ம.பி.யில் போய் "அவரை" பற்றி பேசலாமா? மணிப்பூரில் பாஜகவே கலவரத்தை தூண்டுகிறதா? முக்கிய புள்ளி
சென்னை: மத்திய பிரதேசத்தில் போய் ஏன் வாரிசு அரசியலை பேசுறீங்க என மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அரசியல் விமர்சகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஒன் இந்தியா அரசியல் சேனலுக்கு அரசியல் விமர்சகர் பார்த்திபன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மோடிக்கு எதிராக ஒரு வலிமையான கூட்டணி உருவாக ஆரம்பித்துவிட்டது. இது ஒரு நல்ல விஷயம். ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகள் வலிமையாக இருப்பது நாட்டிற்கு நல்லது. அசுர பலத்துடன் ஒரு கட்சி ஆட்சியில் இருக்கிறது.

யாருடைய கருத்துகளையும் கேட்காமல் நம் இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது என்றைக்குமே ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எனவே ஒரு வலிமையான எதிர்க்கட்சி கூட்டணி உருவாகிறது என்பது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லது என நான் பார்க்கிறேன். இந்த கூட்டணி வலிமையானது அல்ல என என்டிஏ கூறுவது அச்சத்தின் காரணமாக என்றுதான் நான் பார்க்கிறேன்.
எதிர்க்கட்சிகள் ஒன்று சேர மாட்டார்கள் என நினைத்தனர். பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கவே நடக்காது என நினைத்தனர். ஆனால் அந்த கூட்டம் நடந்து முடிந்தது. முக்கியமானவர்கள் 15 பேர் கலந்து கொண்டனர். அடுத்தபடியாக பெங்களூரில் ஒரு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு 26 பேர் போயிருக்கிறார்கள். அடுத்தது மகாராஷ்டிராவில் நடக்க போகிறது. இப்படியாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

யார் யாரெல்லாம் ஒரே மேடையில் உட்கார மாட்டார்கள் என என்டிஏ கூட்டணி சொன்னதோ அவர்கள் எல்லாம் கலந்து கொண்டனர். இந்த யதார்த்தத்தை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கும் போட்டி, டெல்லியில் காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் போட்டி, கேரளாவில் மார்க்சிஸ்டுக்கும் காங்கிரஸுக்கும் போட்டி, இப்படி இருக்கும் போது இவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பது எப்படி சரியாக இருக்கும் என்பதற்கு நான் இரு பதில்களை கூறுகிறேன்.
2024 இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் யார் வர போகிறார்கள் என்பதுதான் கேள்வியாக உள்ளது. இது மாநிலத்திற்கான தேர்தல் அல்ல. அப்படியிருந்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் பிரச்சினை எழும். மேலும் இவர்களுடைய ஒற்றை நோக்கம் மத்தியில் உள்ள பாஜக அரசை அகற்றுவதுதான். மாநில கட்சிகளுக்கிடையே இருக்கும் முரண்கள் யாருக்குத்தான் இல்லை.
இவர்கள் டெல்லியில் நடத்திய கூட்டத்தில் 38 கட்சிகளில் பல கட்சிகளுக்கு எம்பிக்களே இல்லை. ஒரு எம்பிக்கள் கூட இல்லாத கட்சிகள் 8 பேர். ஒரே ஒரு எம்பி வைத்திருக்கும் கட்சிகள் 9 பேர். 2 எம்பிக்களை வைத்திருக்கும் கட்சிகள் 3. தமிழகத்திலிருந்து கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு யார் யாரெல்லாம் போனார்கள். அவர்களுக்கெல்லாம் எம்பிக்கள் இருக்கிறார்களா. என்றைக்காவது இந்த கட்சிகள் எல்லாம் எம்பியாகி பார்த்திருக்கிறீர்களா.
எதிர்க்கட்சிகள் 26 பேரை காட்டினால் நாங்கள 38 பேரை காட்டுகிறோம் என கணக்கு காட்டுவதற்காகவே பாஜக கூட்டணி இப்படி செய்துள்ளது. என்சிபி கட்சியை உடைத்துவிட்டார்கள், அதிமுகவை உடைத்துவிட்டார்கள். எனவே இந்தியா கூட்டணியை விட என்டிஏ கூட்டணியில்தான் முரண்பாடுகள் அதிகம். 9 ஆண்டுகள் ஆட்சிதான் என்டிஏ கூட்டணி எதிரி. அதில் உள்ள சரிவுகளை எப்படி சரி செய்யலாம் என்பதைதான் அவர்கள் யோசிப்பார்கள்.
இத்தனை வலுவாக இருக்கும் என்டிஏ ஏன் கர்நாடகா சட்டசபை தேர்தலில் தோற்றது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மத்திய பிரதேசத்தில் போய் கருணாநிதி குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன. வாரிசு அரசியல் குறித்து பேச வேண்டும் என்றால் மற்ற கட்சிகளின் வாரிசு அரசியலை பேச வேண்டியதுதானே. அப்படியென்றால் இவர்களுடைய மண்டைக்குள் திமுகதான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் திமுகதான் இவர்களுடைய கண் முன்பும் தூக்கத்திலும் பெரிய எதிரிகளாக தெரிகிறார்கள்.
பாஜகவோ தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள். பாஜக அரசின் சாதனைகளை விளக்க வேண்டியதுதானே. மோடி இந்தியாவை காக்க வந்த ரட்சகன் என்கிறார்களே, ஏன் குட்டி மாநிலமான மணிப்பூரை காக்கவில்லை. பிரதமர் ஏன் மணிப்பூருக்கு போகவில்லை. இவர்கள் யாரை பப்பு என அழைத்தார்களோ அந்த ராகுல் காந்தி மணிப்பூர் போகிறாரே. 100 பேருக்கு மேல் மணிப்பூரில் இறந்துவிட்டார்கள். இதுவரை பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தை பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் அங்கு பிரதமர் பேச தயாராக இல்லை என்ற போது இது ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகார நாடா? ஜனநாயக நாடுதானே, அப்படி என்றால் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் ஆளும் கட்சி பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். கலவரத்தை யார் தூண்டிவிடுகிறார்களோ அவர்களை அடக்குங்கள். மணிப்பூரில் கலவரத்தை அடக்க முடியாவிட்டால் அங்கு முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும். இவ்வாறு பார்த்திபன் தெரிவித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications