எழும்பூரில் 5 கோடி, மைலாப்பூரில் 3 கோடி.. யார் இந்த கமலக்கண்ணன்.. சென்னையில் இடம் வாங்குவோர் பாருங்க
சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் என்பவர் போலி பத்திரங்கள் தயாரித்து நிலங்களை அபகரித்து பின்னர் அவற்றின் மூலம் வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்வதில் பலே கில்லாடி ஆவார். இவரால் ஏமாந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்நிலையில் போலி பத்திரங்கள் மூலம் நிலங்களை அபகரித்து அவற்றை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி மோசடி செய்தாக புதிய வழக்கில் கமலக்கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் நிலத்தின் மதிப்பு தமிழ்நாட்டில் உள்ள எந்த நகரங்களையும் விடவும் அதிகம்.ஏன் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் நிலத்தின் மதிப்பு மிகஅதிகமாக உள்ளது. இதனால் நிலத்தின் ஆவணங்களை போலியாக உருவாக்கி மோசடியாக பத்திரப்பதிவு நடக்கின்றன. வங்கிகளில் அடமானம் வைத்து கடன் வாங்குவதும் நடக்கிறது. வங்கிகள் கோடிகளில் ஏமாந்துள்ளன.

போலி பத்திரப்பதிவு
இதேபோல் தனிநபர்களும் பத்திரப்பதிவு செய்த பின்னர் மோசடி நிலம் என்பது தெரிந்து நொந்து போய் இருக்கிறார்கள். பலர் சிறுக சிறுக சேர்த்த காசை பறிகொடுத்துவிட்டு காவல் நிலையத்திற்கு அலைந்து வருகிறார்கள். இதுபோன்ற மோசடிகளுக்கு போலியாக பத்திரப்பதிவு செய்வது தான் காரணமாக இருக்கிறது. இப்படி போலியாக பத்திரங்களை தத்ரூபமாக தயாரிப்பதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள். அவர்களின் கைவரிசை தான் மோசடிக்கு காரணமாக உள்ளது.
போலி பத்திர மோசடி மன்னன்
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 45 வயதாகும் கமலக்கண்ணன் என்பவர் போலி பத்திரங்கள் தயாரித்து நிலங்களை அபகரித்து பின்னர் அவற்றின் மூலம் வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்வதில் பலே கில்லாடியாக இருந்து வந்துள்ளார். இவரை போலி பத்திர மோசடி மன்னன் என்று அழைக்கும் அளவிற்கு கில்லாடியாக வலம் வந்துள்ளார். ஏனெனில் இவரால் ஏமாந்தவர்கள் அதிகம்.
இரண்டு புதிய வழக்குகள்
இந்த கமலக்கண்ணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஏற்கனவே இதுபோன்ற 13 மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளாரகள்.இதற்காக பலமுறை சிறைக்கு சென்று வந்துள்ளார் கமலக்கண்ணன். அண்மையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர் மீது புதிதாக 2 வழக்குகளை கமலக்கண்ணன் மீது பதிவு செய்துள்ளனர்.
மயிலாப்பூரில் மோசடி
சென்னை மயிலாப்பூரை சோ்ந்த தாராசந்த் என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி பத்திரங்கள் மூலம் அபகரித்து, அந்த நிலத்தை தனியார் வங்கி ஒன்றில் அடமானம் வைத்து ரூ.3 கோடி மோசடி செய்துவிட்டார்களாம். இந்த வழக்கில் கமலக்கண்ணன் முக்கிய குற்றவாளி என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதேபோல, சோழிங்கநல்லூரில் உள்ள 12 ஆயிரம் சதுரஅடி நிலத்தை போலி பத்திரங்கள் மூலம் அபகரித்து சென்னை எழும்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அடமானம் வைத்து ரூ.5 கோடியை சுருட்டியிருக்கிறது ஒரு கும்பல். இந்த வழக்கிலும் கமலக்கண்ணன் தான் போலி பத்திரம் தயார் செய்து கொடுத்த முக்கிய குற்றவாளி என்று கூறப்படுகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications