அடக்கடவுளே.. இதுதான் வந்தே பாரத் சாதாரண ரயிலா? பார்க்க இவ்வளவு மோசமா இருக்கே.. போச்சு!
சென்னை: வந்தே பாரத் சாதாரண ரயிலின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன.
இந்தியாவில் ரயில்வே பயணத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கொண்டு வரப்பட்டதுதான் வந்தே பாரத் ரயில். வேகமாக செல்ல வேண்டும், சொகுசான பயணம் இருக்க வேண்டும், சுத்தமான பயணம் இருக்க வேண்டும்.. என்பதை மனதில் வைத்து இந்த வந்தே பாரத் ரயில் அறிமுகம் திட்டமிடப்பட்டது. அதேபோல் இந்தியா முழுக்க பல சேவைகளை வந்தே பாரத் ரயில் இயக்கி வருகிறது.
வந்தே பாரத் சேவைகள்: தமிழ்நாட்டிலும் வந்தே பாரத் ரயில் பல்வேறு சேவைகளை கொண்டு உள்ளது. சமீபத்தில் திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் இரண்டு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை தற்போது 11-12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரத்திற்கும் குறைவாகக் கொண்டு வரும்.

இது போக விஜயவாடா மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு உள் மாநில வந்தே பாரத் சேவை உள்ளது. அதாவது சென்னை - கோவை இடையே உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும். இது போக மாநிலத்திற்கு வெளியே ஒரு வந்தே பாரத் சேவை உள்ளது. மேலும் சென்னை - பெங்களூர் - மைசூர் வரை உள்ளது.
வந்தே பாரத் சாதாரண ரயில்: இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது வந்தே பாரத் சாதாரண ரயில் கொண்டு வரப்பட உள்ளது. வந்தே பாரத் சாதாரண் ரயில் என்பது சாதாரண மக்கள் பயணிக்கும் வந்தே பாரத் ரயில் என்பதை குறிப்பது ஆகும். இதில் ஏசி இல்லாத 8 கோச்சுகள் கொண்ட சேவை தொடங்கப்பட உள்ளது. 12 மூன்றாம் தர ஏசி கோச்சுகள், 2 முதல் தர ஏசிகளும் கொண்ட 22 பெட்டி ரயில் ஆகும். தற்போது இருக்கும் வந்தே பார்த் ரயிலில் உள்ளது போன்ற அதே வசதிகள் இதிலும் இருக்கும்.
( வந்தே பாரத் ரயிலில் பயணிக்க போறீங்களா? உங்களுக்குத்தான் இந்த செய்தி.. ரயில்வே புதிய முடிவு )
அதாவது மாடர்ன் தோற்றம், உள்ளே பயோ டாய்லெட், தானாக மூடும் கதவும், அதிக வேகம், சிசிடிவி கேமரா, சுத்தம் என்று எல்லா வசதிகளும் இருக்கும். ஆனால் புக்கிங் செய்தால் மட்டுமே பயணம் என்ற நிலை இருக்காது. ஒரு சில பெட்டிகளில் இதில் ஏசி இருக்காது. இதனால் கணிசமான கட்டணம் குறையும்.

கட்டணம் குறையும்: செலவு அதிகமாக குறைவதால் டிக்கெட் கட்டணம் பாதிக்கு பாதி குறையும். தற்போது இருக்கும் ரயிலில் டிக்கெட் கட்டணம் 1500 ரூபாயாக இருக்கிறது என்றால்.. சாதாரண ரயிலில் 750 ஆக இருக்கும். இந்த சாதாரண் ரயிலில் ஜன்னல்கள் திறக்கும் வகையில் இருக்கும். இதனால் ஏசிக்கு பதிலாக வெளிக்காற்று உள்ளே வரும். வந்தே பாரத் ரயிலில் கட்டணம் அதிகம் இருப்பதாக புகார் வைக்கப்பட்ட நிலையில் வந்தே பாரத் சாதாரண் ரயில் கொண்டு வரப்பட உள்ளது.
புகைப்படம்: இந்த நிலையில்தான் வந்தே பாரத் சாதாரண ரயிலின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. சாதாரண ரயிலின் புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. பார்க்க பழைய மாடல் சாதாரண ரயில் போலவே இந்த ரயில் காட்சி அளிக்கிறது. அதிலும் சாதாரண ஜன்னல்கள், சாதாரண நுழைவு வாயில்களை வைத்து இந்த ரயில் மிக அடிப்படையான முறையில் உருவாக்கப்பட்டு உள்ளது. பார்க்க பழைய மாடலில் இருக்கும் இந்த ரயில் இணையம் முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications