Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேம்பி தேம்பி அழுத பெண்ணை கண்டு.. நடிகர் தாமு அப்படியே "உறைஞ்சி" நின்னுட்டாரு.. யாரது? அரண்ட அரங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகர் தாமு கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று, பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டதுடன், பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. அப்படி என்ன நடந்தது கொளத்தூரில்?

தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களாக, நகைச்சுவை பங்களிப்பை தந்து வருபவர் நடிகர் தாமு.. டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்றுதான் இவரை சொல்ல வேண்டும். டைரக்டர் பாலசந்தரின் சீடர் என்பது உட்பட சினிமாவில் இவருக்கான அங்கீகாரம் நிறைய உண்டு என்றாலும், யாரும் அறிந்திராத பல முகங்கள் தாமுவுக்கு உண்டு.

Famous Actor Dhamu Speech and What happened in Chennai Kolathur Drug Awareness Program

கல்வியாளர்: இவர் ஒரு கல்வி சேவையாளர்... 10 வருடத்துக்கு மேல் இந்த சேவையை செய்து வருகிறார்... சேவைசெம்மல், மாணவர் தளபதி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்விருது, சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம்-(அமெரிக்கா) டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ், "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது உட்பட நூற்றுக்கும் அதிகமான விருதை பெற்றவர்.

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் ஆலோசனையுடன், 2011 முதல் சர்வதேச பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர் பேரவையை (IPTSA) தொடங்கியவர். இது ஒரு அரசு சாரா கல்வி சேவை வழங்கும் அமைப்பு ஆகும். இளைஞர்களின் மனதில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க பாடுபட்டு வருபவர்.. கல்வியில் தரமான மாணவர்களை உருவாக்கிடவும் முயன்று வருபவர்.. இப்படிப்பட்ட சேவைகளுக்காக, டாக்டர் கலாமிடம் நேரடி பயிற்சி பெற்று பணியாற்றியவர் தான் நடிகர் தாமு..

மாணவர்கள்: தமிழகம் உட்பட, நாட்டின் ஒரு லட்சம் பேராசிரியர்கள், 30 லட்சம் பெற்றோர்களை கொண்ட தன்னுடைய அமைப்பின் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் அளித்து வரும் சேவை அளப்பரியது. அதிலும், கலாமின் முக்கோணக் கல்விக் கோட்பாட்டை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியவர் தாமுதான்..

சமீபத்தில் தாமு மிக முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.. அதன்படி, சினிமாவில் பல நல்ல விஷயங்களை எடுத்து சொன்னாலும், புகை, மது போன்ற காட்சிகளை தொடர்ந்து காட்டுகின்றனர். சினிமாவில் பயன்படுத்தப்படும் மது என்பது ஒரு வகையான குளிர்பானம் மட்டுமே. அதேபோல் அனைத்து நடிகர்களும் புகைபிடிக்கும் பழக்கம் இல்லை. அவர்கள் சிகரெட்டை உண்மையாக பிடிக்க மாட்டார்கள்.

இருந்தாலும், சினிமாக்கள் மாற வேண்டும். சினிமாவுக்கு என்ற ஒரு பொறுப்பு உள்ளது. ஆகையால் சினிமாக்களில் நடிகர், நடிகைகள் மது அருந்துவது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை இயக்குனர்கள் தவிர்க்க வேண்டும்.. இதனால், பள்ளி குழந்தைகள் கூட இதனை உடனே உள்வாங்கி கொண்டு போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இதனால், படிப்பிலும் சிறிது சிறிதாக மாணவர்களுக்கு நாட்டம் இல்லாமல் போகிறது.

Famous Actor Dhamu Speech and What happened in Chennai Kolathur Drug Awareness Program

உத்தரவாதம்: எனவே, முடிந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் மது அருந்தும் காட்சிகளை தவிர்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார் தாமு.. அதுமட்டுமல்ல, தான் படம் இயக்குவதாக இருந்தாலும் கண்டிப்பாக, தன்னுடைய படத்தில் இது போன்ற காட்சிகள் இடம் பெறாது என்றும் தாமு உத்தரவாதமும் தந்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று நடந்த சம்பவம் ஒன்று, அனைவரது கவனத்தையும் திருப்பி வருகிறது. அரியலூர் மாவட்டம், கொளத்தூர் மாவட்டத்தில் "போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும்" என்ற தலைப்பில் ஐசிஎப் அம்பேத்கர் மன்றத்தில் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 6 அரசு பள்ளிகளை சேர்ந்த 1200 மாணவர்களுடன் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக தாமு கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் "மிமிக்ரி" மூலமாகவே சிறப்புரையாற்றினார்.

செல்போன்கள்: அப்போது அவர் பேசும்போது, "செல்போன் போன்ற பல வகைகளில் அடிமையாகின்றனர். மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு என்ற பெயரில் வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிகளில் நடத்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன்..

அப்பா, அம்மாதான் ஹீரோ.. எங்களை போன்ற நடிகர்களின் கட் அவுட்டுகளுக்கெல்லாம் பால் ஊத்தாதீங்க.. உங்க வாழ்வு சிறக்க வழி ஏற்படுத்தி கொடுத்தது பெற்றோர்களும், பேராசிரியர்களும் மட்டும்தான்.. நடிகர்களின் பிறந்த நாளை கொண்டாடாமல் பேராசிரியர்களை கொண்டாடுங்கள். பிறப்பு முதல் கல்லூரி பருவம் வரை பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோர்களே.. அவர்களின் அன்பு அளவிடமுடியாதது" என்று உருக்கமாக பேசினார்.

தாமு பேசப்பேச, அங்கிருந்த ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் கண் கலங்கினர்... அப்போது, அங்கு பாதுகாப்பில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், தாமுவின் பேச்சை கேட்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்..

காக்கி சட்டை: வழக்கமாக தாமு யதார்த்த வாழ்வியலை உருக்கமாக பேசுபவர்.. அவர் எந்த அரங்கில் பேசினாலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கண்கலங்கி போவார்கள்.. ஆனால் இப்போது, ஒரு பெண் காவலரே விக்கி விக்கி அழுவதை பார்த்து, தாமுவே அதிர்ச்சியடைந்துவிட்டார்.. அங்கிருந்த பார்வையாளர்களும் அந்த பெண் காவலரை கண்டு ஆச்சரியப்பட்டு போனார்கள்.

இந்த சம்பவத்தினால் அரங்கமே சிறிது நேரம் நிசப்தமாகிவிட்டது.. உண்மைதான்.. காக்கி சட்டையையும்கூட, கண்ணீரால் நனைத்து விடும் வல்லமை பெற்றதுதானே இந்த "அன்பு"..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+