கடைசி நொடி வரை திக்திக்.. சம்பவம் செய்த உதயநிதி.. குடும்பமாக வந்த மக்கள்.. கலக்கிய ஃபார்முலா 4 ரேஸ்
சென்னை: சென்னையில் ஃபார்முலா 4 ரேஸ் நேற்று முதல் கட்டமாக நடைபெற்றது. முறையான திட்டமிடலுடன் நடைபெற்ற இந்த ரேஸ் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கடைசி நொடி வரை ரேஸ் நடக்குமா என்ற சந்தேகம் நிலவியது.
சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள ராஜாஜி சாலை, நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, கொடிமர இல்ல சாலை என தீவுத்திடலை சுற்றிலும் 3.8 கிமீ நீளமுள்ள சர்க்யூட்டில் இந்த கார் ரேஸ் நடக்கிறது. இதில் 19 சாலை திருப்பங்கள் உள்ளன.

FIA சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கார் ரேஸ் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் நேற்று நிலவியது. கடைசி 6 மணி வரை ரேஸ் நடப்பதில் சிக்கல் இருந்தது.. 6 மணிக்கு கூட சில போட்டியாளர்கள் அறைக்கு திரும்பும் நிலை இருந்தது. கடைசி நேரத்தில் FIA அனுமதி கிடைத்து ஃபார்முலா 4 ரேஸ் தாமதமாக தொடங்கியது. முக்கியமாக போட்டிக்கு முன்பாக கூட.. மீண்டும் ஒருமுறை, போக்குவரத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் - பொதுமக்கள் அமர்ந்து பார்க்கின்ற Grand Stands, அமைச்சர்கள் - நீதியரசர்கள் - அதிகாரிகளுக்கான Galleries, Race Drivers' Stand - Garage போன்ற வசதிகள், மருத்துவமனையில் பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை சோதனை செய்து.. அப்படி பிரச்சனை இல்லை என்று உறுதி செய்யப்பட்டு அதன்பின்பே போட்டி தொடங்கப்பட்டது.

குழந்தைகள் குடும்பங்கள் கொண்டாட்டம்: இந்த ஃபார்முலா 4 ரேஸை மக்கள் கூட்டம் கூட்டமாக நேற்று கண்டுகளித்தனர். முக்கியமாக சனிக்கிழமை மாலை என்பதால் குடும்பங்கள் பலர் டிக்கெட் எடுத்து வந்திருந்தனர். மாலை நேரங்களில் மெரினா, பெசன்ட் நகர் செல்லும் மக்கள், அதை தவிர்த்துவிட்டு இங்கே அதிக அளவில் முன்கூட்டியே டிக்கெட் எடுத்து வந்திருந்தனர்.

நேற்று முக்கியமாக இந்த நிகழ்வில் குழந்தைகள் பலர் பெற்றோர்களோடு வந்து கண்டுகளித்தனர். ஏ.. அங்க பாருடா.. சர்ர்ன்னு போகுது என்றெல்லாம் குஷியாக பேசியபடி ரேஸை கண்டுகளித்தனர். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில், உலகமே வியக்கிற வகையில் #Formula4Chennai Racing on the Street Circuit போட்டி தீவுத்திடலில் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியை, நம்முடைய #ChepaukTriplicane தொகுதியில் செயல்படும் கலைஞர் நூற்றாண்டு நடமாடும் நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ள 100 மாணவ - மாணவியர் நேரில் காண ஏற்பாடு செய்திருந்தோம்.

புது வரலாறு படைக்கும் வகையில் நடைபெறும் இந்த ஃபார்முலா 4 போட்டியை கண்டு ரசித்த மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்தும், அன்பும், என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போஸ்ட் செய்துள்ளார்.
தெற்காசியாவில் முதல்முறை: அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி - முறையான பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் நடைபெறுகின்ற இந்த சர்வதேச அளவிலானப் போட்டியை காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் - கார் பந்தய ஆர்வலர்கள் திரண்டிருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். இதில் பங்கேற்கும் கார் பந்தய வீரர்களை வாழ்த்தினோம்.

முன்னதாக, கார் பந்தய வீரர்கள் திறம்பட நிகழ்த்திய சாகசங்களை கண்டு மகிழ்ந்தோம். தெற்காசியாவில் முதன்முதலில் நடைபெறும் இந்த இரவு நேர கார் பந்தயப் போட்டி, உலகளவில் இந்தியாவுக்கும் - தமிழ்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தைப் பெற்றுத்தரப் போவது உறுதி, என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications