சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருத்துக் கணிப்புகளில்.. ஆமை வேகத்தில் அதிமுக.. "ஜெயலலிதா"வை மறந்ததுதான் காரணமா?

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளிலும் சரி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் சரி அதிமுகவுக்கு தோல்வி முகம் என்பது எதன் பிரதிபலிப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது.

எந்த ஒரு அரசாக இருந்தாலும் அதன் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் திணிக்கப்பட்ட திட்டங்கள் என பல பக்கம் இருக்கும். மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி ஒரு அரசு நிர்வகிக்கும் பதவிக்காலமே அந்த அரசு மீண்டும் அமைய வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டு தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் ஆகும். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணியே ஆட்சி அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடும் தட்டுப்பாடு.. மும்பையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி திடீரென நிறுத்தம்.. மக்கள் கவலை கடும் தட்டுப்பாடு.. மும்பையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி திடீரென நிறுத்தம்.. மக்கள் கவலை

கருத்துக் கணிப்புகள்

கருத்துக் கணிப்புகள்

அது போல் நேற்றைய தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதிலும் திமுக கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும் என தெரிகிறது. என்னதான் அதிமுக கூட்டணி ஆதரவாளர்கள் கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை இல்லை என கூறினாலும் எதார்த்தம் என்று உள்ளதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

கவலை

கவலை

தமிழகத்தில் ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. முன்பெல்லாம் அதிமுக எந்த தொகுதியில் போட்டியிடுகிறது, அதன் வேட்பாளர் யார், அவர் மக்கள் நலப்பணியாற்றுவாரா என்பதை பற்றியெல்லாம் மக்கள் கவலைப்பட்டதில்லை.

போயஸ் தோட்டம்

போயஸ் தோட்டம்

காரணம் தி அயர்ன் லேடி ஜெயலலிதாதான். அதிமுக போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே மக்களின் கண்களுக்கு ஜெயலலிதாவாகவே தெரிந்தனர். மக்களுக்கு விரோதமான திட்டங்களை ஜெயலலிதா அங்கீகரிக்கமாட்டார். எந்த எம்எல்ஏவோ, அமைச்சரோ தவறு செய்தால் அவர்கள் போயஸ் தோட்டத்திற்கு வரவழைக்கப்பட்டு டோஸ் விழும்.

தேர்தல்

தேர்தல்

அமைச்சர் பதவி பறிக்கப்படும். அடுத்த தேர்தலில் வாய்ப்பிருக்காது என மக்களுக்கு தெரியும். ஆனால் எதுவுமே ஜெயலலிதா மறைந்த பிறகு வந்த அரசு பின்பற்றவில்லை. எட்டு வழிச்சாலை திட்டம் வேண்டாம் என மக்கள் கூறுகிறார்கள். ஆனால் பலருக்கு சோறு போடும் அந்த திட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும் என எடப்பாடி அரசு முடிவு செய்துள்ளது.

மாநிலம்

மாநிலம்

அது போல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராட வந்த மக்களை காக்கை, குருவிகளை போல் சுட்டுத் தள்ளியது யாராலும் ஜீரணிக்க முடியாததாகிவிட்டது. அது போல் நீட் தேர்வு, மருத்துவர் கனவுடன் இருக்கும் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டாலும் நீட் நம் மாநிலத்தை விட்டு சென்றபாடில்லை. இதே ஜெயலலிதா இருந்த போது நீட் தேர்வு நுழையவே இல்லை.

வைரஸ் நோய்

வைரஸ் நோய்

அடுத்ததாக கொரோனா, சாதாரண ஒரு வைரஸ் நோயை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் ஊரடங்கை போட்டு பல ஏழைகள் ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாமல் செய்தது, பல தொழில் நிறுவனங்கள் முடங்கி கடனாளியானது உள்ளிட்டவை இன்றளவும் மக்கள் மனதில் ஆறாத வடுக்களாக மாறியுள்ளன. இவையே தேர்தலில் பிரதிபலித்ததாகவே பார்க்கப்படுகிறது.

English summary
Exit poll 2021: What is the reason behind failure of AIADMK in polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X