குலுங்க போகும் திருச்சி மாநாடு.. திண்டுக்கல்லில் எம்ஜிஆர் கேட்ட அந்த கேள்வியை கேட்க போகும் ஓபிஎஸ்!
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்தால் என்ன நடக்கும்- கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராக நாங்கள் போட்ட வழக்கில் எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்களிடம் கைவசம் ஒரு திட்டம் இருக்கிறது என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு போடப்பட்ட வழக்கில் தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவுகளை இப்போது அறிவிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் கேள்வி பதில் வடிவம்:
கேள்வி: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்த தீர்ப்பு யாருக்கான வெற்றி? ஓபிஎஸ் தரப்பும் எடப்பாடி தரப்பும் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். உண்மையில் இது யாருக்கான வெற்றி?
பதில்: ஞாயிற்றுக்கிழமை அன்றே பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மகுடம் சூட்டிக் கொள்வதாக இருந்தார். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக அலுவலகத்தில் காத்திருந்தனர். எனவே இந்த கொண்டாட்டத்தை தள்ளி போட்டதில் எங்களுக்கு வெற்றி உள்ளது. தீர்ப்பு வந்ததை ஏற்கிறோம். ஆனால் எத்தனையோ பாயிண்ட்கள் இருக்கும் போது இது மாதிரியான தீர்ப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

3 நாட்கள்
கேள்வி: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஆவதை 3 நாட்கள் தள்ளி போடுகிறீர்கள். இதில் என்ன உங்களுக்கு சந்தோஷம்?
பதில்: அடுத்த 3 நாட்களில் நாங்கள் தடை வாங்கவும் முடியும். அந்த 3 நாட்களில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். நியாயம் ஜெயிக்கவில்லை. அநீதி மட்டும் ஜெயித்து வருகிறது. அதற்காக நாங்கள் போராடி வருகிறோம். கடைசி நாளிலாவது மாற்றம் வராதா என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களை நீக்க இவர்கள் யார், நாங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே நிர்வாகியாக இருந்து வருகிறோம். நாங்கள் ஜெயலலிதாவின் விசுவாசி. அப்படியிருக்கும் போது தன்னிச்சையாக கட்சியை அபகரிக்க நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்.

கட்சி
இப்போது கூட ஒன்றும் இல்லை, கட்சியை அவர்களே வைத்துக் கொள்ளட்டும், இரட்டை இலையையும் அவர்களே வைத்துக் கொள்ளட்டும். ஆனால் ஓபிஎஸ் இல்லாமல் அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? தென்மாவட்டங்களில் முக்கிய புள்ளியான ஓபிஎஸ் பிரச்சாரம் செய்யாததால்தான் அதிமுக ஈரோடு கிழக்கில் தோற்றது. அடுத்தது திருச்சியில் ஓபிஎஸ் தலைமையில் மாநாடு இருக்கிறது.

அதிமுக பொதுக் குழு தீர்மானம்
கேள்வி: அதிமுக பொதுக் குழு தீர்மானம் வழக்கில் ஏப்ரல் 11 இல் தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால் முன் கூட்டியே மார்ச் 24 இல் தீர்ப்பு என சொல்லிவிட்டார்கள். இதனால் 26 இல் பதவியேற்க ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். எனவே அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது, அவர்கள் வெல்வார்கள் என்றுதானே அர்த்தம்.
பதில்: தர்மயுத்தம் நடத்திய போது ஓபிஎஸ் ஆதரவு அளிக்காவிட்டால் ஆட்சி போய்விடும், இரட்டை இலை முடங்கிவிடும் என எத்தனை பேர் ஓபிஎஸ்ஸை சந்தித்து முறையிட்டார்கள் தெரியுமா. அவரது மனதை மாற்றி ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு கொண்டு வந்துவிட்டனர்.

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள்
கேள்வி: ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை வைத்து ஆட்சியை கலைக்க திட்டமிட்டார் என்பதுதானே அவர்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டு?
பதில்: 11 எம்எல்ஏக்களின் ஆதரவுடன்தான் ஆட்சியை தக்க வைத்தார்கள். தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட போது 11 எம்எல்ஏக்களை வைத்துதான் ஆட்சியை தக்க வைத்தார்கள். அந்த 11 எம்எல்ஏக்கள் இல்லாமல் எப்படி நான்கரை ஆண்டுகாலம் ஆட்சியை தக்க வைத்திருக்க முடியும்?

பொதுச் செயலாளர் பதவி
கேள்வி: பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை. அவரை எதிர்த்து போட்டியிட தலைமைக் கழகத்தில் வாக்காளர் பட்டியல் என ஏதாவது வைத்திருக்கிறீர்களா
பதில்: வாக்காளர் அடையாள அட்டையில் ஓபிஎஸ் படம் இல்லாமல் எடப்பாடியின் படத்தை மட்டும் போட்டு சிலருக்கு விநியோகம் செய்கிறார்கள். ஆனால் அதை அவர்களிடம் கொடுப்பதில்லை, அதை வைத்து யாராவது கோர்ட்டுக்கு போய்விட்டால் என்ன செய்வது என கொடுப்பது போல் கொடுத்துவிட்டு திரும்பவும் பெற்றுக் கொள்கிறார்கள். ஓபிஎஸ் ஆதரவும் இல்லாமல் ஈபிஎஸ் ஆதரவும் இல்லாமல் நடுநிலை தொண்டர்கள் எல்லாம் என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை கேட்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை கொடுக்காமல் எப்படி தேர்தல் வைத்தார்கள் என தொண்டர்கள் என்னிடம் கேட்கிறார்கள். ஒருங்கிணைந்த அதிமுக அமைந்த போது எதற்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கொண்டு வந்தீர்கள். அன்றைய தினமே பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வர வேண்டியதுதானே, எதற்காக இந்த நாடகம்? நாங்களும் அதை பின்பற்றி போயிருப்போமே. பொதுக் குழு வரை வரவழைத்து அதில் ஓபிஎஸ்ஸை நீக்க தீர்மானம் கொண்டு வந்தது ஏன்? அதனால்தான் நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம்.

கேஸ் போடட்டும்
கேள்வி: ஓபிஎஸ் கோர்ட்டில் கேஸ் போடட்டும், நாங்கள்எங்கள் கட்சி வேலையை பார்க்கிறோம் என அவர்கள் சொல்கிறார்களே
பதில்: வழக்கில் இறுதி தீர்ப்பு அவர்கள் பக்கம் கூட வரட்டும், நாங்கள் மக்கள் மன்றத்திற்கு செல்கிறோம். திருச்சி மாநாடு வரவுள்ளது. திண்டுக்கல் செல்லும் போது எம்ஜிஆருக்கு இதே போல் ஒரு நிலை வந்த போது ஒரு தொண்டனிடம் கேட்டாராம், நான் என்ன தவறு செய்தேன். அது போல் நீங்களும் மக்களிடம் கேளுங்கள் என நான் கூறியிருக்கிறேன். அது போல் ஓபிஎஸ்ஸும் கேட்க போகிறார்கள். மக்கள் தீர்ப்பு தரட்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த தேர்தலின் போது கூட இரட்டை இலை உங்களிடம் இருந்தது. முதல்வர் வேட்பாளராகவும் எடப்பாடியிடம்தான் இருந்தது. ஆனால் மக்கள் அவரை ஏற்கவில்லையே! ஓபிஎஸ் இருந்திருந்தாலும் முதல்வர் வேட்பாளர் என்ற முகம் எடப்பாடிதானே. இரட்டை தலைமையாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.

நாங்கள் சொல்வது என்ன?
கேள்வி: எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக கூடாது என நீங்கள் கங்கணம் கட்டி வேலை பார்ப்பது போல் உள்ளதே
பதில்: நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். அவரை தவிர அந்த பதவிக்கு வேறு யாருக்கும் தகுதி இல்லை என்கிறோம். அதனால்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கொண்டு வந்து ஒற்றை ஓட்டு நடைமுறையை கொண்டு வந்தோம். இவ்வாறு கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications