“தோல்வி நம்மிடம் இல்லை..” மாணிக்கம் தாகூர் போட்ட ட்வீட்! அப்போ.. தோல்வி யாருக்கு? திமுக ஷாக்!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் நிலையில், ஆட்சியமைக்க பெரும்பான்மைக்காக போராடி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் போட்டிருக்கும் ட்வீட் திமுகவினரை டென்ஷன் அடைய வைத்திருக்கிறது.
மாணிக்கம் தாகூர், தனது x பக்கத்தில், "வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்! தோற்றாலும் தோல்வியில்லை - நம்மிடம்!" - பாரதியார் என பதிவிட்டிருக்கிறார்.

போராடும் தவெக
தவெக என்னதான் பெரிய கட்சியாக உருவெடுத்திருந்தாலும் ஆட்சியமைக்க தேவையான 118 என்கிற நம்பரை எட்டவில்லை. இப்போது வரை 108 தொகுதிகளில் ஜெயித்திருக்கிறது. அதிலும் விஜய் இரண்டு தொகுதிகளில் ஜெயித்திருக்கிறார் என்பதால், மொத்த கணக்கு 107தான் வரும். ஆட்சியமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
காங்கிரஸின் ஆதரவு
அதிமுக, திமுக ஆதரவு கொடுக்காது. எனவே அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளை ஆதரவுக்காக அழைத்து வருகிறது தவெக. குறிப்பாக நேற்று காங்கிரஸிடம் பேசப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் குறித்து ஆலோசித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை, தவெக உடன் சேருவதா? வேண்டாமா? என்பது குறித்த முடிவை தமிழக காங்கிரஸ் கமிட்டியே எடுத்துக்கொள்ளலாம் என்று அனுமதித்திருக்கிறது.
என்ன முடிவு?
எனவே இன்னும் சற்று நேரத்தில் காங்கிரஸின் முடிவு என்ன என்பது தெரிந்துவிடும். காங்கிரஸிடம் மொத்தம் 5 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். எனவே காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கப்போகிறது? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. நிச்சயம் விஜய் உடன் கூட்டணிக்குதான் காங்கிரஸ் போகும் என்பதை பலரும் கணித்து வருகின்றனர். இதனை உறுதி செய்யும் விதமாகத்தான் மாணிக்கம் தாகூரின் ட்வீட் அமைந்திருக்கிறது.
ஆட்சியில் பங்கு
மாணிக்கம் தாகூர் தொடக்கம் முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையை எழுப்பி வருகிறார். அதாவது கூட்டணியின் உதவியுடன் ஆட்சியை பிடித்தால், எங்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நிபந்தனை. இதை திமுக கொஞ்சம் கூட ரசிக்கவில்லை. இதற்காகவே திமுகவினர் காங்கிரஸை திட்ட தொடங்கினர்.
ஆனால், இந்த தேர்தலில் திமுக தோல்வியடைந்திருப்பதால், காங்கிரஸுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை பயன்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மற்றபடி மாணிக்கம் தாகூரின் ட்வீட் திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கூட்டணி தேர்தலுக்காகத்தான்
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாணிக்கம் தாகூர், "தமிழக மக்கள் மதவாதத்தை ஏற்க மாட்டார்கள். கட்சி தலைமை அறிவிக்கும் வரை யார் பேசினாலும் அர்த்தம் இல்லை. தமிழக மக்கள் மதவாதத்தை ஏற்க மாட்டார்கள் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. அதேபோல கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்டதுதான்" என்றும் உடைத்து பேசியிருக்கிறார்.
கூட்டணி தேர்தலுக்காகதான் எனில், திமுகவை உதறிவிட்டு போக காங்கிரஸ் ரெடியாகிவிட்டது என அர்த்தம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications