பட்டார்கள். அதனால் அவர்கள் அதிமுகவிற்கு ஓட்டு போடவில்லை. அப்போது கூட ஓபிஎஸ் அந்த இடஒதுக்கீட்டை இப்போது ஏன் செய்தீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். வன்னியர்களை கவர் செய்ய அவர் அவ்வாறு செய்திருந்தார். ஆனால் வன்னியர் ஓட்டுகளும் கைகொடுக்கவில்லை.

அறுவடை

அறுவடை

வரும் தேர்தலில் திமுகவுக்கு எதிராக ஒரு நிலை இருக்கும். அந்த வாக்குகளை அதிமுக அறுவடை செய்ய வேண்டும் என்றால் ஒன்றாக இருந்தால்தான் செய்ய முடியும். ஓபிஎஸ்ஸை சேர்க்க வேண்டும் என்ற பிரச்சினையிலோ , பாஜக அதிக இடம் கேட்டாலோ எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிட்டால் திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் பிரியும். அப்போது திமுகவுக்குதான் பலனை கொடுக்கும். இந்த நிலைமைக்கு செல்ல பாஜக விடமாட்டார்கள்.

3ஆவது அணி

3ஆவது அணி

அண்ணாமலை சொல்லும் 3ஆவது அணி 2024 லோக்சபா தேர்தலில் வாய்ப்பில்லை. 2026 சட்டசபை தேர்தலில் வேண்டுமானால் பார்க்கலாம். 2024 ஆம் ஆண்டு மோடிக்கான தேர்தல், எனவே அந்த தேர்தலில் பாஜக தமிழகத்தில் சில சீட்டுகளை வெல்லத்தான் பார்க்கும். இதனால் ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றிணைக்க முயற்சிக்கும். ஓபிஎஸ் தனக்கு கீழ் பணியாற்றுவதாக இருந்தால் சேர்த்துக் கொள்ள எடப்பாடி தயாராக இருக்கலாம். ஆனால் ஓபிஎஸ் அதற்கு ஒப்புக் கொள்வாரா என தெரியவில்லை. அரசியலுக்காக ஒப்புக் கொண்டாலும் இத்தனை சட்டபோராட்டங்கள் செய்துவிட்டு இறங்கி போவதற்கு பதில் அப்போதே அவர் இறங்கிபோயிருந்தால் ஒரு நல்ல பதவியை கொடுத்திருப்பார்கள்.

ஓபிஎஸ் செய்தது தவறு

ஓபிஎஸ் செய்தது தவறு

ஓபிஎஸ் தனது அரசியல் பாதையை வகுத்துக் கொள்வதில் பல விதமான சிக்கல்கள் இருக்கின்றன. ஓபிஎஸ் பின்னால் மக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் திரளாத வரை இவர் சட்ட போராட்டம் நடத்தியாக வேண்டும். அப்படியே நடத்தினாலும் அவருக்கான தீர்வை பெற்றுத் தராது என்பது என்னுடைய கருத்து. பாஜகவை ஓபிஎஸ் நம்பியதே தவறு. அவருடைய போராட்டங்களை அவரே பார்த்து கொண்டிருக்க வேண்டும். ஓபிஎஸ் திட்டமிடாதவரை அவருடைய அரசியல் நிலை இப்படித்தான் இருக்கும். இவ்வாறு ப்ரியன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+