சூப்பர் நியூஸ்.. சார் பதிவாளர் அலுவலகத்தில்.. பத்திர பதிவுக்கு நாளை கூடுதல் டோக்கன்: தமிழக அரசு மாஸ்
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் பல்வேறு அதிரடிகளை பத்திரப்பதிவு துறை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், இப்போதும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பதிவுத்துறையை பொறுத்தவரை, நீண்டகாலமாகவே, பதிவுக்கட்டணங்களை உயர்த்தப்படாமலேயே இருந்தது.. சில மாதங்களுக்கு முன்புதான், கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

எனினும், பதிவுத்துறையில் வருவாய் வெகுவாக குறைந்துவிட்டதாக தகவல்கள் கசிந்தன.. அதாவது, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை இறுதி வரையிலான, 4 மாத காலத்தில், வெறும் 5,611 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டிருக்கிறதாம். 4 மாத இலக்கில், இந்த 1,053 கோடி ரூபாய் என்பது மிகவும் குறைவாகும்.
வருவாய் : பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டும்கூட, எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை என்றும், 7 மாதங்களில், 11,662 கோடி ரூபாய் வசூலாவதற்கு பதிலாக, 9,000 கோடி ரூபாய் கூட வசூலாகவில்லை என்றும் கூறப்பட்டன. இதற்கெல்லாம் காரணம், பொது அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பதிவுக்கான கட்டணங்களையும், குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகளையும் அடுத்தடுத்து உயர்த்தியதுதான் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
பதிவுத்துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படவில்லை என்பதால்தான், சமீபத்தில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது.
கோரிக்கைகள்: இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றே கருதப்பட்டது என்றாலும், பொது அதிகாரம், செட்டில்மென்ட், பாகப்பிரிவினை, கட்டுமான ஒப்பந்தம் போன்ற பத்திரங்களின் பதிவு கட்டணங்களில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கைகள் இன்னமும் வலுத்து கொண்டேயிருக்கிறது.
இதுகுறித்து பதிவுத்துறை விரைவில் பரிசீலிக்கும் என்றே நம்பப்படுகிறது.. மற்றொருபக்கம், வருவாய் இலக்கை எட்டுவதற்காக, அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்த ஆலோசனையையும் பதிவுத்துறை நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.. இதனிடையே, சுப முகூர்த்த நாட்களில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும், டோக்கன்கள் எண்ணிக்கை அதிகரித்து விற்கப்பட்டு வருகிறது.
இப்படித்தான், 2 மாதங்களுக்கு ஆடி 18-ஐ முன்னிட்டு, பதிவுக்காக தரப்படும் டோக்கன்களில் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.. அதாவது, ஏற்கெனவே உள்ள 100 முன்பதிவு டோக்கன்களுடன் 50 முன்பதிவு டோக்கன்கள் இணையத்தில் அதிகரிக்கப்பட்டு பொது மக்கள் பயன் பெறும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.100 கோடி வருவாயும் அன்றைய ஒரே நாளில் ஈட்டப்பட்டது மிகப்பெரிய சாதனையாகும்.
அதேபோல, ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான 21.08.2023 அன்றும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் வழங்கப்பட்டன.. அந்தவகையில், நாளையும் சுபமுகூர்த்த தினமாகும்..
கூடுதல் டோக்கன்கள்: எனவே, நாளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது... முகூர்த்த நாளில் அதிகளவில் பத்திர பதிவுகள் நடைபெறுவது வழக்கம்.. அதனாலேயே, கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து, வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: "சுப முகூர்த்த தினமான நாளை (நவ.23) சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்படும்.
மகிழ்ச்சி: வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார். பதிவுத்துறையின் இந்த நடவடிக்கையானது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications