தமிழகத்தில் உள்ள 47 கோயில்களின் நிர்வாக அதிகாரிகள்.. சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு பரபரப்பு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 47 கோவில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செயல் அலுவலர்கள் பணியில் நீடிக்கிறார்களா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் மொத்தம் 36 ஆயிரத்து 488 கோயில்கள், 56 திருமடங்கள், திருமடத்துடன் இணைந்தபடி 58 கோயில்கள் இருக்கின்றன. இவை தவிர, 17 சமணக் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமாக நன்செய், புன்செய், மானாவாரி என்று 4 லட்சத்து 78 ஆயிரத்து 348 ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன.

இதுமட்டுமின்றி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 22,600 கட்டிடங்கள், 33,665 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதுதவிர 1 லட்சத்து 23 ஆயிரத்து 729 பேருக்கு விவசாய நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. வாடகை மூலம் மட்டும் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஆண்டுக்கு ரூ.58.68 கோடி வருவாய் கிடைப்பபதாக கூறப்படுகிறது. கோயில்கள் மற்றும் கோயில் நிலங்கள் மற்றும் கட்டிடங்களை அந்தந்த கோயில்களின் செயல் அலுவலர்கள் தான் கவனித்து வருகிறார்கள். இந்த செயல் அலுவலர்களை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை நியமிக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களை நிர்வகிக்க, எந்த நியமன உத்தரவும் இல்லாமல் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி, டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், எந்த நியமன உத்தரவு இல்லாமலும், கால வரம்பு இல்லாமலும் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் உள்ள 47 கோவில்களின் பட்டியலை அளித்து அங்கு செயல் அலுவலர்கள் நியமனம் குறித்து அறநிலைய துறை ஆணையரிடம் விளக்கம் கேட்ட போது, அவர்கள் பணியில் தொடர தடையில்லை என தெரிவிக்கப்பட்டது என குற்றம் சாட்டப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, அறங்காவலர்கள், தக்கார்கள் இருந்தாலும் செயல் அலுவலர்களை நியமிக்க முடியும், அவர்கள் ஐந்து ஆண்டுகள் பணியில் நீடிக்கும் வகையில் 2015ம் ஆண்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்றார்.
இதையடுத்து, மனுதாரர் குறிப்பிடும் 47 கோவில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செயல் அலுவலர்கள் பணியில் உள்ளனரா என்பது குறித்து விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மஅர்ச் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications