சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம்.. தமிழக மருத்துவத்துறை அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் சுற்றித்திரியும் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா பரவல் அதிகரிப்பு.. தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் - விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,472 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 68 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது.

    அதிகபட்சமாக சென்னையில் 624 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 241 பேருக்கும், கோவையில் 104 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.

    Face Mask Mandatory in public places Penalty for not wearing says TN Medical Department

    தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக மருத்துவத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    மருத்துவத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது கொரோனா தொற்று பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரியில் போன்ற நகரங்களில் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டை மாவட்ட நிர்வாகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தினசரி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறையை அறிவுறுத்தியுள்ளார். மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கிருமி நாசினி வைக்கவும், காய்ச்சல் பரிசோதனை செய்யவும் உத்தவிடப்பட்டுள்ளார்.

    பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

    திடீர் வேகம்! இந்தியாவில் விரைவில் கொரோனா 4ஆம் அலை? தமிழகத்தில் பாதிப்பு அதிகரிக்க இதுதான் காரணம்திடீர் வேகம்! இந்தியாவில் விரைவில் கொரோனா 4ஆம் அலை? தமிழகத்தில் பாதிப்பு அதிகரிக்க இதுதான் காரணம்

    English summary
    The medical department has ordered that people wandering in public places must wear masks as the spread of corona is on the rise across Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X