இதெல்லாம் ரொம்ப ஓவர்யா.. சென்னை - மதுரைக்கு போக ரூ. 4 ஆயிரமா?.. கொந்தளிக்கும் மக்கள்
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி வருவது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு சாதாரண நாட்களில் படுக்கை வசதியுடன் கூடிய இருக்கைக்கு 900 ரூபாய் வசூலித்து வந்த நிலையில் தற்போது 4,900 ரூபாய்க்கு வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகைளில் ஒன்றாகும்.. இந்தியாவில் தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். புத்தாடை, இனிப்பு, பட்டாசு என ஊரே களைகட்டும். இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை, தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். பண்டிகைக்க காலங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். பயணிகளின் வசதிக்காக பண்டிகையையொட்டி அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை இயக்கப்படவுள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு தீபாவளிக்கு தொடர்ந்து நான்கு நாள்கள் விடுமுறை வருகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள பொதுமக்கள் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
சென்னையில் இருந்து சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக 3 நாள்கள் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே படுக்கை வசதிகொண்ட பேருந்துகளின் முன்பதிவு பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், தொலைதூரம் செல்லும் பொதுமக்கள் பலரும் ஆம்னி பேருந்துகளையே நம்பியுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரும்பாலான ஆம்னி நிறுவனங்கள் பேருந்து பயணக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 100, 200 ரூபாய் அதிகம் என்றால் கூட பரவாயில்லை. ஆயிரக்கணக்கில் உயர்த்தி வசூலிக்கின்றனர். ஒரு குடும்பத்தில் இருந்து சொந்த ஊர் சென்றால் சாதாரண கட்டணத்தில் இருந்து கிட்டத்தட்ட 5,000 ரூபாய்க்கு மேல் ஒரு கும்பத்துக்கு செலவாகும் நிலை உள்ளது.
பொதுவாக சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு சாதாரண நாள்களில் இருக்கைக்கு ரூ. 800 முதல் ரூ. 1,000 வரை கட்டணமாக வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்வதைப் பயன்படுத்தி தற்போது இருக்கைக்கு ரூ. 2,000 முதல் ரூ. 2,500 வரை வசூலிக்கப்படுகிறது.
அதேபோல, படுக்கை வசதிக்கு ஒரு நபருக்கு ரூ. 900 முதல் ரூ. 1,200 வரை சாதாரண நாட்களில் வசூலிக்கப்படும். இந்த தொகை தற்போது இரண்டு, மூன்று மடங்காக உயர்த்தப்பட்டு தற்போது ரூ. 2,300 முதல் ரூ. 4,900 வரை வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 1200 ரூபாய் வரை வசூலிக்கப்படும் தொகை தற்போது 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
சென்னை டூ திருநெல்வேலி செல்வதற்கு ரூ. 3,800 வரையும், சென்னை - கோவைக்கு ரூ. 4,200 வரையும், தூத்துக்குடிக்கு ரூ. 3,300 வரையும், திருச்சிக்கு ரூ. 1,600 முதல் ரூ. 4,900 வரையும் பேருந்து பயணக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள் பலரும் மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். இதுக்கு ஒரு எண்டே இல்லையா என்பது போல ஒவ்வொரு பண்டிகைக் காலங்களையும் பயன்படுத்தி ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, உரிய ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாகவும் உள்ளது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications