LPG சிலிண்டரில் CNG கேஸை நிரப்பும் மக்கள்! ஆபத்து! சிலிண்டர் வெடிக்கும் அபாயம்! வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஆட்டோ, கார்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி கேஸை மக்கள் நிரப்பி செல்வது ஆபத்தான செயல் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும் கேஸ் சிலிண்டர்களில் சிஎன்ஜியை கொடுப்பதும் சட்டபடி தவறு என்றும் தெரிவிக்கிறார்கள்.

வணிக LPG கடந்த இரு நாட்களான விநியோகம் பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்டது அல்லது மிகக் குறைவாக இருக்கிறது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள் மெனுவை குறைத்தன (இட்லி, தோசை, சப்பாத்தி மட்டும்; பிரியாணி, கிரில் போன்றவை நிறுத்தம்).

cng lpg cylinder

தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் "கையிருப்பு 1-2 நாட்களுக்கு மட்டுமே போதும்; இல்லாவிட்டால் 1 லட்சம் உணவகங்கள் மூடும் அபாயம் இருப்பதாக" எச்சரிக்கை விடுத்தன. இதனால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, மாற்று ஏற்பாடுகள் கோரினார். மாநில அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் கையிருப்பு விவரம் கேட்டது. அதில் போதிய அளவுக்கு சிலிண்டர்கள் கையிருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

வீட்டு சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தப்பட்டது
வீட்டு சிலிண்டர் ரூ. 60, வணிக சிலிண்டர் ரூ.115 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல ஹோட்டல்கள்/உணவகங்கள் மார்ச் 11-ஐ விடுமுறையாக அறிவித்தன. "LPG supply இல்லாததால் இன்று ஹாலிடே" என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சில உணவகங்கள் மெனுவை மேலும் குறைத்தன அல்லது தற்காலிகமாக நிறுத்தின.

இண்டக்ஷன் ஸ்டவ் விற்பனை வெகுவாக அதிகரித்தது - கடைகளில் ஸ்டாக் விரைவில் தீர்ந்தது; ஆன்லைன் (Flipkart, Amazon, Blinkit போன்றவை) Sold Out நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை போன்ற சில இடங்களில் பொதுமக்கள் சாலையில் கேஸ் சிலிண்டர்களை போட்டு போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடி திருச்சியில் பேசியபோது: "கொரோனா போல இதையும் சமாளிப்போம்; பீதி வேண்டாம்" என்றார்.

இந்த நெருக்கடி வணிகத் துறையை (ஹோட்டல்கள், உணவு டெலிவரி, MSME) அதிகம் பாதித்துள்ளது. வீட்டு உபயோகத்துக்கு இன்னும் கட்டுப்பாடான விநியோகம் நடக்கிறது, ஆனால் பீதி காரணமாக இண்டக்ஷன் ஸ்டவ் தேவை பெரிதும் உயர்ந்துள்ளது.

அது போல் நேற்று இரவு முதலே பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது. இதனால் சென்னை, திருவண்ணாமலை, தஞ்சை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெட்ரோல் வாங்க மக்கள் குவிந்து வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவே பல பகுதிகளில் குவிந்து பெட்ரோல் வாங்கிய நிலையில் அப்படியே அதிகாலை வரை கூட்டம் நீடித்து வருகிறது. பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என பங்க் உரிமையாளர்கள் கூறியிருக்கும் நிலையில் இது போன்ற போக்கு நீடித்து வருகிறது.

மேலும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் சிலிண்டர்களுடன் ஏஜென்சிகளில் சென்று சண்டையிடுகிறார்கள். ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டு சிலிண்டர்கள் வராதவர்களும் ஏஜென்சிகளை நெருக்குகிறார்கள்.

இந்த நிலையில் பல இடங்களில் ஆட்டோ, கார்களுக்கு பயன்படுத்தும் CNG கேஸை, சமையல் எரிவாயு சிலிண்டரில் பிடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்களுக்கு சிலிண்டர்களுடன் படையெடுக்கும் மக்கள் சிஎன்ஜியை பிடித்துச் செல்கிறார்கள்.

இது ஆபத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். கேஸ் சிலிண்டர்கள் காலியாக இருந்தாலும் அதில் கொஞ்சம் கேஸ் இருக்குமாம். அதாவது பிரஷர் காரணமாகத்தான் கேஸ் எழும்பி நாம் ஸ்டவ்வை பற்ற வைத்திருக்கிறோம். ஆனால் அடியில் இருக்கும் போது பிரஷர் எழும்பாததால் அவை சிலிண்டரிலேயே தேங்கி விடும்.

இத்துடன் சிஎன்ஜியை கலப்பது ஆபத்தானது என்கிறார்கள். கேஸ் சிலிண்டரில் உள்ள கேஸின் அடர்த்தியும் சிஎன்ஜியில் உள்ள கேஸின் அடர்த்தியும் வெவ்வேறானவை என்பதால் பிரஷர் காரணமாக வெடிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

சிஎன்ஜியை எல்பிஜி சிலிண்டரில் நிரப்பினால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும். எல்பிஜி சிலிண்டர்கள் குறைந்த அழுத்தத்துக்கு (சுமார் 10-15 bar) வடிவமைக்கப்பட்டவை. சிஎன்ஜி அதிக அழுத்தத்தில் (200-250 bar) நிரப்பப்படும். இதனால் சிலிண்டர் வெடிக்கும் அபாயம் உள்ளது. வெடிப்பு ஏற்பட்டால் தீ விபத்து, காயங்கள், உயிரிழப்பு ஏற்படலாம். மேலும் இது போல் வீட்டு உபயோக சிலிண்டரில் சிஎன்ஜியை நிரப்புவது சட்டபடி குற்றம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+