பென்ஷன்தாரர்களே இனி ஹேப்பி.. குடும்ப ஓய்வூதியர்களுக்கு வந்தது "நேர்காணல்".. அடடே, இப்படி ஒரு வசதியா
சென்னை: பென்ஷன்தாரர்களுக்கான அடுத்த அதிரடியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. பலரும் பயன்பெறும் வகையில், இதற்கான விவரத்தையும் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெறுவோருக்கான மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் யுனெடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கருவூலம்: கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் தரவுத்தளத்தில் இருந்து விவரங்கள் எடுக்கப்பட்டு, ஓய்வூதியம் பெறுவோருக்கு இந்த மருத்துவ காப்பீடு அடையாள அட்டை அளிக்கப்படுகிறது.
ஆனால், ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ காப்பீடு அடையாள அட்டையில் புகைப்படம் இல்லாமல் இருந்தது. இதனால், ஓய்வூதியம் பெறுவோரின் போட்டோவுடன், துணைவரின் போட்டோவையும் ஒட்டி புதிதாக அவர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்கங்கள் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
கோரிக்கை: அதன்படி, அரசும் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, கடந்த 4 நாட்களுக்கு முன்பு, இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது..
அதன்படி, ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.. அத்துடன், இந்த பணிகளை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை அளிப்பதற்கான படிவங்கள் ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட அந்த படிவங்கள் தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன்பிறகு, பயனாளிகள் தங்களுக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, ஓய்வூதியதாரர்கள் தரப்பில் சில குழப்பங்கள் இருந்து வருகிறது.. அதாவது, ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் துவங்கப்பட்ட மாதம் தெரியாத நிலைமை உள்ளது. இதற்குதான் அரசு ஒரு தீர்வை தந்துள்ளது.
நேர்காணல்: அதன்படி, குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், ஓய்வூதியம் துவங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் நேர்காணல் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஓய்வூதியர்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய குறிப்பிட்ட 3 மாதங்களில் நேர்காணல் செய்யப்படுவதால் அதிகளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருந்து நேர்காணல் செய்வதை எளிமையாக்கும் நோக்கத்தில், சிவில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும், குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் துவங்கப்பட்ட மாதத்திலும் சிவில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் (Double Pensioners) தாங்கள் ஓய்வுப்பெற்ற மாதத்திலும் நேர்காணல் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் துவங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில், தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் 2023-ம் ஆண்டிற்கான நேர்காணல் செய்து கொள்ளலாம்
நடவடிக்கை: மேற்கண்ட நடைமுறையின்படி ஒவ்வொரு ஓய்வூதியர்களுக்கு தாங்கள் எந்த மாதம் நேர்காணல் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஓய்வூதியர்களின் செல்போன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பவும், மேலும் www.karuvoolam.tn.gov.in என்ற இணையத்தின் மூலமாக ஓய்வூதியர்கள் தங்களது நேர்காணல் மாதம் குறித்து அறிந்து கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications