பிரபல நடிகர் தாமு.. காஞ்சிபுரத்தில் வைத்த "வேட்டு".. கோடம்பாக்கமே அதிருதே.. ஓ, "அந்த" நடிகரா.. சபாஷ்
சென்னை: பிரபல நடிகர் தாமு விடுத்துள்ள கோரிக்கையானது, தமிழக சினிமாவில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.. இதற்கான ஆதரவுகளும் தாமுவுக்கு பெருக தொடங்கிவிட்டன.
தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களாக, நகைச்சுவை பங்களிப்பை தந்து வருபவர் நடிகர் தாமு.. டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்றுதான் இவரை சொல்ல வேண்டும்.

டைரக்டர் பாலசந்தரின் சீடர் என்பது உட்பட சினிமாவில் இவருக்கான அங்கீகாரம் நிறைய உண்டு என்றாலும், யாரும் அறிந்திராத பல முகங்கள் தாமுவுக்கு உண்டு.
கல்வியாளர்: இவர் ஒரு கல்வி சேவையாளர்... 10 வருடத்துக்கு மேல் இந்த சேவையை செய்து வருகிறார்... சேவைசெம்மல், மாணவர் தளபதி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்விருது, சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம்-(அமெரிக்கா) டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ், "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது உட்பட நூற்றுக்கும் அதிகமான விருதை பெற்றவர்.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் ஆலோசனையுடன், 2011 முதல் சர்வதேச பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர் பேரவையை (IPTSA) தொடங்கியவர். இது ஒரு அரசு சாரா கல்வி சேவை வழங்கும் அமைப்பு ஆகும். இளைஞர்களின் மனதில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க பாடுபட்டு வருபவர்.. கல்வியில் தரமான மாணவர்களை உருவாக்கிடவும் முயன்று வருபவர்.. இப்படிப்பட்ட சேவைகளுக்காக, டாக்டர் கலாமிடம் நேரடி பயிற்சி பெற்று பணியாற்றியவர் தான் நடிகர் தாமு..
மாணவர்கள்: தமிழகம் உட்பட, நாட்டின் ஒரு லட்சம் பேராசிரியர்கள், 30 லட்சம் பெற்றோர்களை கொண்ட தன்னுடைய அமைப்பின் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் அளித்து வரும் சேவை அளப்பரியது. அதிலும், கலாமின் முக்கோணக் கல்விக் கோட்பாட்டை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியவர் தாமுதான்..
இப்போது மிக முக்கிய கோரிக்கை ஒன்றை அரசுக்கு விடுத்துள்ளார்.. சினிமாவை பார்த்துதான் பள்ளி மாணவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாவதால் முடிந்த வரைக்கும் சினிமாவில் மது அருந்தும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார்..
இளைய சமுதாயம்: சமீப காலமாகவே, வெளியாகும் படங்களில், தண்ணி அடிப்பது, சிகரெட் பிடிப்பது என நிறைய சீன்கள் திணித்து வைக்கப்பட்டு வருகின்றன.. அதுவும் இல்லாமல், இவைகளை பார்க்கும் இளைய சமுதாயம், கெத்து காட்டுவதாக நினைத்துக்கொண்டு, தாங்களாகவே போதை பழக்கத்திற்குள் விழுந்துவிடுகின்றனர்.. கண்ணுக்கு தெரியாமலேயே நடக்கும் இந்த செயல்பாட்டை தடுக்கவே, நடிகர் தாமு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
காஞ்சிபுர மாவட்டத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமு கலந்துகொண்டு போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள் குறித்தும், இன்றைய சினிமா வாழ்கை பற்றியும் தாமு பேசினார்... போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, சினிமாவில் பல நல்ல விஷயங்களை எடுத்து சொன்னாலும், புகை, மது போன்ற காட்சிகளை தொடர்ந்து காட்டுகின்றனர். சினிமாவில் பயன்படுத்தப்படும் மது என்பது ஒரு வகையான குளிர்பானம் மட்டுமே. அதேபோல் அனைத்து நடிகர்களும் புகைபிடிக்கும் பழக்கம் இல்லை. அவர்கள் சிகரெட்டை உண்மையாக பிடிக்க மாட்டார்கள்.
இருந்தாலும், சினிமாக்கள் மாற வேண்டும். சினிமாவுக்கு என்ற ஒரு பொறுப்பு உள்ளது. ஆகையால் சினிமாக்களில் நடிகர், நடிகைகள் மது அருந்துவது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை இயக்குனர்கள் தவிர்க்க வேண்டும்.. இதனால், பள்ளி குழந்தைகள் கூட இதனை உடனே உள்வாங்கி கொண்டு போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இதனால், படிப்பிலும் சிறிது சிறிதாக மாணவர்களுக்கு நாட்டம் இல்லாமல் போகிறது.
உத்தரவாதம்: எனவே, முடிந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் மது அருந்தும் காட்சிகளை தவிர்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார் தாமு.. அதுமட்டுமல்ல, தான் படம் இயக்குவதாக இருந்தாலும் கண்டிப்பாக, தன்னுடைய படத்தில் இது போன்ற காட்சிகள் இடம் பெறாது என்றும் தாமு உத்தரவாதம் தந்துள்ளார்...
சமீபத்தில் லியோ படத்தின் "நா ரெடி" பாடலில் விஜய் சிகரெட் பிடித்துக்கொண்டே டான்ஸ் ஆடியிருந்தது சர்ச்சையான நிலையில் தாமு அவரை மனதில் வைத்து பேசுகிறாரா? என்று ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கேள்வி எழுப்பிவருகின்றனர். இருந்தாலும், தாமு சொல்வதில் உள்ள தவறு? தாமுவின் இந்த கோரிக்கையை அரசும் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இணையத்தில் சேர்ந்தே ஒலிக்கின்றன..!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications