"பேஷியல் ரெகக்னிஷன்".. இரவில் மக்களை போட்டோ எடுக்கும் சென்னை போலீஸ்.. பின்னணியில் முக்கிய காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இரவு நேரத்தில் வெளியே செல்லும் நபர்களின் புகைபடங்களை போலீசார் படம் பிடிக்க தொடங்கி உள்ளனர்.

சித்தார்த் என்ற இளைஞர் நேற்று முதல்நாள் ட்விட்டரில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். நான் சென்னையில் இருக்கிறேன். நான் வேலை முடித்துவிட்டு தில்லை கங்கா நகர் வழியாக சப்வேயில் வந்து கொண்டு இருந்தேன்.

அப்போது இரண்டு போலீசார் என்னை நிறுத்தினர். என்னிடம் பேசிவிட்டு என்னுடைய முகத்தை போட்டோ எடுத்துக்கொண்டனர்.

பேஷியல் ரெகக்னிஷன்

பேஷியல் ரெகக்னிஷன்

அவர்கள் போட்டோ எடுத்த பின் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. போட்டோ எடுத்துவிட்டு என்னை அனுப்பிவிட்டனர். நான் ஏன் என்று கேட்ட போது எதுவும் சொல்லவில்லை. இது என்ன புதிய நடைமுறை என்று ட்விட்டரில் சென்னை போலீஸ் பக்கத்தை டேக் செய்து கேட்டு இருந்தார். இவர் மட்டுமில்லை சென்னையில் பலருக்கு இது அடிக்கடி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. முக்கியமாக சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் பலர் இப்படி போலீசாரை எதிர்கொண்டு உள்ளனர்.

இரவு ஷிப்ட்

இரவு ஷிப்ட்

இரவு நேர ஷிப்ட் முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பலரை போலீசார் இப்படி மறித்து போட்டோ எடுத்து வருகின்றனர். நீங்கள் இரவு நேரத்தில் வீட்டிற்கு வருகிறீர்கள். அப்போது போலீஸ் உங்களை மறித்தாலே பெரிய அதிர்ச்சியாக இருக்கும். திடீரென போலீசார் உங்களை போட்டோ எடுத்தால் இன்னும் பயமாக இருக்கும் அல்லவா? அதுவும் ஏன் போட்டோ எடுக்கிறோம் என்று சொல்லாமல் சென்றால் எப்படி இருக்கும்? ஆனால் போலீஸ் இப்படி செய்வது விதிமீறல் கிடையாது. முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றிற்காக போலீஸ் இப்படி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

போலீஸ் குற்றம்

போலீஸ் குற்றம்

இது தொடர்பாக போலீசார் தரப்பிடம் விசாரித்ததில் சென்னையில் குற்றச்செயல்களை தடுக்கவே போலீசார் இப்படி செய்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில்தான் பொதுவாக பெருநகரங்களில் குற்றச்செயல்கள் நடக்கின்றன. பொதுவாக கிரிமினல்கள் போட்டோக்கள் லிஸ்ட் போலீசின் டேட்டா பேசில் இருக்கும். இதில் போலீசிடம் சிக்காமல் இரவு நேரத்தில் சுற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இந்த முறை உதவும் என்று போலீசார் தரப்பு தெரிவித்து உள்ளது. இரவு நேரத்தில் இப்படி போலீசார் எடுக்கும் போட்டோக்களை உடனே டேட்டா பேசில் வைத்து சோதனை செய்வார்கள்.

குற்றவாளிகள்

குற்றவாளிகள்

அதில் குற்றவாளிகளின் புகைப்படங்களுடன் மேட்ச் ஆகிறதா என்று சோதனை செய்வார்கள். இதன் மூலம் இரவு நேரத்தில் குற்றவாளிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும். அதேபோல் ஒரு ஏரியாவில் குற்றம் நடக்கிறது என்றால், அந்த ஏரியாவில் அப்போது இரவில் சுற்றியவர்களின் புகைப்படங்களை போலீசார் உடனே எடுக்க வசதியாக இருக்கும். குற்றவாளிகளை உடனே கண்டுபிடிப்பதற்கும் இது உதவுகிறது. அதேபோல் குற்ற செயல்களை விசாரிக்கவும் இந்த பேஷியல் ரெகக்னிஷன் உதவும். போலீசாரின் போன்களில் இதற்காக சிறப்பு பேஷியல் ரெகக்னிஷன் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. போட்டோவை இதில் உள்ள கேமரா வழியாக எடுத்தால் போதும். உடனே அவர்கள் போலீஸ் ரெக்கார்டில் இருக்கிறார்களா என்று காட்டிவிடும். இதற்கு முன் சின்ன கிரைம் செய்துவிட்டு ஜெயிலுக்கு போய் இருந்தாலும் தெரிந்துவிடும். சென்னையில் கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் இந்த நடைமுறை அது போன்ற செயல்களை தடுக்கவும் உதவும் என்கின்றனர் போலீசார் தரப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+