தாம்பரம்.. கிளாம்பாக்கம்.. எங்க போகணும்னாலும் கவலையே இல்ல! சென்னையில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள்!
சென்னை: சென்னையில் நாளை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கூடுதல் பேருந்துகளின் விவரங்கள் இங்கே!
சென்னையில் பெரும்பாலானோர் புறநகர் ரயில்களை தங்கள் அன்றாட பயணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அலுவலகங்கள், வேலைக்குச் செல்ல என லட்சக்கணக்கானோர் நாள்தோறும் புறநகர் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தெற்கு ரயில்வே, பயணிகளின் வசதிக்கு ஏற்ப, அதிகளவில் ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், "ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ரயில்வே தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இரு மார்க்கத்திலும் சுமார் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
ஆகையால், பொதுமக்கள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், மெட்ரோ ரயில்களைக் கூடுதலாக இயக்கவும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது வாரமாக ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிக்காக இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், நாளை கூடுதலாக 150 பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தென்னக ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்ரவரி 3) காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை இயங்கும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராட்வே முதல் அண்ணா சாலை வழியாக தாம்பரம் வரை செல்லும் 18A பேருந்துகள் 60, பிராட்வே முதல் தி.நகர், எக்மோர் வழியாக தாம்பரம் செல்லும் 18G பேருந்துகள் 20, கிண்டி முதல் கிளாம்பாக்கம் வரை செல்லும் 18ACT பேருந்துகள் 10, கொருக்குப்பேட்டை முதல் தாம்பரம் வரை செல்லும் B18 பேருந்துகள் 20, பிராட்வே முதல் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் E18 பேருந்துகள் 20, தியாகராய நகர் முதல் கூடுவாஞ்சேரி வரை செல்லும் G18 பேருந்துகள் 10 என மொத்தம் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications