கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி!
சென்னை: காமராஜர் தலைமையிலான சுமார் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தில் கள்ள நோட்டு பிரச்சனை, மழை வெள்ளம், தமிழ்நாடு பெயர் சூட்டும் போராட்டம் என மாநிலம் ஸ்தம்பித்துப் போய் கிடந்தது. இதுபோண்ற பல பிரச்சனைகள் திமுக ஆட்சிக்கு வருவதற்கு உரமாக அமைந்தன.
1962 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் சட்டசபை நடைபெற்றது. அவை தொடங்கியதும் ஆளுநர் உரையாற்றினார். ஆனால், திமுகவைச் சேர்ந்த அவை சட்டமன்ற உறுப்பினர்கள் 50 பேரும் மேலவை உறுப்பினர்கள் 5 பேரும் ஆக 55 உறுப்பினர்கள் இருசபைக் கூட்டுக் கூட்டகாமராஜர்த்தில் பங்கேற்கவில்லை. 'ஆட்டுக்குத் தாடி எதற்கு? மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு?' என்று திமுக ஆவேசமாகப் பேசிவந்த காலம் அது. "முன்னேற்றக் கழகம் எனக் கட்சியில் பெயர் வைத்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதா?" என்று காமராஜர் திமுகவை விமர்சித்தார்.

இது முன்னேற்றக் கட்சியா?
"நாட்டில் தொழில் வளம் பெருகி எல்லோருக்கும் வேலைக் கிடைத்து சோறு கிடைக்க வேண்டும். அது முக்கியமா? அல்லது நாட்டுப் பிரிவினை முக்கியமா? நாடு பிரிந்தால் தென்னாட்டுக்கு என்ன லாபம்? ஒன்றும் கிடையாது. 45 கோடி மக்கள் இந்தியாவில் வாழ்கிறோம். எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க முடியுமா? பல மொழி பேசுகிறவர்கள், ஜாதிக்காரர்கள், சமயத்தவர்கள் இருக்கின்றனர்.
இப்படி இருக்கும் நாட்டில் பிரிவினை உணர்ச்சியைக் கிளறி விட்டுக்கொண்டு போனால், நாடு என்ன ஆகும்? இதையெல்லாம் மக்கள் சிந்தித்துப் பார்த்து இந்த உணர்ச்சிக்கும் போக்குக்கும் ஆதரவு கிடையாது என்று சொல்லிவிட வேண்டும். முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டு கூச்சல் போட்டால் எதிர் கூச்சல் போட வேண்டும். அவர்கள் கொடி தூக்கினால் கூட அதை எதிர்த்து மக்கள் கொடி தூக்க வேண்டும். அப்பொழுது மக்களே விழித்துக்கொண்டு விட்டார்கள் என்று அவர்களே போய்விடுவார்கள். எங்கும் காங்கிரஸ் முழக்கமாக இருக்கவேண்டும்" என்று திருவல்லிக்கேணி படேல் சதுக்கத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வராக இருந்த காமராஜர் பேசினார்.
இந்தக் காலகட்டத்தில் நேரு காங்கிரஸ் கட்சிக்குள் சோஷலிஸ கொள்கையை வலியுறுத்திவந்தார். அதற்கு எதிராக அக்கட்சிக்குள் சிலர் இயங்கி வந்தனர். வெளியே சுதந்திராக் கட்சியைச் சேர்ந்த ராஜகோபாலாச்சாரி திமுகவுடன் கூட்டுச் சேர்ந்து அதனை எதிர்த்தார். அதற்கு உண்டான விளக்கத்தை காமராஜர் இந்தக் கூட்டத்தில் எழுப்பினார்.
"சமதர்மம் என்பது எல்லோரும் சமமாக வாழவேண்டும் என்பதுதான். இது சகிக்க முடியாதது என்று கூறுவதற்கு இது காலமில்லை. ஏற்றதுமில்லை. காங்கிரஸ் சமதர்மம் பிடிக்கவில்லை, அதில் தவறு உளது இருந்தால் சொல்லித் திருத்தலாம். ஆனால், காங்கிரஸ் சமதர்மத்தைச் சகிக்க முடியாது என்று கூறி எதிர்க்கும் சுதந்திராக் கட்சிக்கு திமுகவின் திராவிட சமதர்மக் குடியரசுடன் உடன்பாடா?" என்று கேட்டார் காமராஜர்.
இதே காலகட்டத்தில் நேருவின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அவர் பதவியில் நீடிக்கமுடியுமா எனப் பத்திரிகைகள் தலையங்கங்கள் தீட்டின. அவருக்கு அதிகச் சுமை இருப்பதாகவும் அதைக் குறைக்க வேண்டும் என்றும் எழுதின. அவருக்குப் புற்றுநோய் இருக்கக் கூடும் என வதந்திகள் வந்தன. பிரதமர் பதவியை விட்டு விலகவேண்டும் என ஜெயப்பிரகாஷ் நாராயணன் அறிக்கை விட்டார். பல பத்திரிகைகள் பக்கம் பக்கமாகக் கேலிச்சித்திரம் வரைந்தன.
கள்ளநோட்டு கும்பல் கைது
முன்னதாக 1960இல் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் கோயமுத்தூரில் 100 ரூபாய் கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்ட விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. கோட்டயத்திலிருந்து கோவைக்கு 5 பேர் பயணம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டனர். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை நீதிபதி டி. திண்ணாயிரம் விசாரித்தார். முதல் எதிரியாகக் கோவை மில் அதிபர் ஜி.கிருஷ்ணன் உட்பட 12 எதிரிகள் கோர்ட்டில் ஆஜராகினர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல்கள், பத்திரிகை நிருபர்கள் தவிர யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்த வழக்கில் எட்டாவது சாட்சியாகச் சேர்க்கப்பட்ட கே.எஸ்.மணி பிறழ் சாட்சியாக மாறினார். இவர் 1949 அல்லது 50 இல் கோவையில் சொந்தமாகப் போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தவர். 1956இல் கோவை ராஜ வீதியில் ரேவதி ஸ்டுடியோவை தொடங்கினார். இரண்டாவது எதிரி பாலகிருஷ்ணன் மூலம் ஜி.கிருஷ்ணன் நட்பு உண்டானது என்பதை இவர் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில் கூறினார்.
இக்காலப் பகுதியில் மற்றொரு பக்கம் ம.பொ.சிவஞானம் நடத்திவந்த 'தமிழரசுக் கழகம் 'தமிழ்நாடு' என மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரி திருவண்ணாமலையில் மாநாடு நடத்தியது. அதில் தீர்மானம் நிறைவேற்றியது. 'அந்நியர் ஆட்சிக் காலத்திலிருந்து 'சென்னை', 'மெட்ராஸ்' ஆகிய இரண்டு பெயர்களால் தமிழ்நாடு அழைக்கப்பட்டு வருவதைக் கூட்டம் கண்டித்தது. நகர்மன்றம், ஊராட்சி மன்றங்கள், கிராமசபைகள் எனப் பலரும் 'தமிழ்நாடு' பெயர் மாற்றம் கோரி நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்திற்கு அரசு செவிசாய்க்காமல் இருப்பதையும் கண்டித்தது. இனிமேல் 1860 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி முதல் வாரம் வரை தமிழ்நாடு பெயர் கோரிக்கை வாரமாகக் கொண்டாட முடிவு செய்து அறிவிக்கவும் செய்தனர் தமிழரசுக் கட்சியினர்.
குடிசைகளுக்கு தீ வைத்த கும்பல்
1952இல் ராஜாஜி மாநில பிரதம மந்திரியாக (முதல் அமைச்சர்) இருந்த காலத்தில் கடும் பஞ்சம் நிலவியது. மழைப்பொழிவே இல்லை. ஆகவே மக்களை வருண பகவானை வேண்டிக் கொள்ளும்படி ராஜாஜி கூறினார். காமராஜர் ஆட்சிக்கு வந்த பின் 1960 நவம்பர் மாதம் பேய் மழை பெய்தது. வறண்டு கிடந்த ஊர்களோ வெள்ளக்காடாக மாறியது. 12 ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 50 கிராமங்களுக்கு மேல் நீரில் மூழ்கின. மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர். தஞ்சாவூர் ஜில்லா நாகப்பட்டினத்தில் 390 பேர் குக்கிராமங்களிலிருந்து கட்டுமரங்கள் மூலம் மீட்கப்பட்டனர். அரிசி, விறகுகளை உடனடியாக அனுப்பி வைக்கும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது. மூன்று வாரத் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மாவட்டமே முடங்கியது. கஞ்சித் தொட்டிகளை ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் 10 ஆயிரம் ஒதுக்கியது.
இதேபோல் 1957 ஆம் ஆண்டு செப்டமர் 19 ஆம் தேதி காமராஜர் ஆட்சியில் ராமநாதபுரம் களத்தூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் குடிசை மீது இடைநிலை சாதியைச் சேர்ந்தவர்கள் தீ வைத்தனர். சிலர் விடு புகுந்து கொள்ளையடித்தனர். அந்த வழக்கு ராமநாதபுரம் அடிஷ்னல் செஷன் ஜட்ஜ் முன்பாக நடைபெற்றது. 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றவாளிகளுக்கு தலா 1 வருடம் சிறை தண்டவை விதிக்கப்பட்டது. அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி அனந்த நாராயணன் தண்டனையை உறுதிசெய்தார். ஆனால், எதிரிகள் முன்பே அனுபவத்தைத் தண்டனையே போதும் எனத் தீர்ப்பளித்தார். கிட்டத்தட்ட இந்தக் கலவரத்தில் 500 பேர் சேர்ந்த கொள்ளையடித்ததில் 81 பேரைப் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காட்டினர்.
கொள்ளை, வெள்ளம், விலைவாசி உயர்வு எனப் பல பிரச்சனைகள் திமுக அரசியலுக்கு உரமாக அமைந்தன. மக்களின் பிரச்சனைகளைக் கையில் எடுத்து விமர்சிக்க ஆரம்பித்தது திமுக.
- எழுதியவர் கடற்கரய்
-
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!












Click it and Unblock the Notifications