"முடியல.. ரொம்ப கஷ்டமா இருக்கு".. புலம்பிய பிரபல நடிகை கவுதமி.. அதிரடி உத்தரவை பிறப்பித்த ஹைகோர்ட்
நடிகை கவுதமியின் வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது
சென்னை: தனது ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் இதனால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் என்றும் நடிகை கவுதமி தாக்கல் செய்த மனுவில், சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை கவுதமி.. இவர் தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.. டிவி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வருபவர்.
இதைதவிர,தன்னுடைய லைஃப் அகெய்ன் அறக்கட்டளை மூலமாக ஏராளமான புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருபவர்.

பாஜகவில் நடிகை
சில வருடங்களுக்கு முன்பு இவர் தமிழக பாஜகவில் இணைந்தார்.. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்ட கவுதமி, பாஜகவுக்காக தீவிர பிரச்சாரங்களையும் மேற்கொண்டார். இந்நிலையில், இவர் ஒரு சட்டஒரு சிக்கலில் சிக்கி உள்ளார்.. அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை கவுதமி தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

விவசாய நிலம்
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை கடந்த 2016-ம் ஆண்டு 4.10 கோடிக்கு விற்றேன்.. அந்த சொத்து வருமான வரிச்சட்டப்படி மூலதன சொத்தின் கீழ் வராது. அதற்கு பிறகு அந்த சொத்து 4.10 கோடிக்கு விற்கப்பட்டது, ஆனால், வருமான வரித்துறை கூறியபடி 11.17 கோடிக்கு விற்கப்படவில்லை.. 2016-17 வருமான வரி மதிப்பீட்டு ஆண்டில்34.88 லட்சம் வருமானத்தை ஒப்புக் கொள்கிறேன், அதற்கு வட்டியுடன் சேர்த்து 9.14 லட்சத்தை வரியாக செலுத்திவிட்டேன்.

முடக்கம்
ஆனாலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அன்று டெல்லியில் உள்ள தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையத்திலிருந்து கடிதம் வந்துள்ளது. அதில், விவசாய நிலத்தின் வருவாய் 11.17 கோடி எனக் கருதி மதிப்பீட்டு ஆணை அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த உத்தரவைத் தொடர்ந்து என்னுடைய ஆறு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுவிட்டன.. இதனால் எனக்கு நிறைய பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.. எனவே வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கவுதமி கேட்டுக்கொண்டிருந்தார்..

கவுதமி கட்டணம்
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டாபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு, நடிகை கவுதமியின் ஆறு வங்கிக் கணக்குகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யுமாறு வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்... மேலும் நான்கு வாரங்களுக்குள் பகுதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மதிப்பீட்டு உத்தரவின் செயல்பாடுகளையும் நிறுத்திவைத்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்...
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications