"ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்".. என்ன ராசா இதெல்லாம்.. எகிறிய கஸ்தூரி
ஆ ராசாவின் பேச்சுக்கு நடிகை கஸ்தூரி காட்டமான ட்வீட் போட்டு கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "சூத்திரர்கள் இழிவானவர்கள் என்று இந்து மதம் சொல்லவில்லை. இந்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு" என்று திமுக எம்பி ஆ.ராசாவை கேட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.. இதனிடையே, தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக விஷத்தை கக்கி வருகிறார் ஆ.ராசா என்று கண்டனங்கள் பெருகி வருகின்றன.
திமுக எம்பியும் மூத்த தலைவருமான ஆ.ராசா பேசிய பேச்சு, இணையத்தில் விவாதங்களாக வெடித்து கிளம்பி உள்ளன.. மற்றொருபுறம், ஏகப்பட்ட ஆத்திரத்தில் பாஜக தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகிறது.
ஆ.ராசா பேசிய வீடியோ ஒன்றை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்..
ராசா பேசும்போது, "உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது? நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், பெர்சியனாக இல்லாமல் இருந்தால் நீ ஹிந்துவாக தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? ஹிந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபசாரியின் மகன். ஹிந்துவாக இருக்கும்வரை நீ பஞ்சவன், ஹிந்துவாக இருக்கும்வரை நீ தீண்டத்தகாதவன்.

விபச்சாரியின் மகன்
எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத் தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திமுக.,வும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.. தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்" என்று ராசா ஆவேசமாக அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

நிறம் மாறுமோ?
இதை பாஜக தரப்பு கேள்வி எழுப்பி வருகிறது.. "திமுகவை சேர்ந்த எம்பி ராசா, ஒரு சமூகத்தை தவறாக பேசி, மற்றவர்களை திருப்திப்படுவதற்காக பேசி கொண்டிருக்கிறார். தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இத்தகைய தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று அண்ணாமலை வெடித்து பொங்கினார். மத துவேஷத்தை யார் செய்தாலும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆ.ராசாவை கைது செய்து சிறையிலடைக்க உரிய நடவடிக்கை எடுத்து தான் சொன்னதை, தன் கடமையை செய்வாரா? என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை கஸ்தூரி
அந்தவகையில், நடிகையும், அரசியல் விமர்சகரும், சமூகநலனில் அக்கறை கொண்டவருமான கஸ்தூரியும், இதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.. இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், "சூத்திரர்கள் இழிவானவர்கள் என்று இந்து மதம் சொல்லவில்லை. இந்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு" என்று காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.

கஸ்தூரிக்கு கேள்வி
கஸ்தூரி இப்படி பதிவிட்டதுமே, ஏராளமான திராவிட கட்சியினர் திரண்டு வந்துவிட்டனர்.. சூத்திரர்கள் இழிவானவர்கள் என்று இந்து மதம் சொல்லவில்லை என்றால் நடராஜர் கோவிலில் அந்த பெண்ணின் கையை தட்டிவிட்டது எதற்காக? தமிழிசை அவர்களுக்கு பொன்னாடையை தூக்கி எறிந்தது எதற்காக? என்று கஸ்தூரியிடம் ட்விட்டர்வாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்... "சரி, சூத்திரர்கள் இழிவானவர்கள் அல்ல என்று சொல்லும் நீங்கள் ஒரு முறை உங்களை நீங்களே சொல்லி கொள்ளுங்கள் பார்க்கலாம், கஸ்தூரி சங்கர் ஒரு சூத்திரி தான் என்று" என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

ஹிந்துக்கள்
இதனிடையே, ஆ.ராசா பேசிய பேச்சுக்கு எதிர்ப்புகளும் இணையத்தில் வலுவாகி உள்ளன.. ஆ.ராசா இப்படி ஹிந்துக்கள் மீது தொடர்ந்து வன்மத்தை கக்குவது சரியா? அவரது பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்?' வழக்கம்போல், ஸ்டாலின் இதற்கும் மவுனம் காக்கப் போகிறாரா? ஹிந்துக்களின் ஓட்டு மட்டும் எதிர்பார்க்கும் திமுக, இந்துக்கள் மீது அவதூறு பரப்புபவர்களை கண்டிப்பதே இல்லையே ஏன்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஹிந்துக்கள்
இந்நிலையில், தன்னுடைய பேச்சு நாலாபக்கமும் கொந்தளித்து வரும் நிலையில், ஆ.ராசா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.. அதில், ‛சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி - வேலைவாய்ப்பு - கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் - பரப்புரையாலும் 90 சதவீத ஹிந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி ஹிந்துக்களுக்கு எதிரியாகும்!' என பதிவிட்டுள்ளார்... இந்த பதிவை பார்த்துவிட்டு, இதற்கும் பாஜக மற்றும் இந்துஆதரவாளர்கள் திரண்டு பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
தேர்தலுக்கு 10 நாள் கூட இல்லை.. அமித் ஷா கைகளுக்கு போன முக்கியமான ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் மம்தா












Click it and Unblock the Notifications