கஸ்தூரி "அதை" சொன்னதுமே.. எகிறிவந்த திமுகவினர்.. ஆரியமாயை, முகூர்த்தம், பகுத்தறிவு: ஒரே பரபரப்பு போல
நடிகை கஸ்தூரி திமுகவின் சென்ட்டிமென்ட் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்
சென்னை: உதயநிதி ஸ்டாலின் நாளைய தினம் அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், நடிகை கஸ்தூரி மிக முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.. இதையடுத்து, கஸ்தூரி ட்விட்டர் பகுதியே படுபிஸியாக காணப்படுகிறது.
தமிழக அரசியலையும், சென்ட்டிமென்ட்டையும் நம்மால் பிரித்து பார்க்க முடியாது.. தனிப்பட்ட முறையில், தலைவர்களுக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் பொதுப்படையாக சென்ட்டிமென்ட் பார்ப்பது என்பது காலம் காலமாகவே நடந்து வருகிறது. இதற்கு திமுக உட்பட யாருமே விதிவிலக்கு இல்லை.
மறைந்த கருணாநிதி தேர்தல் சம்பந்தமான முக்கிய அறிவிப்பு ஏதாவது இருந்தால் திருச்சியில் சென்றுதான் பெரும்பாலும் அறிவிப்பார், முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று எதிர்தரப்பில் சொல்வார்கள்.. அதுபோலவே, தேர்தல் காலங்களில் திருச்சி ஜி கார்னர் மைதானம் திருப்புமுனையை ஏற்படுத்தும் இடமாகவும், வின்னிங் சென்டிமென்ட் இடமாகவும் கருதப்படுகிறது என்றார்கள்.

சென்ட்டிமென்ட்
அதேபோல, கடந்த 1988ம் ஆண்டு மே 30-ம் தேதி திருப்போரூர் வந்த ஜெயலலிதா, திருப்போரூர் கந்தசுவாமி கோவில் அருகேதான், வேனில் இருந்தபடியே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்... அன்றுமுதலே சென்டிமென்டாக அதே இடத்தை அதிமுகவினர் கருதி வருகின்றனர்.. கடந்த முறை தேர்தலின்போதும், அதே இடத்தைதான் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்திருந்தார் என்பதை இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. மத நம்பிக்கை உள்ளவர்கள் பொதுவாக ராகு கால நேரத்தில் நல்ல காரியங்களைத் தொடங்க மாட்டார்கள்.

சென்ட்டிமென்ட்
பல்வேறு அரசியல் கட்சிகளும், கட்சிகளின் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்பதால்தான், அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தேர்தல் சமயத்தில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.. இப்படி ஒரு செயல்பாடு, மறைந்த முதல்வர் கருணாநிதியில் இருந்து பாமகவின் அன்புமணி வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.. சில தலைவர்களுக்கு இதில், நம்பிக்கை இல்லாவிட்டாலும், வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் விருப்பத்திற்காகவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு தந்து வந்ததை மறுக்க முடியாது.. குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எந்தச் செயலையும் நல்ல நாள், நேரம் பார்த்து செய்வார். தொகுதி ஒதுக்கீடு, கூட்டணி அறிவிப்பு, வேட்பு மனு தாக்கல் என எதுவாக இருந்தாலும் அது குறிக்கப்பட்ட நல்ல நேரத்தில்தான் நடக்கும்.

சுபமுகூர்த்தம்
ஜெயலலிதா மட்டுமில்லை, கட்சியில் உள்ள அதிமுக வேட்பாளர்களாகட்டும், அல்லது இரட்டை இலைச் சின்னத்தில் நிற்கும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஆகட்டும்.. எல்லோருக்கும் இதே உத்தரவுதான் பிறப்பிப்பார். இந்நிலையில், நாளைய தினம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.. காலை 9.30 மணிக்கு ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.. உதயநிதிக்கு என்ன இலாகா என்று இதுவரை தெரியவில்லை என்றாலும், திமுக தொண்டர்கள் ஸ்வீட்டுகளை பரிமாறி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கஸ்தூரி மேடம்
இந்நிலையில், சமூக அக்கறையாளரும், துணிச்சல் நிறைந்த பேச்சாளரும், நடிகையுமான கஸ்தூரிஒரு கருத்து தெரிவித்துள்ளார்.. "டிசம்பர் 14, 2022. மிகவும் மங்களகரமான நாள், காலை 9.30 மணி சிறந்த சுப நேரம்.. அடுத்தவன் என்றால் அது ஆரியமாயை, சனாதனம் மூடநம்பிக்கை. நமக்கு என்றால் சுபயோக சுபதினம் சுபமுகூர்த்தம் எல்லாம் பார்த்து தொடங்குவதே பகுத்தறிவு" என்று பதிவிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த ட்வீட்டுக்கு பலரும் திரண்டு வந்து ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்.. ஆமாம், உண்மை, சரியாக சொன்னீர்கள் என்று கமெண்ட்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

களங்கப்படுத்திட்டாங்களா
மற்றொருபுறம் திமுகவினர் திரண்டு வந்து கஸ்தூரிக்கு பதில் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. "நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் இல்லை, ஹிந்தியை திணிப்பதை மட்டுமே எதிர்க்கிறோம்.. அதேபோல நாங்கள் ஆன்மீகத்துக்கு எதிரானவர்கள் இல்லை... ஆன்மீகம் என்னும் பெயரில் மக்களை ஏமாற்றுவதை தான் எதிர்க்கிறோம்.. உங்களுக்கு இன்னும் திராவிட மாடல் சரியா புரியல கஸ்தூரி மேடம்? ஆரியத்தின் நம்பிக்கை தான் நல்லநேரம் கெட்ட நேரம் என்று பிரித்து, இம் மனித வாழ்க்கையின் பொன்னான நேரத்தை பேதம் கற்பித்தது. நல்ல நேரம் இல்லை என்பதல்ல திராவிடம். கெட்டநேரம் இல்லை என்பதே திராவிடம்.. ஒருவேளை உதயநிதி ராகுகாலத்தில் பதவியேற்றால், அய்யய்யோ, இந்து மதத்தையே களங்கப்படுத்திட்டாங்களே என்று நீங்கள் சொல்ல மாட்டீங்களா" என்று பதில் கேள்வியை கேட்டு வருகிறார்கள் கஸ்தூரியிடம்..!!












Click it and Unblock the Notifications