மீண்டும் பரவும் கொரோனா.. தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயமா? சுகாதாரத்துறை கொடுத்த பரபர விளக்கம்!
சென்னை: கொரோனா பரவலை தடுக்க தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயம் என்று வெளியான தகவலுக்கு பொது சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள பொது சுகாதாரத்துறை, கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும், மக்கள் முகக்கவசம் கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
2019 மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது. உலகமே கொரோனா வைரஸ் பரவலால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு சுமார் 3 ஆண்டுகள் பிடித்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனா அலை 1, 2 என்று அடுத்தடுத்து வந்த நிலையில், தடுப்பூசி கண்டறியப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மீண்டும் கொரோனா
கொரோனா வைரஸ் பரவலின் போது இந்தியாவில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வீடுகளில் இருந்து வெளியில் வரவில்லை. இதனை ஒரு பழக்கமாகவே மக்கள் பின்பற்றினர். இதன்பின் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபின், முகக்கவசம் அணிவதற்கு தளர்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் பரவல்
கடந்த சில நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. நேற்றைய கணக்கின்படி நாடு முழுவதும் 250க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கேரளாவில் 95 பேரும், தமிழ்நாட்டிலும் 66 பேரும், மகாராஷ்டிராவில் 56 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாஸ்க் கட்டாயமா?
இதனால் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கொரோனா பரவல் தொடர்பான அச்சங்கள் வெளிப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் பரவலால், மீண்டும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை விளக்கம்
பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் பேசுகையில், கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பரவி வரும் தகவல் தவறானது. கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா பரவல் இருக்கிறது.
உண்மை என்ன?
அதற்காக பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு இதுவரை தமிழக அரசு சார்பாக வெளியிடப்படவில்லை. பொது சுகாதாரத்துறை சார்பில் 2 நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் உள்ள செய்தியே உண்மையானது. தேவைப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையாக வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications