விவசாயிகளுக்கு குஷி.. பயிர் காப்பீடு திட்டம்..நிறைய டைம் இருக்கு.. தமிழக அரசு தரும் பெரிய நம்பிக்கை
சென்னை: பயிர் காப்பீடு செய்ய மத்திய அரசு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அமைச்சர் மெய்யநாதன் இதுகுறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மகசூல் பாதிக்கும்போது இழப்பீடு வழங்குவதற்காக மத்திய வேளாண் துறை அமைச்சகம் சார்பில், இந்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்து கொடுக்கப்படுகிறது.
பயிர்க்காப்பீடு: அந்தவகையில், இந்த பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற வேண்டுமானால், விவசாயிகள் நவம்பர் 15-ந் தேதிக்குள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு வருடமும் வழக்கமாக இருந்து வருகிறது. நேற்றைய தினம் அதாவது நவம்பர் 15-ம் தேதி தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருப்பதாலும், தீபாவளி பண்டிகை காலம் என்பதாலும், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களாலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. எனவே, இன்னும் சில நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்..
மத்திய அரசு: இதுகுறித்து தமிழக வேளாண் ஆணையம் சார்பிலும், மத்திய வேளாண் துறைக்கு கடிதம் எழுதப்பட்ட நிலையில், கால அவகாசத்தை வரும் 22-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டிருக்கிறது. கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் இருந்து கூடுதல் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இதற்கான சேவை மையங்கள் விவசாயிகளுக்கு ஏற்ப திறந்து இருக்கும் என்று தமிழக அரசும் உறுதி தந்துள்ளது.
இநிநிலையில், மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில் மழைநீரில் சூழ்ந்துள்ள சம்பா சாகுபடி பயிர்களை, அமைச்சர் மெய்யநாதன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பிறகு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பிறகு செய்தியாளர்களிடமும் பேசினார்.
மயிலாடுதுறை: அப்போது, 'இந்த 3 நாட்களில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 16 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது.. சீர்காழி பகுதியில் 1088 ஹெக்டேர் பயிர்களும், கொள்ளிடம் பகுதியில் 1200 ஹெக்டேரில் பயிர்களும், செம்பனார்கோயில் பகுதியிலும் 600 ஹெக்டேரில் நெற்பயிர்களும் மழைநீரால் சூழ்ந்துள்ளன. ஆக மொத்தம் 3000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிரானது மழைநீரால் சூழ்ந்துள்ளது.
சீர்காழி தாலுக்கா, காத்திருப்பு ஊராட்சியில் உயிரிழந்த கனகராஜ் என்ற விவசாயின் குடும்பத்திற்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை உடனடியாக வழங்கியுள்ளோம். விவசாயிகளின் பயிர் காப்பீடு திட்டத்தில் கடந்த வருடம் 34 கோடி ரூபாய் காப்பீடு நிறுவனத்திலிருந்து பெற்றுத் தந்துள்ளோம். அதேபோல இந்த வருடமும் கணக்கீடு செய்து வழங்கப்படும்.

திமுக அரசு: இந்த வருடம் பயிர் காப்பீடு செய்ய சுமார் 68 ஆயிரம் ஹெக்டேருக்கு சுமார் 52 ஆயிரம் ஹெக்டேருக்குத்தான பயிர் காப்பீடு விவசாயிகள் செய்துள்ளனர்.
பயிர் காப்பீடு செய்ய இந்த மாதம் 22 -ம் தேதி வரை கால நீட்டிப்பை தமிழக முதல்வர் பெற்றுத்தந்துள்ளார்.. அதனால், விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகள் பாதிக்காத வகையில் , இந்த தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
சரிசெய்யப்படும்: மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழையில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்க மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் ஆகியோர் தயார் நிலையில் இருக்கின்றனர்.. உப்பனாறு ஆழப்படுத்த வேண்டும், வடிகால் சரிசெய்ய வேண்டும், பழைய கதவணைகளுக்கு பதிலாக புதிய கதணைகள் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகள் சரிசெய்யப்படும்" என்றார் அமைச்சர் மெய்யநாதன்.












Click it and Unblock the Notifications