"நாய்ங்க கூட இப்படி ஒரு காரியத்தை பண்ணாது" ஆவேசத்துடன் கிளம்பி வந்த கஸ்தூரி.. டக்குனு கவனித்த பாஜக
சென்னை: "நாய்கள் கூட இப்படி ஒரு காரியத்தை செய்யாது" என்று விளாசி தள்ளியுள்ளார் நடிகை கஸ்தூரி.. இதற்கு ட்விட்டர்வாசிகள் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
மத்தியபிரதேச மாநிலத்தில் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் ரோட்டோரம் உட்கார்ந்திருந்த அந்த பழங்குடியின தொழிலாளி மீது ஒரு நபர் சிறுநீர் கழித்துள்ளார்.
இந்த சம்பவம் 3 மாதங்களுக்கு முன்கே நடந்ததாக சொல்கிறார்கள். ஆனால், நேற்று முதல்தான் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது..

வீடியோ: இந்த வீடியோ வைரலானதால், போலீசாரின் விசாரணைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.. அப்போதுதான் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர், பாஜக பிரமுகர் என்று தெரியவந்தது.. இவர் பெயர் பர்வேஷ் சுக்லா.. அதேபகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏவின் நெருங்கிய உறவினரும்கூட..
இதையடுத்து, உடனடியாக அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர்.. ஆனால், அதற்குள் பர்வேஷ் தலைமறைவானார்.. இந்த விஷயத்தில் உடனடியாக எதிர்க்கட்சிகள் தலையிட்டன.. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன..
கடும் கண்டனம்: அதிலும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ், இது தொடர்பாக ட்வீட் பதிவிட்டதுடன், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானையும் டேக் செய்து, "இது தான் பழங்குடியினர் மீதான உங்கள் அன்பா? ஏன் அந்த பாஜக பிரமுகரை கைது செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குபிறகுதான், குற்றவாளி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அதிரடியாக உத்தரவிட்டார்.. இதனிடையே, தீவிரமான தேடுதல் நடத்தி பரவேஷ் சுக்லாவை போலீசார் கைது செய்தனர். தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
சாலையோரம்: அந்த பழங்குடி நபர், சாலையோரம் அமைதியாகத்தான் உட்கார்ந்துள்ளார்.. மதுபோதையில், சிகரெட் பிடித்தப்படியே இருந்திருக்கிறார்.. இத்தனைக்கும் அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் என்கிறார்கள்.. இதையெல்லாம் கேள்விப்பட்டு பொதுமக்கள் கொந்தளித்து போயுள்ளனர்.. அந்தவகையில், பிரபல நடிகையும், சமூக ஆர்வலருமான நடிகை கஸ்தூரியும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்...
இது சம்பந்தமாக ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.. அதில், "நாய்கள் கூட இப்படி ஒரு காரியத்தை செய்யாது... இந்த நோயுற்ற பிரவேஷ் சுக்லா, பாஜக மத்தியப்பிரதேச எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவின் நெருங்கிய உதவியாளர் என்று சொல்கிறார்கள்.. இந்த மனிதாபிமானமற்றவர் உடனடியாகவும், உறுதியாகவும் தண்டிக்கப்படுவாரா? அல்லது விஷயம் மூடிமறைக்கப்பட்டுவிடுமா? என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கஸ்தூரி: பாஜக ஆதரவாளர், பாஜகவின் அபிமானி என்ற முத்திரை குத்தப்பட்டு, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருபவர் கஸ்தூரி.. எனினும், டாஸ்மாக் முதல் சட்டம்ஒழுங்கு சீர்கேடுவரை திமுக அரசின் பல்வேறு விவகாரம் கேள்விகளை எழுப்பி வருபவர்.. மற்றொருபக்கம், பாஜக தரப்பில் தவறு இருந்தால், அதையும் அவ்வப்போது தயங்காமல் சுட்டிக்காட்டியும் வருபவர்.
இப்படித்தான் செங்கோல் பிரச்சனையையும் கடுமையாக விமர்சித்திருந்தார் கஸ்தூரி.. "செங்கோலுன்னு சொன்னாலே ஓங்கோலுக்கு எரியுதே ஏன்? உயிர்போகும் பிரச்சினையை விட்டுபுட்டு இந்த புண்ணாக்கை விவாதிச்சுட்டு இருக்கோம். இதெல்லாமே தேவையில்லாத ஆணிதான். செங்கோல் உலகம் முழுக்க உண்டு. தமிழரின் பிரத்தியேக அடையாளம் இல்லை. அப்புறம் ஜனநாயகத்தில் மன்னராட்சி சின்னம் எதற்கு'' என்று நறுக்கென கேட்டிருந்தார்.
Even dogs wont do this.They say this sicko Pravesh Shukla is close aide of BJP madhyapradesh MLA Kedarnath Shukla.
— Kasturi (@KasthuriShankar) July 4, 2023
Will this inhuman be punished immediately and decisively or will the matter be hushed up ? I ask because I remember the AirIndia and TNBJP peegates.
-cont https://t.co/E3GQLyAoQP
கோரிக்கை: அந்தவகையில், இந்த மத்திய பிரதேச சம்பவத்தையும் காட்டமாக விமர்சித்து, கடுமையான வார்த்தைகளில் விளாசி உள்ளார்.. இதற்கு பலரும் திரண்டு வந்து, ஆதரவை தெரிவித்து, சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகியை, வெளியே ஜாமீனில் விட்டுவிடக்கூடாது என்ற கோரிக்கையை விடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications