முதலமைச்சரின் காலை உணவு திட்டம்.. நகர்ப்புறங்களிலும் விரிவாக்கம்.. சென்னையில் துவக்கி வைத்த ஸ்டாலின்
சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இன்று அறிமுகமாகியிருக்கிறது.. சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் இந்ததிட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.. பஞ்சாப் முதல்வர் பகவத் மான் சிறப்பு விருந்தினராக வந்துள்ள நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் விரிவுப்படுத்தியிருக்கிறார்... இதன் மூலம் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் 2022 செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி, முதல்வர் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்..

இத்திட்டம் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவும், அடுத்த வருடமே அதாவது 2023 ஆகஸ்ட் 25ம் தேதி திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் இந்த காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்..
ஆய்வறிக்கை சொல்வதென்ன
இந்த காலை உணவு திட்டத்தினால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன் குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது. 90%க்கும் அதிகமான குழந்தைகள் முந்தைய பாடங்களை நினைவு கூர்வது அதிகரித்துள்ளது, ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆரோக்கியமும் மேம்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
தமிழ்நாட்டின் காலை உணவுத் திட்டத்தை கனடா அரசும் தங்கள் நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ள நிலையில், நேற்றைய தினமும் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கிடைத்த நன்மைகள் குறித்து அரசின் செய்தித்தொடர்பாளர் அமுதா, செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அமுதா தந்த லிஸ்ட்
அதில், "காலை உணவு உண்டதால் பசியால் ஏற்படும் சோர்வு குறைந்து, பாடங்களை கவனமாகக் கேட்கவும் ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுறுசுறுப்பாக பதிலளிக்கவும் மாணவர்கள் தயாராக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது.
பள்ளிகளில் தினசரி காய்கறிகள், பருப்பு, தானியங்கள் அடங்கிய சத்தான உணவுகள் வழங்கப்படுவதால், குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பழகியுள்ளனர். பள்ளிகளில் கிடைக்கும் உணவை வீட்டு உணவிலும் பின்பற்ற வேண்டும் என்று குழந்தைகள் பெற்றோரிடம் கேட்டு வருவது பெற்றோர்கள் தெரிவித்த முக்கியமான மாற்றமாகும்.
மாணவர்களில் சுத்தம், சுகாதாரப் பழக்கவழக்கங்களும் அதிகரித்துள்ளன. பள்ளிகளில் குழந்தைகள் கை கழுவி சாப்பிடும் பழக்கம் வளர்க்கப்பட்டுள்ளது" என்றெல்லாம் பெருமிதம் தெரிவித்திருந்தார்.
முதல்வர் பெருமிதம்
அதேபோல 3 நாட்களுக்குமுன்புகூட, தமிழக முதல்வர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் குறித்து தன்னுடைய தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.. அதில், "காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது. அவர்களின் அறிவு வளர்கிறது. பெற்றோரின் மனதில் மகிழ்ச்சிப் புன்னகை மலர்கிறது. தமிழ்நாடு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இன்று துவக்கி வைக்கிறார்
இத்திட்டத்தில், இனி 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள். நீதிக்கட்சி முதல் நமது திராவிட மாடல் அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்" என்று தெரிவித்திருந்தார்.
அத்துடன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "வரும் 26 அன்று நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்கிறோம். நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும். தமிழ்நாடு நாளும் உயரும்" என்று முதல்வர் பதிவிட்டிருந்தார்.
இன்று விரிவாக்கம்
அதன்படியே, 2,429 நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. .
நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை, சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்..
இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.. இந்த விழாவுக்கு வருகை தந்த முதல்வருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications