ஆபரேஷன் ஏஞ்சல்! இந்தியாவிற்கு தெரியாமல் அதானியை அமெரிக்கா நாடு கடத்த முடியுமா? இந்த மேட்டர் தெரியுமா
சென்னை: கவுதம் அதானியை கைது செய்ய அமெரிக்காவை சேர்ந்த நியூயார்க் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உள்ளது. சரி இது போன்ற விவகாரங்களில் இந்தியாவின் அனுமதி இன்றி கவுதம் அதானியை அமெரிக்காவின் வெளியுறவு சட்ட அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது. அப்படி இருக்க.. அமெரிக்கா வேறு வழிகளில் அதானியை கைது செய்ய முடியும். அது எப்படி வாருங்கள் பார்க்கலாம்.
பல்வேறு குற்றங்களுக்காக வெளிநாட்டினரை அமெரிக்கா கைது செய்து உள்ளது. அதாவது வேற்று நாட்டின் அனுமதியோடு கைது செய்த அல்லது நாடு கடத்திய வழக்குகள் உள்ளன. நாடுகடத்துதல் என்பது நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் மூலம் செய்யப்படும் ஒன்று. ஆனால் சில

பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள நபர்களைக் கைது செய்ய அமெரிக்கா சில சமயங்களில் இரகசிய நடவடிக்கைகள் அல்லது ராஜதந்திர நடவடிக்கைகளை பயன்படுத்தி உள்ளது. அதற்கான உதாரணங்களை இங்கே பார்க்கலாம்:
"Extraordinary Rendition" என்ற பெயரில் நடத்தப்படும் ஆபரேஷன்:
பொதுவாக வெளிநாடுகளில் பொருளாதார குற்றங்களை செய்து.. அதன்மூலம் அமெரிக்காவில் பொருளாதார பாதிப்புகளை அல்லது விளைவுகளை ஏற்படுத்தியவர்களை கைது செய்ய "Extraordinary Rendition" முறையில் ஆபரேஷன் செய்யப்படும். அதாவது அந்நிய நாட்டின் அனுமதி இல்லாமல் அந்த நாட்டில் உள்ள குற்றவாளி மீது ஆக்சன் எடுக்கப்படும்.
Operation Fallen Angel : இது போக ஆபரேஷன் பாஃலன் ஏஞ்சல் என்ற பெயரிலும் இதேபோல் கைது நடவடிக்கை, நாடு கடத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிஐஏ, எப்பிஐ மூலம் இப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எப்பிஐ உள்நாட்டு விவகாரங்களை மட்டுமே கவனிக்கும். ஆனால் இது போன்ற ஆப்ரேஷன்களில் சிஐஏ போன்ற அமைப்புடன் இணைந்து சர்வதேச ஆப்ரேஷன்களை கூட கூட்டாக செய்யும். எப்பிஐதான் இப்போது அதானி வழக்கை அங்கே விசாரிப்பது குறிப்பிடத்தக்கது.
இது போக Interpol Red Notices கொடுத்து ஒருவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து.. அமெரிக்காவின் நட்பு நாடுகள் எதற்கு சென்றாலும் அந்த தேடப்படும் குற்றவாளி கைது செய்யப்பட முடியும். அமெரிக்கா அதானிக்கு எதிராக இந்த அறிவிப்பை கூட வெளியிடலாம்.
உலகம் முழுக்க பல பொருளாதார குற்றவாளிகளை மற்ற கிரைம் குற்றவாளிகளை கைது செய்துள்ளது.
வழக்கு என்ன?: லஞ்சம் தர முயன்றதாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2100 கோடி ரூபாய் முறைகேட்டில் அவர் ஈடுபட்டதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளது. 2023ம் தேதி இது தொடர்பாக அமெரிக்க எப்பிஐ கவுதம் அதானி உறவினர் சாகர் அதானி நியூயார்க் வீட்டில் ரெய்டு செய்தது குறிப்பிடத்தக்கது.
250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது . கவுதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பின்னணி: கவுதம் அதானி ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். அமெரிக்கா முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டதாக.. அவர்களிடம் உண்மைகளை மறைத்துவிட்டதாகவே அதானி மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் அவரின் Adani Green Energy Ltd 12 கிகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் திட்டத்தில் கையெழுத்து போட்டு உள்ளது. இதற்காக பல கோடிகளை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு தந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்த அமெரிக்க நிறுவனங்களிடம் அதை மறைத்து .. 265 மில்லியன் டாலரை அதானி குழுமம் லஞ்சமாக கொடுக்க முயன்றதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. இந்த புகாரில் உள்ள முக்கியமான விஷயம், சோலார் திட்டத்திற்காக அமெரிக்க நிறுவனங்கள் செய்த முதலீட்டு பணத்தை லஞ்சமாக அதானி இந்திய அதிகாரிகளுக்கு தந்துள்ளார். அதாவது அமெரிக்க நிறுவனங்களின் செலவில்.. அதானி லஞ்சம் தந்துள்ளார் அல்லது தர முயன்று உள்ளார் என்று புகாரில் கூறப்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications