"பிரபல நடிகை"க்கு ராத்திரி நேரத்தில் நடந்த டார்ச்சர்.. அதுவும் வாசற்படியில்.. என்னாச்சு.. பரபரப்பு
பிரபல நடிகையை பின்தொடர்ந்து டார்ச்சர் தந்த இளைஞர் மீது புகார் தரப்பட்டுள்ளது
சென்னை: தன் வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோதுதான், அந்த இளைஞர் பின்னாடியே, வீட்டு வாசல்வரை வந்து நடிகையை பின்தொடர்ந்து வந்துள்ளார்..!
வைஷ்ணவி.. இவர் ஒரு டிவி நடிகை.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்.. பிரபல தொகுப்பாளரும்கூட..!
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டதையடுத்து, தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர்.

பிரபல நடிகை
தற்போது இவர் ஆர்ஜே அதாவது ரேடியோ தொகுப்பாளராகவும் உள்ளார்... நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் சமூக அக்கறை நிறைந்த பெண் ஆவார்.. எனவே, பல்வேறு சமூக கருத்துகளை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவு செய்து வருவார்.. இந்நிலையில், நேற்றைய தினம் இவர் திடீரென ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார்.. அந்த வீடியோவுடன் ஒரு இளைஞர் குறித்து பரபரப்பு புகாரையும் அதிலேயே தெரிவித்திருந்தார்.. அதாவது, இவர் ஒரு நாய் வளர்த்து வருகிறார்..

வாக்கிங் நாய்
அந்த நாயை நைட் நேரத்தில் வாக்கிங் அழைத்து செல்வது வழக்கம்.. அப்படித்தான் சம்பவத்தன்று இரவும் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, ஒரு இளைஞர் பைக்கில் பின்னாடியே ஃபாலோ செய்து வந்தாராம்.. சற்று நேரத்தில் அவர் சென்றுவிடுவார் என்று பார்த்தால், நீண்ட நேரம் இவர் செல்லும் இடம் வரை பின்னாடியே வந்துள்ளார். இதனால் தான் உஷாராகிவிட்டதாகவும், தன்னுடைய வீடு அந்த மர்ம நபருக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவும், வேண்டுமென்றே 30 நிமிடங்களுக்கு மேல் சாலையிலேயே நின்று கொண்டிருந்தாராம்..

ஆதாரம் வீடியோ
அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல், போன் பேசுவது போல் அந்த மர்ம நபரை வீடியோ ரிக்கார்டிங் செய்துவிட்டாராம்.. இதையெல்லாம் தன்னுடைய புகார் பதிவில் தெரிவித்த வைஷ்ணவி, இந்த புகாரை சென்னை காவல்துறை டிவிட்டர் பக்கத்திலும் டேக் செய்துள்ளார்.. அத்துடன், தான் எடுத்த அந்த வீடியோவையும் அதில் ஷேர் செய்துள்ளார். வைஷ்ணவி, அந்த இளைஞர் தொடர்பாக புகார் தெரிவித்து, அதை வீடியோ ஆதாரத்துடன் தெரிவித்திருந்தது, காவல்துறை தரப்பில் இருந்து பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது..

சபாஷ்
மேலும், இந்த வீடியோவை பார்த்த பொதுமக்களும் வைஷ்ணவியின் துணிச்சலுக்கு சபாஷ் போட்டு வருகிறார்கள்.. இதனிடையே, காவல்துறையும் இந்த புகாரை தற்போது கையில் எடுத்துள்ளது.. அந்த நபர் யார் என்ற விசாரணையிலும் குதித்துள்ளது.. மேலும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவலன் உதவி என்ற ஆப்பை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னை காவல்துறை சோஷியல் மீடியா மூலம் ரிப்ளை தந்துள்ளது..!

ஆசிட் வீச்சு
இந்த சம்பவம் நடந்ததுமே, வீட்டிற்குள் சென்று முதலில் தன் அம்மாவிடம்தான் வைஷ்ணவி சொல்லி உள்ளர்.. போலீசில் இது குறித்து புகார் சொல்ல போகிறேன் என்று வைஷ்ணவி சொன்னதுமே, அவர் அம்மா பதறினாராம்.. "வேண்டாம்.. போலீசுக்கெல்லாம் போக வேண்டாம்.. பழிவாங்கும் நோக்கில் அந்த மர்ம நபர் ஆசிட் வீசினால் என்ன செய்வது?" என்று பயந்துபோய் சொன்னாராம்..

துணிச்சல்
அதற்கு வைஷ்ணவி, "புகார் அளிக்காமல் இருந்தால், இதுவே அந்த இளைஞனுக்கு வசதியாகிவிடும்.. மறுபடியும் தொந்தரவு செய்தால் என்ன செய்வது? என்னை போலவே வேறு பெண்ணிற்கு இப்படி நடந்துவிடவும் வாய்ப்புள்ளது, அதனால், புகார் செய்தே ஆக வேண்டும்" என்று வாதம் செய்துதான், போலீசுக்கு புகார் தந்தாராம்.. இந்த கருத்தையும் வைஷ்ணவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications